மாரிமுத்துவின் இறப்பு வலியை கண்முன் காட்டிய எதிர்நீச்சல்.. கரிகாலன் கதறிய வார்த்தை.. நெகிழ்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டை விட்டு வெளியே போன குணசேகரன் செய்த செயலைப் பற்றி ஆடிட்டர் வந்து சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் கரிகாலன் கதறி அழுதது குணசேகருளுக்காக அல்ல அந்த கேரக்டரில் வாழ்ந்த மாரி முத்துவுக்காக என்பது பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக அனைவருடைய மனதிலும் வாழ்ந்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு காலமானார். அதற்கு பிறகு அவர் ஏற்கனவே நடித்த காட்சிகளை புதிய எபிசோடுகளுக்கு இடையே அவர் இருப்பது போன்ற வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார் என்பது போன்று கதையை கொண்டு போயிருந்தனர்.
அப்போது குணசேகரன் பற்றி ஞானமும், கதிரும் ஒவ்வொருத்தருக்காக போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆடிட்டருக்கு போன் செய்த கதிர் ஆடிட்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அதாவது ஏற்கனவே நேற்று இரவு எனக்கு குணசேகரன் போன் பண்ணி இருந்தாரு. தன்னுடைய சொத்து விஷயத்தை பற்றி கொஞ்சம் பேசி இருந்தாரு என்று ஆடிட்டர் சொன்னார். ஆனால் என்ன சொன்னார் என்பதை கதிர் கேட்டபோது ஆடிட்டர் போனை கட் பண்ணி விட்டார்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஆடிட்டர் பைலை கொண்டுவந்து அனைவரிடமும் படித்துக் காட்டிக் கொண்டிருக்க, அப்போது ஞானம் அழுதபடி அண்ணன் என்னதான் சார் சொல்லிட்டு போனாரு தயவு செய்து சொல்லுங்க என்று கேட்க, அதற்கு தான் கொண்டு வந்த பைலை ஞானத்திடம் ஆடிட்டர் கொடுக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உடைந்த கதிர் சுவற்றில் சாய்ந்து கதறி அழுது கொண்டிருந்தார்.

அப்போதுவஅழுது கொண்டிருக்கும் கரிகாலன்," எங்கய்யா போன... உன்னை புரிஞ்சு கொள்ளாதவர்களுக்கு நீ புரியாத புதிர்யா... உன்னை புரிஞ்சு கொண்ட எனக்கு நீ உயிர்யா.. காது எல்லாம் உன் குரலே கேக்குதய்யா" என்று அழுது கொண்டிருக்க, அப்போது ஆதிரை, விசாலாட்சி என எல்லோருமே அழுது கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும் போது உணர்வு பூர்வமாக இருப்பதாக அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் மாரிமுத்து குணமும் அதுதானே.! அவரை புரிந்து கொள்ளாதவர்கள் பலரும் அவர் கரடு முரடானவர் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் முற்போக்கு சிந்தனையாளர் என்பது பலருக்கும் தெரியாது. என்று அவரோடு நெருங்கி பழகிய பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் இதனால் இந்த வசனம் மாரிமுத்துவுக்காகவே எழுதியது போன்று காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. ப்ரோமோவை பார்க்கும் ரசிகர்களுக்கும் கண்கலங்க வைத்திருந்தது. அது மட்டுமில்லாமல் கரிகாலன் இந்த வசனங்களை சொல்லும்போது பார்க்கும் பல கண்களில் கண்ணீர் வழிந்திருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications