விஷாலின் நாக்கில் ஏழரை சனி.. பலித்த வார்த்தைகள்.. பழைய மாதிரி மீண்டு வந்துடுவார்: பிரபலம் நம்பிக்கை
சென்னை: விஷாலுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் மன உளைச்சலில் உள்ளார்.. எனினும், இதெல்லாம் தற்காலிகமானதுதான்.. தகுந்த டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொண்டால் எல்லாமே சரியாகிவிடும், மீண்டும் திரையில் தோன்றி பழைய மாதிரியே விஷால் வரணும்" என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
"விஷால் ஏற்கனவே மதுபழக்கம் உள்ளவர்.. ஏகப்பட்ட கடன் தொல்லைகள் இருக்கின்றன.. இதன்காரணமாகவே நிறையவே இப்போது மனஉளைச்சலில் உள்ளார்.. தன்னுடைய படம் எந்த அளவுக்கு வசூல் ஆகிறது? எந்த அளவுக்கு ரீச் ஆகிறது? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Metro mail என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "விஷால் ஏற்கனவே மதுபழக்கம் உள்ளவர்.. ஏகப்பட்ட கடன் தொல்லைகள் இருக்கின்றன.. இதன்காரணமாகவே நிறையவே இப்போது மனஉளைச்சலில் உள்ளார்.. தன்னுடைய படம் எந்த அளவுக்கு வசூல் ஆகிறது? எந்த அளவுக்கு ரீச் ஆகிறது? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மன உளைச்சல்: படம் தயாரிக்கும்போது நிச்சயம் மன உளைச்சல் வரும்.. ஏகப்பட்ட கடன் தொல்லைகள் இருக்கிறது.. எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் ஓடல.. கண்டிப்பாக மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். வாழ்க்கையிலும் இன்னும் செட்டில் ஆகல.. 3 முறை திருமண நிச்சயதார்த்தம் நடந்து, பிரேக் அப் ஆகிவிட்டதும்கூட, இதுக்கெல்லாம் ஒரு காரணமாகும்.
உடல்நலம் சரியில்லாதபோது, அரசியலுக்குள் அவரால் எப்படி ஈடுபட முடியும்? கட்சி எப்படி ஆரம்பிப்பார்? ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்வது வரை சென்று, அந்த வேட்புமனுவே செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. வேட்புமனுவையே சரியாக தாக்கல் செய்யாதவர், எப்படி கட்சியில் ஈடுபட முடியும்?
பழைய கடன்காரர்கள்: அதற்காக விஷால், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று சொல்ல முடியாது.. ஆனால் மன உளைச்சலில் உள்ளார். அவரால் படம் தயாரிக்க முடியாது. அவரால் நடிக்கவும் முடியாது. நடிக்க ஆரம்பித்தால், பழைய கடன்காரர்கள் எல்லாம் வரிசையில் வந்து நிற்பார்கள்.. படம் தயாரிக்க முடியாத நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.
எனினும், இதெல்லாம் தற்காலிகமானதுதான்.. தகுந்த டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொண்டால் அவரது உடல்நிலை சரியாகிவிடும் என்றே நினைக்கிறேன். விஷால் மீண்டும் திரையில் தோன்றி பழைய மாதிரியே வரணும் என்பது என்னுடைய ஆசை.
தில்லுமுல்லுகள்: ஏனென்றால், சொந்த படம் எடுக்கும் அளவுக்கு திராணி கொண்டவர், நடிகர் சங்கத்திலும் கோளாறு செய்துவிட்டார், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் கோளாறு செய்துவிட்டார், ஏகப்பட்ட விஷயங்கள், தில்லுமுல்லுகள், கடன்கள், இப்படியிருக்கும்போது மன உளைச்சல்கள் வரத்தான் செய்யும்.. மன உளைச்சலை போக்க மதுவுக்கு அடிமையானால் என்னாகும்? ஏற்கனவே மதுவுக்கு அடிமையாகதான் இருந்தார்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நான் நல்ல கேள்வி ஒன்று அவரிடம் கேட்டேன்.. அதற்கு விஷால், "நீங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டேன்" என்று சொன்னார். அப்போதே அவரது மன உளைச்சல் எனக்கு தெரிந்துவிட்டது. மறுபடியும் அவருக்கு மனஉளைச்சலை தரக்கூடாது என்பதற்காகவே நேற்றைய செய்தியாளர் கூட்டத்துக்கும் நான் போகாமல் கேமராமேனை மட்டும் அனுப்பி வைத்தேன்.
கோபமில்லை: ஆனால் எனக்கு அவர்மீது துளிகூட கோபம் இல்லை. என்னைவிட 30 வயது சிறியவர்.. இளமை வேகம் அப்படி அவர் பேசியிருக்கலாம்.. நான் அவருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஒரு பத்திரிகையாளராக என் கடமையை நான் செய்தேன்.
நடிகர் சங்கத்திலும், ஏராளமான பிரச்சனைகள் இன்னமும் தொடர்கிறது.. அதெல்லாம் முடிவுக்கு வராதால்தான் இப்படியான நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். சங்கத்தில் ஏகப்பட்ட கடன் இருக்கிறது.. இந்த கடனை தீர்க்க யார் இவருக்காக முன்வருவார்கள்? கிரிக்கெட் நடத்தியதிலும் ஊழல்.. நடிகர் சங்க அறக்கட்டளையில் இருந்த பணத்தையும் காலி பண்ணிட்டாரு. தயாரிப்பாளர் சங்கத்திலும் பணத்தை காலி செய்துவிட்டார். தயாரிப்பாளர் சங்கம் இன்று சீண்டுவாரற்ற நிலைமையில் இருக்க காரணமே விஷால்தான்
திருமணம்: நடிகர் சங்கம் கட்டிடம் கட்டியபிறகுதான் தன்னுடைய திருமணம் என்றார்.. அவரது வார்த்தைகளே அவருக்கு தடங்கலாகிவிட்டது. எப்போதுமே வாய் வார்த்தை பலிக்கும் என்பார்கள்.. கடைசியில் கட்டிடமும் கட்டவில்லை, திருமணமும் நடக்கவில்லை..
சினிமா என்பது குறுகிய வட்டம்.. லாபம் வரவில்லை என்றால், உடனே விலகிடணும்.. வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பிச்சிடணும்.. ஆனால் இவரோ, தன்னை வைத்து பலரும் சம்பாதிக்கிறார்களே, நாமும் சம்பாதிக்கலாம் என்பதற்காகவே சொந்தப்படம் தயாரித்தார்.. அதுதான் ஏழரை சனியாகிவிட்டது.
ஏழரை சனி: நாக்கிலும் ஏழரை சனியாகிவிட்டது. ஏனென்றால், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி, விஷாலுக்கு நல்ல நண்பர்.. வாரம் ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்பவர்கள். ஆனால், விழா மேடையில் கன்னாபின்னாவென்று பேசி, அந்த நட்பு போய்விட்டது. எப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நட்பு போனதோ, அப்போதே இன்டஸ்ட்ரியே போச்சு என்றுதானே அர்த்தம்? என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications