Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூர்யாவுக்கு "செய்வினை" வைத்த 2 நடிகர்கள்.. ஏழரை சனி ஆரம்பம்? ஜோதிகாவின் "சண்டியாகம்".. பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு 2 பெரிய நடிகர்கள் செய்வினை வைத்துவிட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்க, சூர்யா - ஜோதிகா இருவருமே விரைவில் 'சண்டியாகம்' செய்ய போவதாக, நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

சூர்யா ஜோதிகா இருவரும் கோவில் கோவிலாக சுற்றுவது ஏன்? சூர்யாவுக்கு செய்வினை வைத்துவிட்டதாக சொல்கிறார்களே? அது உண்மையா? என்பது குறித்தெல்லாம் KING 24x7 என்ற சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். அதன் சுருக்கம்தான் இது:

television surya jyothika

"சூர்யாவுக்கு 3 வருடங்களாக எந்த படமும் சரியாக போகவில்லை.. "எதற்கும் துணிந்தவன்" ஆக்‌ஷன் படம் அட்டர் ஃபிளாப்.. "கங்குவா" படம், சிறுத்தை சிவாவின் மோசமான திரைக்கதையால் வெற்றி பெறவில்லை.. 400 கோடி ரூபாய் செலவானதாக ஞானவேல் ராஜா கூறியிருந்தார்..

விமர்சனங்கள்: கங்குவா நல்லாயில்லை என்று அனைத்து விமர்சனங்களும் சொல்லிவிட்டன. அதனால் வசூலை பெற வாய்ப்பில்லை. படம் சரியில்லை என்பதுடன், அதற்கான விமர்சனங்கள் அனைத்துமே ஒத்துப்போனதால், படத்தின் வசூலை பெறவில்லை என்பதே உண்மை.

சூர்யாவுக்கு ஏழாரை சனி தொடங்கிவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.. அதேபோல, சூர்யாவுக்கு 2 பெரிய நடிகர்கள் செய்வினை வைத்துவிட்டதாகவும், சிலர் சொல்கிறார்கள்.. சில அரசியல் கட்சிகளும் சூர்யாவுக்கு எதிராக சதி செய்வதாக படத்தின் தயாரிப்பாளரும், படத்தின் புரமோட்டருமான தனஞ்செயன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதையடுத்தே, சூர்யாவும், ஜோதிகாவும் "சண்டியாகம்" செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முன்னதாக, சிறுத்தை சிவாவுடன் சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்கு சென்று வழிபட்டார் சூர்யா.. ரோப் கார் மூலமாக சோளிங்கர் மலைக்கு சென்ற சூர்யா, நரசிம்மரை பிரார்த்தனை செய்தார். அப்போது சூர்யா முகம் களையிழந்து காணப்பட்டது. முகத்தில் தாடி இருந்தது. வழக்கமாக இருக்கும் புன்னகை அவரிடத்தில் காணாமல் போயிருந்தது.

மூகாம்பிகை கோயில்: அதற்கு பிறகு, சூர்யா, ஜோதிகா இருவரும் கர்நாடக மாநிலத்திலுள்ள மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்கள். இந்த கோயிலுக்கு ஏராளமானோர் செல்வதற்கு என்ன காரணமென்றால், முன்பிருந்த வாழ்க்கையிலிருந்து பின்தங்கிவிட்டால், முன்பிருந்த செல்வத்தை இழந்துவிட்டால், இந்த கோயிலுக்கு செல்வார்கள். அதாவது இழந்ததை மீட்டுத்தருவதற்காக இக்கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். அந்தவகையில், சூர்யா - ஜோதிகா சென்றுள்ளார்கள்.

ஆனால், திருப்பதி கோயிலுக்கு தனியாக சென்று வணங்கினார் ஜோதிகா.. ஏனென்றால், சூர்யாவையும் அழைத்து செல்ல வேண்டுமானால், அவரது வீட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும்.. மாமனார், மாமியாரை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், அவர் மட்டும் தனியாக திருப்பதி சென்றார்.. பிறப்பால் இஸ்லாமியர் ஜோதிகா. எப்போதுமே இந்துக்கள் அல்லாதவர்கள் திருப்பதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒருவேளை ஜோதிகா இந்து மதத்துக்கு மாறிவிட்டாரா தெரியவில்லை.. சூர்யாவை இந்து முறைப்படி திருமணம் செய்ததால் அந்த அடிப்படையில், இப்போது இந்துதான் என்று சொல்லி, அவரை திருப்பதியில் அனுமதித்திருக்கலாம்.

சண்டியாகம்: விரைவில் சண்டியாகம் செய்ய போகிறார்கள். உங்களுக்கு யாராவது செய்வினை செய்துவிட்டால், எதிர்ப்புகளை முறியடிக்க செய்வதுதான் இந்த சண்டியாகம். ஆனால், இதனை சூர்யாவும், ஜோதிகாவும் கோவையில் நடத்த போகிறார்களா? தங்கள் பங்களாவில் நடத்த போகிறார்களா? மும்பையில் செய்ய போகிறார்களா? தெரியவில்லை..

அநேகமாக தமிழகத்தில்தான் இருவரும் இந்த சண்டியாகத்தை நடத்துவார்கள் என்றே தெரிகிறது. எப்படியோ ஏழரை சனி, சூர்யா-ஜோதிகாவைவிட்டு நீங்கினால் சரிதான்" என்று தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

முன்னதாக ஒரு பேட்டியில் சிவக்குமார் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்போது, "என்னைக்கு ஜோதிகாவை காதலிப்பதாக சூர்யா சொன்னாரோ, அன்னைக்கே சிவக்குமாருக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது.. ஜோதிகா வேண்டாம், வேண்டாம் என்று தலையிலேயே அடித்து கொண்டார்.. ஆனால், ஜோதிகாவை கல்யாணம் செய்தே தீருவேன் என்றார் சூர்யா.

சிவக்குமார்: திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று ஜோதிகாவிடம் சொன்னார் சிவக்குமார்.. இந்த உத்தரவை மீறி "36 வயதினிலே" படத்தின் கதையை கேட்டு, சிவக்குமாரை சம்மதிக்க வைத்துவிட்டார் ஜோதிகா.. அந்த படத்தில் ஜோடி இல்லை, டூயட்டும் இல்லை.

ஆனால், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. மறுபடியும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் ஜோதிகா. தலைவலி: பிறகு ஜோதிகா நிரந்தர தலைவலியாகிவிட்டார் சிவக்குமாருக்கு.. சூர்யா, கார்த்திக்காக ஒரு வீட்டை 6 மாதத்தில் கட்டி முடித்தார் சிவக்குமார். ஆனால், அந்த வீட்டில் ஜோதிகா குடியிருக்கவில்லை" என்றெல்லாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+