எதிர்நீச்சல்: பல நாளாக காரில் சுற்றிய குடும்பத்துக்கு அதிர்ச்சி.. ஒரு வழியா முற்றுப்புள்ளி வந்தாச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பல நாட்களாக காரிலேயே போய்க் கொண்டிருக்கும் வீட்டு மருமகள்களுக்கு வழக்கம் போல ஜான்சி ராணி அதிர்ச்சி கொடுக்கிறார்.

Ethirneechal Serial 2023 October 26th promo full update

அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த நந்தினி மற்றும் ஈஸ்வரியின் அப்பா சொன்ன பதிலால் குணசேகரன் அவமானப்படுத்துகிறார்.

அந்த வகையில் பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஆதி குணசேகரன் நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். வந்ததுமே வீட்டில் இருந்த தர்ஷினியை காப்பி போட சொல்லி பொம்பள பிள்ளைகளுக்கு வீட்டு வேலை செய்ய கூட தெரியாமல் வளர்த்து வச்சிருக்காலுக.

வளர்ப்பு இப்படி இருந்தா எப்படி போற வீட்டுல வாழ போறாங்க. நீ காபி போடுறியா இல்ல நான் வந்து உனக்கு காபி போட சொல்லி தரவா என்று மிரட்ட அதற்கு தர்ஷினி காபியை போட்டுக் கொண்டு கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தர்ஷனிடமும் நீ எங்க பேச்சை கேட்கிற வரைக்கும் நல்லா தான் இருந்த.

என்னைக்கு உங்க அம்மா சித்தி பேச்சுகளை கேட்க ஆரம்பிச்சியோ அதுக்கு பிறகு தான் புத்தி கெட்டு போச்சு என்று பேச அதற்கு தர்ஷன் முறைப்படி இருக்க அதற்கும் வளர்ப்பு சரியில்ல அதனாலதான் இப்படி எல்லாம் முழிக்கிறான் என்று குணசேகரன் பேசியிருந்தார்.

Ethirneechal Serial 2023 October 26th promo full update

அதே நேரத்தில் வீட்டிற்கு குணசேகரன் வருவதற்கு முன்பு ஈஸ்வரியின் அப்பாவும் நந்தினியின் அப்பாவும் வந்திருந்தனர். வழக்கம் போல அவர்களிடம் குணசேகரன் நக்கல் தனத்தோடு அவமானப்படுத்தி இருந்தாலும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அதே நேரத்தில் பல நாட்களாகவே அப்பத்தாவின் ஊருக்கு காரில் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி, ஆதிரை, ஜான்சி ராணி, கதிர் இவர்கள் அனைவரும் போய்க் கொண்டே இருக்கின்றனர். அதுபோல இன்னொரு காரில் கதிர் கரிகாலன் கிள்ளிவளவன் மூன்று பேரும் போய் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காபி குடிக்க கதிர் குரூப் காரில் இருந்து இறங்கி இருந்த நேரத்தில் கதிருக்கு அவருடைய உறவுக்கார ஒரு பெண் போன் செய்து நீங்கள் ஆதிரை கல்யாணத்தில் போட்ட ஆட்டத்தை பார்த்து நான் மயங்கி போய் விட்டேன். என்னுடைய அழகை பார்த்து என்னை பல பேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் நான் உங்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று பேசிக் கொண்டு இருந்தார்.

அதில் கதிர் வழக்கம்போல சபலப்பட்டு உனக்கு எந்த ஊர் என்று கேட்க இப்போது கதிர் இருக்கும் ஊர் தான் என்று அந்தப் பெண் சொல்லி இருக்கிறார் உடனே நான் உன்னை பார்க்க வருகிறேன் என்று கதிர் சொல்லி இருந்தார் இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதிலும் வழக்கம் போல இன்றும் இவர்கள் எல்லாரும் காரிலேயே போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜான்சி ராணி காருக்குள் பிரச்சனை செய்து கொண்டிருக்க, கோபமான நந்தினி உன்னை இறக்கிவிட்டுட்டு அப்படியே போய்கிட்டே இருப்போம் என்று சொல்ல, அதற்கு ஜான்சி ராணி இது எங்க அண்ணனோட கார் நீங்க எல்லாம் இறங்குங்கடி என்று மிரட்டுகிறார்.

அதே நேரத்தில் ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த இடத்தில் கிள்ளிவளவன் கதிரிடம் நீ தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்ல அதற்கு கதிர் எது தேவை எது தேவையில்லாதது என்று எனக்கு தெரியும் நீ சொன்னதை மட்டும் செய் என்று மிரட்டுகிறார்.

Ethirneechal Serial 2023 October 26th promo full update

அதே நேரத்தில் வீட்டில் நந்தினியின் அப்பா குணசேகரனிடம் எங்களை அப்பத்தா தான் வர சொன்னாங்க என்று சொல்ல அதற்கு குணசேகரன் கூப்பிட்டா வந்துருவீங்களா என்று அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இதே காட்சிகளை பார்த்து பார்த்து பலருக்கும் போர் அடித்து போய்விட்டது என்று கமெண்ட் செய்து தங்களுடைய வேதனையை கொட்டுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் ஆயுத பூஜை எதிர்நீச்சல் ஸ்பெஷல் ஷோவில் ஜனனி சக்தி கெமிஸ்ட்ரி நல்லா இருந்துச்சு ஆனா அது போல காட்சிகளை சீரியலுக்குள் வைக்கிறதே இல்லையே என்று பலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அதோடு இனி எப்பதான் இவங்க கோயிலுக்கு போய் சேருவாங்கன்னு தெரியலையே என்று பலர் பயத்தோடு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+