எதிர்நீச்சல்: மனம் மாறும் கதிர்.. குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி.. கலங்கி நிற்கும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 22 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கரிகாலன் குடித்துவிட்டு வந்து குணசேகரனிடம் பிரச்சனை செய்ய அதை பார்த்து சக்தி மனம் மாறுகிறார்.

அதே நேரத்தில் இதுவரைக்கும் குணசேகரனுக்கு ஆதரவாக இருந்து வந்த கதிர் தாரா மற்றும் நந்தினியின் நடவடிக்கையை பார்த்து மனம் வருகிறார்.

Ethirneechal Serial 2023 December 22th promo Ishwari shocked Gunasekaran

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த திருப்பங்கள் வர தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் வீட்டிற்குள் எதிர்த்து பேசினாலும் வெளியே எதுவும் உருப்படியாக செய்யாத எதிர்நீச்சல் குணசேகரன் வீட்டுப் பெண்கள் இப்போது துணிந்து விட்டனர். அதிலும் ஆதிரை குணசேகரனுக்கு பயந்து இருந்ததெல்லாம் போதும் என்று பெட்டி படுக்கையோடு அருண் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்திருக்கிறார்.

Ethirneechal Serial 2023 December 22th promo Ishwari shocked Gunasekaran

அதோடு அவருக்கு நீதிபதி கொடுத்த அட்வைஸ் காரணமாக இனி குணசேகரனுக்கு எதிராக சாருலதாவை வைத்து ஆதிரை கேஸ் போட இருக்கிறார். ஏற்கனவே அப்பத்தாவை கொலை செய்தது குணசேகரன் தான் என்று ஜனனி கேஸ் கொடுத்திருக்கும் நிலையில் இப்போது ஆதிரையும் எங்க அண்ணன் தான் அப்பத்தாவை கொலை செய்தது, அருனை ஆக்சிடெண்ட் செய்தது என்று அடுத்தடுத்து அனைத்து உண்மைகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial 2023 December 22th promo Ishwari shocked Gunasekaran

அதை தொடர்ந்து வீட்டில் தர்ஷினியும் குணசேகரனுக்கு எதிராக போர் கொடி தூக்கியிருக்கிறார். கரிகாலனுக்கு தர்ஷினியை இரண்டாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று குணசேகரன் எடுத்திருக்கும் முடிவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தர்ஷினி ஒரு பையனை தன்னுடைய காதலன் என்று நடிக்க கூட்டிட்டு வந்து வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி குணசேகரனிடம் தர்ஷினிக்கும் அந்தப் பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்க என்று சொல்கிறார். அதற்கு குணசேகரன் ஆத்தாளும் மவளும் மாத்தி மாத்தி பேசுறீங்களா? என்று திட்டுகிறார். அந்த நேரத்தில் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்து கொண்டிருக்கும் கரிகாலன் சக்தி இடம் உன்கிட்ட ஈரம் இருக்குயா....

Ethirneechal Serial 2023 December 22th promo Ishwari shocked Gunasekaran

என் நான் பேசுறது உனக்கு புரியுதா... பெய்ன் ஐயா, பெயின்.... என்று சொல்கிறார். அதை தொடர்ந்து கதிர் வீட்டில் இருக்கும்போது நந்தினி கதிருக்கு சாப்பாடு ஊட்டி விட அதை கதிர் மறுக்கிறார். அப்போது தாரா சாப்பிட்டதானப்பா மாத்திரை போட முடியும் என்று கதிருக்கு சாப்பாடு ஊட்டி விட கதிர் முகம் மாறுகிறது.

இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக சக்தி இடம் குணசேகரன் போடும் நாடகத்தால் சக்தி மனம் மாறி குணசேகரன் கூட்டணியில் சேர்ந்து விடுவாரோ என்ற கேள்விகள் அனைவருக்கும் இருக்கிறது. அதேபோல தாரா மற்றும் நந்தினியின் அன்பை பார்த்து கதிர் இனி மனம் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+