கண்ணம்மா வாயில் முட்டை போண்டா.. இதுல வெரி நைஸ் வேற!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் மறுபடியும் கண்ணம்மா கையில் பேக்கை கொடுத்து நடக்க விட்டுள்ளனர். அவரும் சிந்திய மூக்கும் அழுத கண்ணுமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
திடீரென்று சில சீரியல்கள் மற்றும் கேரக்டர்கள் மீம்ஸ் கிரியேட்டர்களால் பேமஸ் ஆகிவிடுகின்றனர். தற்போது அந்த மாதிரிதான் பாரதிகண்ணம்மா சீரியலும் மீம்ஸ் கிரியேட்டர்ளால்தான் இந்த அளவிற்கு பாப்புலராகி இருக்கிறது என்ற அளவில்தான் இதோட வளர்ச்சியில் திடீரென்று கூடியிருக்கிறது
ஒரு எபிசோடில் கண்ணம்மா நடந்ததை வைத்து ட்ரோல் பண்ணி அவரை ஐபிஎல் மேட்ச் முதல் நிலா வரைக்கும் கூட்டிகிட்டு போய் விட்டார்கள் இந்த மீம்ஸ் கிரியேட்டார்கள்.

நடந்து வாம்மா கண்ணம்மா
அதுவும் டெய்லி அவரை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார், பிக்பாஸ் வீட்டிற்குள் நீதி கேட்டு வந்திருக்கிறார், கைலாசத்துக்கு சென்றுவிட்டார் என்று விதவிதமாக மீம்ஸ்களை போட்டுதான் கண்ணம்மாவை இந்த சீரியலில் ரொம்பவே பாப்புலர் ஆக்கிவிட்டார்கள். நீங்க என்ன எங்களை கலாய்க்கிறது நாங்களே எங்களை நன்றாக கலாய்ச்சு விடுவோம் என்று அந்த சீரியலில் நடிப்பவர்களும் கலாய்க்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் அந்த சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியனும் நன்றாக கம்பெனி கொடுத்து கலாய்க்கிறார்.

ஜாஸ்தி சேட்டை
சூட்டிங் இல்லாத நேரத்தில் அடிக்கடி இவர்கள் செய்யும் சேட்டைகளும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வைரலாகி வரும் . அந்த மாதிரிதான் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவும் அந்த சீரியலில் அவருக்கு காவல்காரர் என்ன தாண்டி தான் உன்னை தொடணும் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கும் துர்கா கேரக்டரில் நடிக்கும் பிரவீன் தேவசகாயம் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர் இந்த சீரியலில் கெட்டவர்களை கொல்லும் ஒரு நல்லவராக நடித்து கொண்டிருக்கிறார்.

திட்டி தீர்த்தாச்சு
முதலில் கண்ணம்மாவை தப்பாக புரிந்து கொண்டு இவரை கொலை பண்ணுவதற்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த துர்கா தற்போது அவரை நன்றாக புரிந்து கொண்டு அவருக்கு காவல்காரர் போல அவரை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார் . இந்த சீரியலில் இவரை பலர் முதலில் திட்டி தீர்த்தனர். ஆனால் தற்போது இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது .

சரியா பயன்படுத்தலையே
இவருடைய திறமையை நன்றாக பயன்படுத்தவில்லை என்று பல ரசிகர்களும் கமெண்ட்டுகளை யும் போட்டு வருகிறார்கள். ஆனாலும் இவரும் கண்ணம்மாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் தற்போது வைரலாக பரவி வருகிறது . ஒரு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்து இவர்கள் இருவரும் பேட்டி எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பது போல வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் துர்கா பல சினிமாக்களையும் தாண்டி பல மைல் தூரங்களை கடந்து நடந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவிடம் ஒரு இண்டர்வியூ போல எடுத்திருக்கிறார் சூட்டிங் ஸ்பாட்டில் .

கண்ணம்மாவுக்கு முட்டை போண்டா
நீங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து இந்த ஊர் மக்கள் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் உணவு தந்திருக்கிறார்கள். அது நாமக்கல் முட்டை கமிட்டியில் இருந்து நீங்கள் நடப்பதற்காக தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்கு முட்டை போண்டா தந்திருக்கிறார்கள் .எப்படி இருக்கிறது இந்த முட்டை போண்டா நீங்க நடப்பதற்காக போஷாக்கையும் கொடுக்கிறதா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

வெரி நைஸ்ண்ணா!
அதற்கு கண்ணம்மா அருமை வெரி நைஸ் எக்ஸ்டானரி என்று முட்டை போண்டாவை ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு கூறியிருக்கிறார். அது போதாதென்று முட்டை போண்டா ஸ் மை சீக்ரெட் ஆப் எனர்ஜி என்று கூறியிருக்கிறார் . இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சீரியல்ல ஒரே அழுகையா காமிச்சுக்கிட்டு சீரியல் முடித்ததும் இப்படிதான் ஜாலியாக பண்ணிக்கிட்டு இருக்கிறீர்களா வெகுளியாக கேட்டு வருகிறார்கள்.

கண்ணம்மா சீக்ரெட்
இந்த வீடியோவை வைத்து ம் கண்ணம்மா மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கண்ணம்மாவின் சிக்ரெட் வெளியே தெரிந்துவிட்டது என்று கலாய்த்து வருகிறார்கள். சிலர் நல்லா சாப்பிடுங்க அப்பதான் அந்த பேக்கை தூக்கிகிட்டு நடக்க முடியும் இன்னும் எவ்வளவு தூரத்துக்கு நடக்க வேண்டியது இருக்கோ தெரியல போற போக்க பார்த்தா எந்த வருஷம் புல்லா உங்கள நடக்க விட்டுருவாங்க போல என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications