வாழ்க்கையில அந்த மாதிரி நபர்கள் இல்லன்னா சந்தோஷம் ஆனால்.!எதிர்நீச்சல் நந்தினியின் உருக்கமான வார்த்தை
உங்களுடைய வாழ்க்கையில் குணசேகரன் மாதிரி கேரக்டர் இல்லனா சந்தோஷப்பட்டுக்கோங்க என எதிர்நீச்சல் ஹரிப்ரியா பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை ஹரிப்பிரியா நந்தினி கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்நீச்சல் குணசேகரன் போல கேரக்டர் இல்லாமல் இருந்தால் நல்லது என கூறி இருக்கிறார்.
தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் குறித்து உருக்கமாக நடிகை ஹரிப்பிரியா பகிர்ந்து இருக்கிறார்.

எதிர்நீச்சல் நந்தினி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வன் இதிலும் இயக்கி வருகிறார். இதில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும், அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டனர். அதிலும் நந்தினி கேரக்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் ஒரு கேரக்டராக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

பயணம் மாறியது
அதில், தான் சென்னையில் தான் பிறந்தேன் என்றும் பின்னர் விசுவல் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறேன். டைரக்ஷனில் இன்ட்ரஸ்ட் இருந்ததால் எடிட்டிங் இன்டர்ஷிப்பும் போயிட்டு இருந்தேன். நிறைய கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் ஆடிஷனுக்கு எனக்கே தெரியாம எங்க அம்மா அப்ளை பண்ணி இருந்தாங்க. கேமரா முன்னாடி நடிக்கிறதுக்கு எனக்கு விருப்பம் இல்லனாலும் அந்த ஆடிஷனல் கலந்து கொண்டேன். ஒரு நாள் நீங்க செலக்ட் ஆகி இருக்கீங்கன்னு போன் வந்தது. அந்த நொடியில் இருந்து தான் என்னுடைய பயணம் மாற தொடங்கியது என்று கூறியிருக்கிறார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்
மேலும் எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமாவில் ஒரு கிரேஸ் இருந்தது. அப்போது இருந்து இப்ப வரைக்கும் எனக்கு பெருசா பிரெண்ட்ஷிப் எல்லாம் கிடையாது. சின்ன வயசுல இருந்து சினிமா தான். ஒரு நாளைக்கு நாலு படம் கூட பார்த்திருக்கிறேன். கனா காணும் காலங்களுக்குப் பிறகு சீரியல்களில் நடித்து வந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந்தாச்சு, பிரியமானவள் போன்ற சீரியல்களில் மூலமாக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார்.

காரணம் இவங்க தானம்
முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக நகைச்சுவை கேரக்டரில் நான் நடித்து வருவதை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் இந்த மொத்த கிரீடிட்டோம் இந்த எதிர்நீச்சல் சீரியல் இயக்குனருக்கு தான் சேரும். அவங்க என்ன சொல்றாங்களோ அதே சிட்டி ரோபோ மாதிரி செய்கிறோம். இயக்குனரும் எழுத்தாளரும் தான் எங்க வசீகரம். படித்த இன்னசென்ட் பொண்ணு தான் நந்தினி. உண்மையிலே படிப்புக்கும் நம்ம குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. படிச்சவங்க எல்லோரும் முதிர்ச்சியா நடந்துப்பாங்கன்னு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.ஆனால் அது அப்படி இல்லை. எதிர்நீச்சல் நந்தினி கூட அப்படித்தான் எல்லாத்தையும் பட்டு பட்டுன்னு வெளிப்படையா பேசுற படிச்ச பொண்ணு. எதார்த்தமா ஜாலியா இருக்குன்னு கதை கேட்கும் போதே தெரிஞ்சது. ஆனா எந்த அளவிற்கு அது ஒர்க் அவுட் ஆகும்னு தெரியல இப்போ எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறி இருக்கிறார்.

அப்படி இல்லன்னா சந்தோஷம்
நிஜ வாழ்க்கையிலும் பல குணசேகரர்களை சமாளித்து விட்டு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். சில பேர் இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பாங்களான்னு ஆச்சரியமாக கேட்டாங்க. அதற்கு குணசேகரன் மாதிரி ஒருத்தர் உங்க வாழ்க்கையில் இல்லனா நிச்சயம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கோங்க என்று நான் கூறியிருக்கிறேன். வெளியில் நம்மை சுற்றி ஆயிரம் குணசேகரன், ஆயிரம் கதிர்வேல்கள் இருக்காங்க. இவங்க எல்லோரையும் சமாளிச்சிட்டு தான் நாம ஒவ்வொரு நாளையும் கடந்து வர வேண்டியது இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications