எதிர்நீச்சலில் கூடும் கிரைம் ரேட்.. இப்பவாவது இந்த முடிவு எடுத்தாங்களே? கதிர் வைக்கும் விஷ பரீட்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் மூன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி மற்றும் அவருடைய குடும்பத்தை காணாமல் தவித்துக் கொண்டிருக்கும் சக்திக்கு குணசேகரன் அதிர்ச்சி கொடுக்கிறார். ஆனால் கதிர் தான் புது பிளான் வைத்திருப்பதாக கூறுகிறார்.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமாக கடத்தல் காட்சிகளும், திருமண காட்சிகளும் மட்டும்தான் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும் நிலையில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Ethirneechal Serial April 3rd 2024 promo and episode full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலுக்கென்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த சீரியலுக்கு சமீபத்தில் யார் கண்ணுபட்டதோ என்று தெரியவில்லை... அடுத்தடுத்து பிரச்சனைகள் மட்டும் தான் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து புது புது பிரச்சனைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் முளைத்துக் கொண்டே இருக்க, அது ஒன்றுமே தீர்வு காணப்படாமல் இருக்கிறது.

அடுத்தடுத்து சிக்கல்கள் சுற்றி சுற்றி இப்போது பிரச்சனை எல்லாம் இடியாப்பசிக்கலாக இருக்கிறது. அதனால் இதை பார்க்கும் ரசிகர்கள் இதற்கு ஒரு முடிவு இல்லையா? என்று கதறும் நிலைக்குப் போய்விட்டார்கள். ஆரம்பத்தில் எல்லாம் எதிர்நீச்சல் சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகும் போது அதற்கு கீழே அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்கள் இருக்கும். ஆனால் இப்போது அந்த சீரியல் குறித்து பலர் கழுவி ஊத்தி வருவதை பார்க்க முடிகிறது.

ஆனாலும் சீரியல் இயக்குனர் எந்த இடத்திலும் கதையை மாற்றப் போவது போன்று தெரியவில்லை... தான் போகும் வழியில் தான் போவேன் என்று போய்க்கொண்டே இருக்கிறார். ஏற்கனவே ஆதிரையின் கல்யாணம், தர்ஷினியின் கல்யாணம் என்று இங்கே கல்யாணத்திற்கு பஞ்சம் இல்லாமல் கல்யாண போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு முறையும் கதாநாயகி குணசேகரனிடம் சவால் விடுவதும் பிறகு வழக்கம் போல தோற்றுப் போவதும் தான் வாடிக்கையாக இருக்கிறது .

அதேபோல அடிக்கடி ஒவ்வொருத்தராக காணாமலும் போகிறார்கள். அப்பத்தா காரில் வெடிகுண்டு வெடித்து இறந்து போய்விட்டார் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் அது பற்றி தெளிவாக காட்டவில்லை. அதனால் உறுதியாக இறந்து போனாரா? அல்லது எங்கேயாவது இருக்கிறாரா? என்று கேள்விகள் இப்போதும் இருக்கிறது. அதே நேரத்தில் தர்ஷினியை கடத்தி வைத்தது பல மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது தர்ஷினி வீட்டுக்கு வந்திருக்கிறார்.

ஆனால் தர்ஷினி பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் அடுத்ததாக இழுத்துக் கொண்டிருக்கிறது. இது போதாது என்று இப்போது ஜனனியின் தங்கையும், அம்மாவும் காணாமல் போக அதை தேடி போன ஜனனியும் இப்போது காணாமல் போயிருக்கிறார். இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜனனியை காணவில்லை என்பதால் சக்தி குணசேகரனிடம் வந்து என் பொண்டாட்டிய எங்க மறைச்சு வச்சிருக்கீங்க?

ஒழுங்கு மரியாதையா என் பொண்டாட்டியையும் அவங்க குடும்பத்தையும் விட்டுடு என்று மிரட்டிக் கொண்டு இருக்க, அதற்கு குணசேகரன் தெனாவட்டாக பேசி மிரட்டுகிறார். அதே நேரத்தில் ஜனனியின் அத்தை உமையாள் அவருடைய அண்ணன் மகன்களிடம் அந்த ஜனனியும் அவ குடும்பமும் இனி வெளியவே வரக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கடைசியாக சக்தியிடம் கதிர் நான் வைத்திருக்கிற பிளானால இப்போ அந்த உமையாள் ஜனனியையும் அவ குடும்பத்தையும் பதறி அடித்துக்கொண்டு வந்து விட போறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ இருக்கும் நிலையில் இந்த கடத்தல் நாடகத்துக்கு சீக்கிரமாக எண்ட் போட்டுவிட்டு ஏற்கனவே தொடங்கி வைத்த பிரச்சினைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து வைத்தால் மீண்டும் இந்த சீரியல் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கும் என்பது இந்த சீரியல் ரசிகர்களின் தீவிரமான விருப்பமாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குனர் ஒரு பேட்டியில் நான் ஒரு சீரியலை தொடங்குவதற்கு முன்பே அந்த சீரியலை எப்படி முடிக்க போகிறேன் என்பதை எல்லாம் முடிவு செய்து விடுவேன் என்று கூறி இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இப்போது ரசிகர்கள் அதிகமாக இந்த சீரியலுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் கொடுத்து வந்தாலும் கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் இயக்குனர் தன்னுடைய பாணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் சிலர் நொந்து கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+