எதிர்நீச்சல்: குணசேகரனை பார்த்து பரிதாபப்படும் மருமகள்கள்.. ஜனனியால் ஜீவானந்தத்திற்கு அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவானந்தம் குணசேகரனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுப்பதை பார்த்து ஜனனி மற்றும் மற்ற மருமகள்களும் புது முடிவெடுக்கின்றனர்.

ஜீவானந்தத்தால் ஏமாற்றப்படும் குணசேகரன் பரிதாப நிலையில் அமைதியாக மாறுகிறார்.

Ethirneechal Serial 2023 July 23rd episode full update

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியான பல மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. அதை குறித்து பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் குணசேகரனை கம்பெனியை விட்டு வெளியே அடித்து துரத்தி இருந்த நிலையில் குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இதற்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 July 23rd episode full update

அதே நேரத்தில் ஆடிட்டர் இப்போதும் இது வேண்டாம் பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று குணசேகரை தடுக்க குணசேகரனுக்கு கோபம் வந்து ஆடிட்டரை திட்டி விடுகிறார். பிறகு ஜனனிக்கும் ஜீவானந்தத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா என்று கதிர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க எல்லாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்க்கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் வீட்டில் மற்ற மருமகள்கள் என்ன ஆச்சு என்று தெரியவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்க அப்போது ஜனனியும் சக்தியும் வீட்டிற்கு வருகின்றனர். ஜீவானந்தம் பெயருக்கு 40% ஷேர் மாறி விட்டது என்ற விஷயத்தையும் ஜீவானந்தம் குணசேகரன் மற்றும் தன்னிடம் எப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்று கம்பெனியில் நடந்த அனைத்து விஷயங்களையும் சக்தியும் ஜனனியும் அனைவரிடமும் கூறுகின்றனர்.

Ethirneechal Serial 2023 July 23rd episode full update

அடுத்ததாக ஜீவானந்தத்திற்க்கும், பட்டமாளுக்கும் என்னதான் தொடர்பு எதனால் பட்டம்மா இப்படி செஞ்சாங்க என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து இனி ஜீவானந்தத்தை சும்மா விட கூடாது. நானே போய் அவனை நாக்கை புடுங்குற மாதிரி பேசுறேன் என்று நந்தினி கிளம்ப மற்ற மருமகள் எல்லாம் என்ன நடந்தது அவன் யார் என்பதை பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டு நாம அடுத்த அடி எடுத்து வைக்கலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் குணசேகரன் என்ன ஆனாரோ என்று அனைவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த குணசேகரனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதற்கு முன்பே ஜீவானந்தமும் பர்ஹானாவும் வந்து பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது மற்றும் தன்னை அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தது என்று குணசேகரன் மற்றும் கதிருக்கு எதிராக புகார் கொடுக்கின்றனர். ஆபீஸில் நடந்தவற்றில் அவர்களுக்கு சாதகமாக சில வீடியோக்களை மட்டும் எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் காண்பிக்கின்றனர்.

அதனால் போலீஸ் அதிகாரி குணசேகரனிடம் இன்னிக்கு ஒரு நாள் உங்களுக்கு டைம் தரேன் நீங்க யோசிச்சு முடிவெடுங்க. அதே நேரத்தில் இந்த பிரச்சனையில் இருந்து விலகிடுங்க. சொத்து எல்லாம் அவர் பெயருக்கு மாறிவிட்டது. எல்லா டாக்குமெண்ட்டும் கரெக்டா வச்சிருக்கார் என்று சொல்ல, அதிர்ச்சியில் விரக்தி அடைந்து குணசேகரன் அங்கிருந்து சட்டையை கழட்டி வெளியே பாவமாக நடந்து வருகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் இனி என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+