எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு ஷாக்! ஆதிரைக்கும் அருணுக்கும் மீண்டும் கல்யாணம்.. மாற்றப்படுகிறதா கதை?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யா தேவராஜன் அந்த சீரியல் கதாநாயகி மதுமிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து சில புகைப்படங்களை போஸ்ட் போட்டிருக்கிறார்.
அதில் சில புகைப்படங்களில் ஆதிரை மற்றும் அருணுக்கு மீண்டும் கல்யாணம் நடப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் என்ன மீண்டும் அருணுக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் கல்யாண காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. ஆரம்பத்திலேயே இந்த சீரியலில் ஜனனி மற்றும் சக்தியின் திருமணத்தில் பிரச்சனையோடு இந்த சீரியல் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தர்ஷினிக்கும் கரிகாலனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு குணசேகரன் கரிகாலன் மற்றும் ஆதிரைக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார்.
ஆனால் ஆதிரை அருணை காதலிப்பதாக வீட்டில் சொல்லி அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். அதோடு வீட்டுப் பெண்களின் உதவியோடு அருணை திருமணம் செய்வதற்காக போயிருந்த ஆதிரைக்கு கடைசியில் குணசேகரன் மூலமாக அதிர்ச்சி தான் கிடைத்தது. நடுத்தெருவில் வைத்து கரிகாலனை ஆதிரைக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். இப்போது மீண்டும் குணசேகரன் வீட்டில் தர்ஷினிக்கு கல்யாண பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி ஆன நிலையில் தற்போது வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம் இருக்கிற கல்யாண பிரச்சனைகளில் ஒரு பிரச்சனையும் முடிவுக்கு வராத நிலையில் அடுத்த பிரச்சனையாக ஆதிரைக்கும் அருணுக்கும் மீண்டும் கல்யாணம் நடப்பது போன்ற புகைப்படங்களை ஆதிரை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இந்த சீரியலில் தொடங்கப்படும் பிரச்சனைகள் ஒன்றுமே முடிவடையாமல் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தர்ஷினியின் பிரச்சனையே முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் ஆதிரையின் பிரச்சனையை தொடங்கியிருப்பது பார்க்கும் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்த நிலையில் இப்போது அதிகமாக நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலின் கதையை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சீரியலில் தீவிர ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் சீரியல் கதை எந்த விதத்திலும் மாறியது போல தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாகவே தர்ஷினி காணாமல் போய் இருந்த காட்சிகள் தான் சுத்தோ சுத்து என்று சுற்றிக் கொண்டிருந்தது. இப்போ தர்ஷினிக்கும் ஜனனியின் அத்தை உமையாள் மகனுக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. குணசேகரன் சமீபத்தில் தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் நடத்தி வைப்பேன் என்று சத்தியம் செய்திருந்தார். ஆனால் இப்போது உமையாளிடம் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இயக்குனரை திட்டி வருகிறார்கள். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications