குணசேகரனை எதிர்த்து பேசும் குடும்பம்.. முடிவில் எதிர்பாராத ட்விஸ்ட்.. இதற்குத்தான் இப்படியா?

எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனை ஐஸ்வர்யா பாப்பா எதிர்த்து பேசும் நிலையில் தற்போது அந்த ப்ரோமோ ட்ரெண்டிங்கில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய ப்ரோமோ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது.

ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் தாரா குணசேகரனை எதிர்த்து பேசிய நிலையில் இன்று ஐஸ்வர்யாவும் குணசேகரனை எதிர்த்து பேசிய ப்ரோமோ வெளியானது.

தான் மிரட்டி கொண்டிருந்தாலும் குழந்தைகள் கூட இப்போது குணசேகரன் எதிர்த்து பேச தொடங்கியிருக்கும் நிலையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோவை அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்ததால் தற்போது இது ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது.

குணசேகரனின் உண்மை குணம்

குணசேகரனின் உண்மை குணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இருக்கிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. அதுவும் இந்த வாரத்தில் ஆதிரையின் திருமண விஷயத்தில் குணசேகரன் எடுத்திருக்கும் முடிவிற்கு யாரெல்லாம் எதிராக பேசினார்களோ அவர்களை எல்லாம் வார்த்தையாலே குணசேகரன் வசைப்பாடி தன்னுடைய சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

தைரியம் இல்லாத ஞாணம்

தைரியம் இல்லாத ஞாணம்

இதுவரைக்கும் தம்பிகள் தான் எனக்கு உலகம். தம்பிகளுக்காக தான் நான் வாழ்கிறேன் என்று நடித்துக் கொண்டிருந்த குணசேகரனின் சுயரூபம் தற்போது தம்பிகள் ஒவ்வொருவருக்காக தெரிய வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சக்தி குணசேகரனை எதிர்த்து பேசி அதற்கு பிறகு குணசேகரின் குணத்தை அறிந்து அவர் பட்டம்மாள் மற்றும் ஜனனியின் பக்கம் மாறி இருக்கிறார். பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரே நபராக சக்தி மட்டும் தான் குணசேகரனின் வீட்டில் இருந்து வந்தார். ஞாணம் தான் அண்ணன் குணசேகரன் எடுக்கும் முடிவு தவறாக இருந்தாலும் அதை எதிர்த்துப் பேசும் தைரியம் இல்லாத ஒரு நபராக இருந்து வந்தார்.

பிறந்த நாளில் புது பிரச்சனை

பிறந்த நாளில் புது பிரச்சனை

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து அடுத்த பிரச்சனை வீட்டில் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ஆதிரை திருமண விஷயம் இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று குணசேகரன் கூற குழந்தைக்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று ஞாணம் ஒரு பக்கம் பீல் பண்ணிக் கொண்டிருக்க, ஜனனி தன்னால் முடிந்ததை செய்யலாம் என்று நினைத்தாலும் அதையும் செய்யக்கூடாது என்று குணசேகரன் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

எதிர்த்து பேசிய ஐஸ்வர்யா

எதிர்த்து பேசிய ஐஸ்வர்யா

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஜனனியிடம் ரேணுகா, நீ வயசில் சின்னவளாக இருந்தாலும் நிறைய பேருக்கு நீ அம்மா தான். என்னுடைய குழந்தையையும் சேர்த்து தான் சொல்கிறேன் என்று கூறுகிறார். பிறகு ஐஸ்வர்யாவின் தோழிகளை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஜனனி கூட்டிக்கொண்டு வந்து இரவில் 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். சத்தம் கேட்டு குணசேகரன் கீழே வந்து ஏ... ஐஸு... யாரு இந்த பிள்ளைங்க எல்லாம் என்று கேட்க? இவங்க எல்லாம் என்னுடைய பிரண்ட்ஸ். அவங்க எல்லாம் எதுவும் நீங்க பேசாதீங்க, உங்களுக்கு பிடிக்கலன்னா நாங்க வெளியே போயிருந்தோம் என்று சொல்ல, இந்த குழந்தையும் இப்படி பேசுகிறதே என்று வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வாயில் கை வைத்திருக்கின்றனர்.

இது புது கணக்கு

இது புது கணக்கு

குணசேகரன் முறைத்தபடியே நிற்கிறார். இந்த பிரமோ தற்போது அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பிரமோ வெளியாகி 18 மணி நேரத்திற்கு ட்ரெண்டிங்கில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பிரமோவை இதுவரைக்கும் 1.4 மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். ஏற்கனவே ஞானத்தை குணசேகரன் இதே போல திட்டிய பிரமோவும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து நேற்று பிரமோவில் தாரா குணசேகரனை திட்டி இருந்தார். இன்று ஐஸ்வர்யா திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொருவராக குணசேகரனை திட்டி வரும் நிலையில் அந்த பிரமோ அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இது வடிவேலு காமெடி ஆக இருக்கிறது. நீ குணசேகரனை திட்டினால் அன்னைக்கி ட்ரெண்டிங் ஆகி விடுகிறோம் என்று இனி குணசேகரனை எல்லோரும் திட்டப் போகிறார்களா? என்று கலாய்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+