எதிர்நீச்சலுக்கு சோதனை! அதிரடியான நேர மாற்றம்.. சிக்கிய 2 சீரியல்கள்.. திடீர் முடிவுக்கு காரணம்?
சென்னை: சன் டிவியில் சில சீரியல்களில் திடீரென்று ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அதிலும் எதிர்நீச்சல், இனியா மற்றும் மிஸ்டர் மனைவி சீரியலின் நேரம் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திடீரென்று ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலின் நேரத்தை மாற்றுவதற்கு காரணம் சன் டிவியில் புதியதாக சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கும், இனியா சீரியல் 10 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இனி இதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் டிஆர்பி யில் என்ன மாதிரி மாற்றம் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். இந்த நிலையில் எந்த சீரியல் புதியதாக வரப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி யில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஒவ்வொரு வாரமும் வந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கிய இடத்தில் எதிர்நீச்சல், இனியா போன்ற சீரியல்களும் இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலின் நேரம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கு தான் ஆரம்பத்தில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சமீபத்தில் தான் அந்த சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிலையில் இப்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கும், இனியா சீரியல் 10:30 மணிக்கும், மிஸ்டர் மனைவி சீரியல் 2:30 மணிக்கும் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சரிகமப நிறுவனம் மெட்டி ஒலி 2 சீரியலை தயாரித்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அது போல இன்னும் ஒரு சீரியலும் புதியதாக ஒளிபரப்பாக போகிறதாம். இரண்டு சீரியல்களின் அடுத்தடுத்து எண்ட்ரியால் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் நேர மாற்றம் ஏற்படுகிறது.
ஏற்கனவே டிஆர்பி யில் எதிர்நீச்சல் சீரியல் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இனி ஒன்பது முப்பதுக்கு மணிக்கு போகும்போது டிஆர்பி யில் பின்னடைவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 9 மணி நேரத்தில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியலுக்கு அமோகமான வரவேற்பு இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலும் சிறகடித்த ஆசை சீரியலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதுதான் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டிஆர்பி குறைந்து கொண்டிருக்கிறது. இனி 9 மணிக்கு போட்டி சீரியலான எதிர்நீச்சல் இல்லை என்றால் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி யில் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மெட்டிஒலி 2 சீரியலின் வருகையால் இனி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் என்ன மாதிரி பாதிப்புகள் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்போதுள்ள மெட்டிஒலி 2 சீரியலுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறதா இல்லையா என்பது சீரியல் தொடங்கியதும் தெரிய வந்துவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications