எதிர்நீச்சல்: சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி.. கதிருக்கு வரப்போகும் பிரச்சனை.. திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் சொத்து நம்முடைய பெயருக்கு மாறிவிடும் என்று குணசேகரன் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

அதிக நேரத்தில் கதிரால் பாதிக்கப்பட்ட நந்தினி கதிருக்கு எதிராக கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது குணசேகரனும் கதிரும் கிச்சனுக்குள் நுழைந்து இருக்கின்றனர் அதனால் இனி என்ன நடக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

Ethirneechal serial 2023 July 18th promo update Gunasekaran is active in the matter of property

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஆதிரையின் திருமணம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தது. அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா குணசேகரனை துணிச்சலாக எதிர்த்து பேசி இருந்தார். தற்போது தர்ஷினியும் குணசேகரனை எதிர்த்து தைரியமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதை போலவே பட்டம்மாள் சொத்தில் பாதி ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது. இந்த நிலையில் இந்த உண்மைகள் தெரியாத குணசேகரன் நாளைக்கு சொத்து எல்லாம் என்னுடைய பெயருக்கு மாற வேண்டும் என்று ஆடிட்டரிடம் கறாராக பேசிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal serial 2023 July 18th promo update Gunasekaran is active in the matter of property

மறுபுறம் கிச்சனில் மருமகள்கள் எல்லோரும் ஒன்றாக கூடி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நந்தினி மைனர் கணக்கா வேட்டியை கட்டிக்கொண்டு சுற்றினால் வாழ்க்கையை வாழ்ந்திட்டதா அர்த்தமா? எவன் அவன் கை கால்களை உடைக்கிறானோ அவனுக்கு கோயில் கட்டுவேன் என்று கூற அங்கிருக்கும் சக்தி முதலாக அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

கதிரை பற்றி அனைவரும் பேசி சிரித்து கொண்டிருக்கும்போது அந்த நேரத்தில் குணசேகரனும் கதிரும் உள்ளே வருகின்றனர். இப்படியாக வெளியான ப்ரோமோ இருக்கையில் இனி குணசேகரனுக்கு ஜீவானந்தத்தின் பெயரில் சொத்து மாறி இருப்பது தெரிந்தால் என்ன ஆகும்? என்ற எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் ஜனனி இனி யாரு பக்கம் நிற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

Ethirneechal serial 2023 July 18th promo update Gunasekaran is active in the matter of property

அதேபோல நேற்றைய எபிசோட்டில் தர்ஷினியை தொடர்ந்து தாரா பாப்பாவும் கதிரை தன்னுடைய ஸ்கூலுக்கு பேரன்ஸ் மீட்டிங் இருக்கிறது வரவேண்டும் என்று சொல்ல, அதற்கு கதிர் வரமாட்டேன் என்று சொன்னதால் இங்கிலீஷில் லெட்டர் எழுதி தந்து கையெழுத்து போடுங்க என்று தாரா கேட்டிருந்தார். அதுவும் முடியாது என்று சொன்னதால் நந்தினி நான் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் தாரா எனக்கு அம்மா, அப்பா யாருமே இல்லை என்று நான் சொல்லியிருந்தேன் என்று கோபத்தில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தாராவாலும் கதிருக்கு அடுத்த பிரச்சனை காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+