எதிர்நீச்சல்: வாயைக் கொடுத்து ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டு அடிபடும் குணசேகரன்..இனி ஞானம் முடிவு?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனை ரவுடிகள் அடிப்பதை ஞானம் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
எஸ்.டி.ஆர் தம்பியிடம் திமிராக பேசும் குணசேகரனை ரவுடிகள் சூழ்ந்து கொண்டு நடுத்தெருவில் அடித்து கொண்டிருக்கின்றனர்.
குணசேகரன் அடி வாங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அந்தப் பக்கமாக ஞானம் வந்து கொண்டிருக்கிறார்.

ப்ரோமோ வந்துடுச்சி
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி யூகிக்க முடியாத சீரியலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாள் முடிவு அடையும்போது அடுத்த நாளுக்கான ப்ரோமோ பல நேரங்களில் வெளியாகும். ஆனால் ஒரு சில நேரங்களில் அடுத்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தான் ப்ரோமோ வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது மார்ச் ஏழாம் தேதி காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.

டாக்டர் சொன்ன பதில்
ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் நேற்று குணசேகரன் எஸ் டி ஆர் பற்றியும் அவருடைய தம்பி பற்றியும் திமிராக பேசிக்கொண்டு இருந்தார். தன்னுடைய தம்பி, கதிர் எஸ் டி ஆர் உடைய தம்பியை அடித்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் திமிராக நடந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய புரோமோவில் ஆதிரையின் உடல் நிலையை எப்படி இருக்கிறது என்று ஜனனி டாக்டரிடம் கேட்க, அதற்கு டாக்டர் ஜனனியின் தற்போதைய நிலையைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க நந்தினியின் முகம் மாறிக்கொண்டிருக்கிறது.

அடி வாங்கும் குணசேகரன்
இந்த நிலையில் அடுத்த கட்டமாக எஸ் டி ஆர் தம்பி நடத்தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது, உங்க அண்ணன் எஸ்டிஆர் எங்க ஆள காணோம்? உங்க அண்ணி முந்தானையை பிடித்துக் கொண்டு ஒதுங்கி விட்டானா? என்று கேட்டு வம்பு இழுக்க, அடுத்ததாக அவரை ஒரு சில ரவுடிகள் சேர்ந்து சட்டையை பிடித்து இழுத்து அடித்து துவசம் செய்கின்றனர். அதே நேரத்தில் அந்தப் பக்கமாக ஞனம் வெறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய பிரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே இப்போதுதான் ஞானம் அண்ணனை பற்றி புரிந்து கொண்டு கட்சி மாறி இருக்கிறார். ஆனால் இப்போது அண்ணன் அடி வாங்குவதை பார்த்து பதறிப் போய் மீண்டும் பழைய நிலைக்கு மாறி விடுவாரோ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்கள்
இந்த சீரியலின் பிரமோ வெளியாகி சுமார் அரை மணி நேரத்திற்குள் 205kவியூஸ் போயிருக்கிறது.அதிலும் குறிப்பாக 4.4k லைக்குகள் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இந்த சீரியலுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு தான் அடங்கும் என்று குணசேகரனை அடி வாங்குவதை பார்த்து பலர் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதைத்தான் நாங்கள் பல நாட்களாக எதிர்பார்த்தோம் என்றும் ஞாணம் காப்பாற்றுவார் என்று நினைக்கிறோம். அப்புறம்தான் தம்பியின் அருமை அண்ணனுக்கு புரிய போகிறது என்றும், இன்னொரு ரசிகர் இதுவரைக்கும் உங்க சீரியல் வேகமாக போய்க் கொண்டிருக்கும் போது, நீங்களும் மற்ற சீரியல்கள் போல ஹாஸ்பிடல் சீனை ஒரு வாரமாக ஓட்டுறீங்களே? என்று சில ரசிகர்கள் இயக்குனரிடம் கேள்வி கேட்டு இருக்கின்றனர். இப்படியாக பல கமாண்டுகளும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications