Eeramana Rojave Serial: பெண்களைப் பற்றித்தான் தெரியுமே...என்ன நகை என்ன டிசைன்...!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நல்லதொரு குடும்பம் என்றால் என்னென்ன எதெது நடக்குமோ அத்தனையும் நடக்கிறது. அதோடு கூடவே கெட்ட எண்ணம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புகுந்த வீட்டில் நாத்தனார், மாமியார் என்று எல்லா பெண்களுக்குமே நன்றாக வாய்ப்பதில்லை என்கிற காலம் இப்போது அவ்வளவாக இல்லை என்றாலும், சீரியலில் இதை எல்லாம் இன்னும் இழுத்துக் கொண்டு திரியாவிட்டால் கதை பின்னுவது எப்படி.
இப்படித்தான் ஒரு கட்டாயத்துக்காக ஈரமான ரோஜாவே சீரியலிலும் மாமியார் நாத்தனார் என்று கொஞ்சம் பிரச்சனைகளுள்ள வீடு.இதில் வாக்கப்பட்டு போகின்றனர் மலர், அகிலா என்கிற இரண்டு அக்கா தங்கைகளும், இங்கு வெற்றி, புகழ் என்கிற அண்ணன் தம்பிகளுக்கு வாக்கப்பட்டு வருகிறார்கள்.

மறுவீடு அழைப்பு
வெற்றிக்கும் மலருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அகிலாவுக்கும், புகழுக்கும் எதிர்பாராத விதமாக விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்து விடுகிறது. இந்த நிலையில் மலர், அகிலாவின் அப்பா பெரும் கடன் பிரச்சனையில் மாட்டிகிட்டு விழி பிதுங்கி நிற்கிறார். பெண்களை மறுவீட்டுக்கு அழைத்து நகை செய்து போட முடியாதபடி பிரச்சனை.

குத்தகைக்கு நிலத்தை
குத்தகைக்கு தோப்பை ஏலம் எடுத்ததில் மலர், அகிலாவின் அப்பாவுக்கு ஏகத்துக்கும் கடன் எகிறிவிடுகிறது. இதை அறிந்த சம்பந்தி நாட்டரசன், அத்தனை லட்சம் பணத்தையும் கொடுத்து உதவி செய்கிறார். இது ஒரு பெரிய அபூர்வம். இது மாதிரி பெரிய மனிதர்களும், சம்பவங்களும் நடப்பது என்பது அரிதுதான். இந்த நிலையில், இரு பெண்களையும் ஒன்றாக வரவேண்டும் என்று சின்ன பெண்,மாப்பிள்ளையை மறுவீட்டுக்கு அழைக்கிறார்கள்.

கழுத்து செயின்
மறுவீட்டுக்கு அழைப்பு விடுக்கும் மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட், கழுத்துக்கு செயின் போட்டு அனுப்ப வேண்டும். அதற்கு கூட பணமில்லை.உடனே வெற்றியின் அப்பா நாட்டரசன் சொல்றார், தம்பி நீ போகும் போது உனக்கு அவங்கப் போட்ட பிரேஸ்லெட், செயின் ரெண்டையும் எடுத்துக்கிட்டு போயி, அதை அப்படியே புகழுக்கு போட சொல்லுன்னு சொல்லி அனுப்பறாங்க. அதே மாதிரி வெற்றியும் எடுத்துச் சென்று தனது மாமனாரிடம் அப்பா சொன்னது போலவே சொல்லி அவைகளை கொடுக்கிறான்.

அக்கா தங்கை
வீட்டில் அம்மா,அக்கா, தங்கை எல்லாரும் மறு வீட்டுக்கு போனவங்க என்னதான் கொண்டு வராங்க பார்க்கலாம்னு வம்பிழுக்க காத்திருக்கையில், பிரேஸ்லெட். கழுத்து செயின் ரெண்டையும் பார்த்துட்டு, வெற்றி என்னடா இது உனக்கு போட்டது மாதிரியே அப்படியே அச்சு அசலா இருக்குதுன்னு கேட்கறாங்க. அதுக்கு வெற்றி, ரெண்டு பேருக்கும் ஒரே டிஸைனா இருக்கட்டும்னு பார்த்து வாங்கினங்களாம்.. அதை சொன்னாங்கம்மான்னு சொல்லி சமாளிக்கிறான்.
இந்த பக்கம் வந்து, அப்பா இந்த பொம்பளைங்களை ஏமாத்தவே முடியாது போல இருக்குப்பா... அப்படியே கரெக்ட்டா ஞாபகம் வச்சிருந்து சொல்றங்கன்னு சொல்றான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications