எதிர்நீச்சல் ஹரிப்ரியா வாழ்க்கையில் இவ்வளவு சோதனையா..? கலங்க வைத்த வார்த்தை! இது பலருக்கும் பாடம்
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் நந்தினி கேரக்டர் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை ஹரிப்ரியா. இந்த கேரக்டர் மூலம் இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார். அந்த சீரியல் முழுக்க ஒரே சண்டை சச்சரவாக இருந்தாலும் அதிலும் இவருடைய காமெடி காட்சிகள் பலருக்கும் பிடிக்கும். இந்த நிலையில் ஹரிப்ரியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பேசி உருக்கமாக இருக்கிறார்.

சிங்கிள் மதர் வலி
ஹரிப்பிரியா கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி அப்போதிருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தார் அதுபோல தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த இவர் இப்போது மீண்டும் நடித்துக் கொண்டு வருகிறார்.
ஹரிப்பிரியா சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை தான் காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய மகனை ஹரிப்பிரியா தான் கவனித்து வருகிறார்.

இந்தநிலையில் ஹரிப்பிரியா சிங்கிள் மதர் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில், "சிங்கிள் மதராக இருப்பது ஒரு பொறுப்பு மட்டும் இல்ல; அது பல சவால்களும், அழுத்தங்களும் நிறைந்த வாழ்க்கை. ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது என்பது உடல், மனம், பொருளாதாரம் என எல்லா ரீதியிலும் சோதனை தான்" என்று அவர் கூறியுள்ளார்.
அதிலும், சமூகத்தின் பார்வை தான் அதிகமாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை தவறாக நடந்துகொண்டாலே 'அம்மா சரியாக வளர்க்கலையா?' என்ற கேள்வி முதலில் வரும். அந்த ஒரு எண்ணமே எப்போதும் மனசுக்குள் அழுத்தமாக இருக்கும்" என்றார்.

விடிய விடிய அழுத நாட்கள்
வாழ்க்கையில் சந்தித்த மன அழுத்தங்களைப் பற்றியும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். "ஒரு காலத்தில் தனியாக ரூமிற்குள் உட்கார்ந்து விடிய விடிய அழுதிருக்கேன். சினிமா பார்க்க கூட மனசு இல்லாத நிலை இருந்தது" என்று அவர் கூறியிருப்பது, அவர் சந்தித்த மன வேதனையின் அளவை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், "அழுவது பலவீனம் இல்லை; அது நம்மை உள்ளிருந்து பலமாக்கும் ஒரு வழி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடைந்து மீண்டும் எழுந்த தைரியம்
"வாழ்க்கையில் எப்போதும் உறுதியாக இருக்க முடியாது. சில நேரங்களில் உடைந்து போக வேண்டியது தான். ஆனால் அதிலிருந்து மீண்டு வரும்போது தான் உண்மையான வலிமை கிடைக்கும்" என்ற அவரது கருத்து, பலருக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.

தனிமை
தனியாக வாழ்வது குறித்து அவர் கூறியதாவது, "வாழ்க்கையில் தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போகப் போகிறோம். அதனால் தனிமையை நான் ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொண்டேன் என்று அவர் உருக்கமாக பேசிய வரிகள், அவரது மனநிலையையும் வாழ்க்கையை அணுகும் விதத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இப்படி இவர் சோகமாக பேசி இருப்பதை பார்க்கும் பலரும் எங்க நந்தினியா இப்படி எல்லாம் பேசுறது? எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அப்போதும் கிண்டல் பண்ணிட்டு ஜாலியா சீரியலில் இருப்பாரே ஆனால் இவருக்குள் இவ்வளவு பிரச்சனையும் வேதனையும் இருக்கிறதா என்று அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications