நெப்போலியன் மகன் தாலி கட்டும் போது நடந்த “அந்த” சம்பவம்.. கண்கலங்கிய தந்தை.. நெகிழ வைத்த மருமகள்
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் இன்று நடைபெற்று இருக்கும் நிலையில் தாலி கட்டும் நேரத்தில் நெப்போலியன் கண் கலங்கி இருக்கிறார். ஏற்கனவே பல பேட்டிகளில் தன்னுடைய மகனை திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வைப்பது தான் தன்னுடைய ஆசை என்று நெப்போலியன் கூறியிருந்தார், அது இன்று நிறைவேறி இருக்கிறது.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு இன்று ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றிருக்கிறது. தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரால் எழுந்து நடக்க முடியாது. வீல்சேர் உதவியோடு தான் அவர் தன்னுடைய வேலைகளை செய்து கொள்கிறார்.

தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பலருடைய நிலை இதுபோல இருந்தாலும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு வாழ்க்கைத் துணை முக்கியம் என்று புரிந்து கொண்டு தன்னுடைய மகனுக்காக வரன் பார்த்து இருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பெண்ணோடு எங்கேஜ்மென்ட் செய்து வைத்திருந்தார்.
நெப்போலியன் மகன் தனுஷும், மணப்பெண் அக்ஷயாவும் செல்ஃபோனில் பேசி பழகி இருவருக்கும் மனம் ஒத்துப்போன பிறகு இரண்டு குடும்பத்தினரும் இவர்களுடைய திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஜப்பானில் திருமணம் பிரபாண்டமாக நடைபெற்றது.
திருமணத்தின் போது மாப்பிள்ளை தனுஷ் வீல்சேரில் அமர்ந்திருக்கும் போது அவர் பக்கத்திலேயே மணப்பெண் அக்ஷயா நின்று கொண்டிருந்தார். தாலி கட்டும் நேரத்தில் தனுஷால் கைகளை தூக்கி தாலி கட்ட முடியாது என்பதால் அவருடைய அம்மா உதவி செய்திருந்தார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த உறவினர்கள் நண்பர்கள் பூக்களை தூவி மணமக்களை ஆசீர்வாதம் செய்ததும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நெப்போலியன் கண்கலங்கி அழுதுவிட்டார். அப்போது நெப்போலியனின் மருமகள் அக்ஷயா சிரித்த முகமாக கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் சொல்லியிருக்கிறார்.
தனுஷால் கைகளை முழுமையாக தூக்கி மாலை போட முடியாது என்பதால் தலை குனிந்து அக்ஷயா மாலையை வாங்கிக் கொண்டது, பிறகு மேடையிலேயே தனுஷின் மாலையை சரி செய்தது போன்ற செயல்கள் பார்ப்போரை நெகிழ வைத்திருக்கிறது. நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயாவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications