கடைசி வரை கூட வரேன்னு சொல்லி ஏமாத்திட்டு.. உடம்பில் அவ்ளோ பிரச்சனை! மனம் நொந்து பேசிய ஹரிப்பிரியா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதில் கடைசி வரைக்கும் கூட வருவேன் என்று நம்பிக்கை கொடுத்துட்டு சிலர் தூக்கிப்போட்டுறாங்க, என்று வருத்தமாக பேசி இருக்கிறார். என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில நடிகைகள் சில சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறார்கள். அதுபோல ஒருவர்தான் நடிகை ஹரிப்பிரியா. இவர் ஆரம்பத்தில் ஆபீஸ் என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்துவிட்டு அதற்கு பிறகு சில சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார். ஆனால் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான்.

பிடித்த நந்தினி கேரக்டர்
இந்த சீரியலில் நந்தினிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நந்தினி கேரக்டரில் ஹரிப்பிரியா வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இவர் சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் இந்த சீரியலில் கலகலப்பாக இவர் அடிக்கும் நையாண்டி, டைமிங் காமெடி பலருடைய ஃபேவரைட். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டு இவர் பேசும் வார்த்தைகளை பலரும் ரசிக்கிறார்கள்.
சுதந்திரத்தை கொடுங்கள்
இந்த நிலையில் ஹரிப்பிரியாவுக்கு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் ஹரிப்பிரியா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஹரிப்ரியா பேசுகையில் பொதுவாக ஒரு பெண்ணை நீ உன்னுடைய திறமையில் ஜெயித்துவிட்டு வா என்று அனுப்பிவிட்டு பாருங்கள் அந்த பெண் அவ்வளவு சாதனைகளை செய்வார்கள்.

யாரும் ஏமாற்றாதீர்கள்
உனக்காக நான் இருக்கிறேன், உன் கூடவே கடைசி வரைக்கும் வருவேன்.. நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று ஏமாற்றி விட்டு கடைசியில் விட்டுட்டு போய் விடாதீர்கள். பெண்களுக்கு நீங்கள் தான் எப்போதும் தைரியம் என்று சொல்லி வளருங்கள் அடுத்தவர்களை சார்ந்து இருக்காமல் இருப்பதே ரொம்பவும் நல்லது. என்னுடைய வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் ஓடிக் கொண்டிருக்க முக்கிய காரணம் என்னுடைய மகன் தான்.
அம்மா என்ற உறவு
நான் அம்மா என்ற ஸ்தானத்தில் இருப்பதாலேயே என்னுடைய மகனுக்காக நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். என்னுடைய உடம்பில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு படத்தில் தாடி பாலாஜி சொல்லுவாரு நின்னா வலிக்குது உட்கார்ந்தா வலிக்குது என்று அதுபோல உடம்பில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை விதமான பிரச்சனைகள் இருக்கிறது. ஆனாலும் நான் ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மகன் மீது வைத்திருக்கும் அன்பும் காதலும் தான்.

உடலில் பிரச்சனை
அதுபோல இந்த சீரியலில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்று இந்த நிகழ்ச்சியில் கூட இயக்குனர் திருச்செல்வத்திடம் சொன்னேன். இதுபோல பலமுறை நான் சொல்லி இருக்கிறேன் அந்த அளவிற்கு உடலில் பிரச்சனை. ஆனாலும் ஒரு சிலருடைய அன்பு நம்மை மீண்டும் எழுந்து ஓட வைத்து விடுகிறது. அது போல தான் நானும் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறேன் என அந்த நிகழ்ச்சியில் ஹரிப்ரியா பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications