ஹார்ஸ் ரைடிங் முதல் ஸ்கேட்டிங் வரை.. இத்தனை திறமைகளா.. கின்னஸ் சாதனை படைத்த எதிர்நீச்சல் நடிகை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் மோனிஷா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். அது போல் அவருடன் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீரியலை பல்வேறு பிரபலங்கள் பார்த்து வருகிறார்கள். குறிப்பாக விஜய்யின் தாய் ஷோபா இந்த சீரியலை தாம் கட்டாயம் பார்த்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.

அது போல் சுப வீரபாண்டியனும் எதிர்நீச்சல் சீரியலை விடாமல் பார்ப்பேன் என தெரிவித்திருந்தார். டிஆர்பி ரேட்டிங்கிலும் இது நம்பர் ஒன்னாக இருக்கிறது. கோலங்கள் சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கியுள்ளார்.
இந்த சீரியலில் நடித்து வரும் ஆதி குணசேகரனுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள். சீரியலில் ஆதி குணசேகரன்- ஈஸ்வரி தம்பதியின் மகளாக நடித்து வருபவர் தர்ஷினி. இவரைத்தான் முதலில் கரிகாலனுக்கு திருமணம் செய்யவிருந்து பின்னர் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆதிரைக்கு திருமணம் செய்து வைத்தார் குணசேகரன்.
இந்த நடிகை மோனிஷா, கோகுல் நடத்தும் யூனிக் டேலண்ட் அகாதெமி என்ற பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருடைய இரட்டை சகோதரியும் கின்னஸ் சாதனை பெற்றவர். இந்தியாவிலேயே கின்னஸ் சாதனை படைத்த முதல் இரட்டை சகோதரிகள் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நடிகை மோனிஷா போய் வீவ்ஸ் எனப்படும் பந்தை கயிற்றில் கட்டி சுற்றிவிடும் போட்டியில் ஒரு நிமிடத்திற்கு 80 முறை சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சிலம்பத்திலும் மோனிஷா கெட்டிக்காரர். ஹார்ஸ் ரைடிங், ஜிம்நாஸ்டிக், மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்கேட்டிங், நீச்சல் உள்ளிட்ட அனைத்து திறமைகளும் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications