Eeramana Rojave Serial:வாசலிலே கோலம் போட்டு வச்சதென்ன வச்சதென்ன?
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் கிராமத்து வாழ்க்கை வாழும் இரண்டு குடும்பங்கள் பற்றிய எளிமையான கதை. இரு குடும்பங்களும் சம்பந்தி முறையில் தொடர்பு.
கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளிப்படையாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. குடும்பத்தில் சண்டை என்றாலும் வெளிப்படையாக இருப்பார்கள் என்பதை இந்த சீரியல் காண்பிக்கிறது.
என்றாலும், வன்முறையும் இந்த சீரியலில் இருப்பது ஏற்க தக்கதாக இல்லை. ஒருவேளை இப்படி இருந்தாலும் மறுப்பதற்கில்லை. காரணம் எல்லா இடங்களிலும் எல்லாரும் இருப்பார்கள் என்பதுதானே உண்மை.

கல்யாணம் மலர்
மலர் விரும்பியது வெற்றியின் அண்ணனை. அவனுடன் கல்யாணமும் நடக்க இருக்கும் நேரத்தில் மலரின் ரவுடி முறைப் பையனால் மாப்பிள்ளை குறிவைக்கப் படுகிறான். அதற்கு ஏற்ற மாதிரி, மலருக்கு மோதிரம் வாங்க முதல் நாள் இரவு தம்பி வெற்றியுடன் நகைக் கடைக்கு போயே ஆக வேண்டும் என்று, கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே வண்டியில் இருவரும் போகிறார்கள். அப்படி போக கூடாது என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

லாரி ஏற்றி
இதை தெரிந்துகொண்ட மலரின் முறை மாமன், லாரியை ஏற்றி வெற்றி மற்றும் அவனது அண்ணனை கொன்றுவிட நினைத்து, அதே போல செய்துவிடுகிறான்.இதில் அப்பாவியாய் உயிரை விட்டது மாப்பிள்ளை. கல்யாண மேடையில் மலர் இருக்க, இங்கு மாப்பிள்ளை இறந்துவிட, தம்பி வெற்றிக்கு பெரியவர்கள்சேர்ந்து கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

மலரை மாமியாருக்கு
மலரை கல்யாணம் செய்துக்க இருந்த தனது மகன் இறப்புக்கு ராசி இல்லாத மலர்தான் காரணம் என்று, மாமியாருக்கு மருமகள் மீது வெறுப்பு வந்துருது. அண்ணன் ஆசை ஆசையாய் காதலித்த பெண்ணுடன் தம்பி வாழ்வது என்பது உடனடியாக சாத்திய படவில்லை.கல்யாணமாகி ஒரு வருடம் ஆகும் தருணத்தில், இருவருக்குள்ளும் காதல் வருகிறது.

தம்பி புகழ்
மலரின் தங்கை அகிலாவின் கல்யாணமும் முறை மாமன் செய்த சதியால் நின்று போக, உடனடியாக மலரின் கொழுந்தன் புகழுக்கு பெரியவர்கள் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இப்போது மருமகளின் தங்கையையும் மாமியாருக்கு பிடிக்கவில்லை. வெறுப்பில் இருக்கும் சமயத்தில் வரதட்சணையில் ஏமாற்றியது, சம்பந்தி வீட்டுக்கு புருஷன் தன்னிடம் கேட்காமல் இருபது லட்சம் ரூபாய் பணம் குடுத்தது என்று ஏகப்பட்ட கோபம் பொத்துக் கொண்டு வர மாமியார் சம்பந்தி வீட்டுக்கு சென்று சண்டையிட்டு, மருமகள்களை வாழா வெட்டியாக அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.

பிரிவில் மலர்
அப்போதுதான் வாழ ஆரம்பிக்கலாம் என்று காதலில் இருந்த வெற்றியும், மலரும் பிரித்து வைக்கப்படுகிறார்கள். மலரை பார்க்க ஆவலாக சென்றால், அவளோ ஒதுங்கி போகிறாள். இவன் வேதனை தாங்காமால் குடிக்க, குடிக்க விடாதீர்கள் என்று, மாமனாரின் அப்பாவுக்கு போன் செய்து கேட்டுக்கறா மலர்.அப்போது வெற்றிக்கு மலர் மீது இன்னும் காதல் கூடுகிறது.

அழகான கோலம்
மலரைப் பார்க்க இரவே அவள் வீட்டுக்கு வெளியில் வந்து படுத்து இருந்துவிட்டு, காலையில் அழகாக கோலம் போட்டு வச்சு காத்திருக்கான். பெண்கள் கோலம் போடுவதை பார்க்க ஆசைப்பட்ட ஆண்கள் காத்திருப்பதை பார்த்து இருக்கிறோம் .இங்கு கோலம் போட்டுவிட்டு காத்திருக்கான் வெற்றி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications