எதிர்நீச்சல் டுவிஸ்ட்.. ஜீவானந்தத்திற்கும் பட்டமாளுக்கும் இப்படி ஒரு உறவா?இனி இப்படி ஒரு பிரச்சனையா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டமாளின் சொத்து 40% ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது.
இதனால் ஜீவானந்தம் குணசேகரன் மற்றும் அவருடைய குடும்பத்தை இனி பாடாய் படித்தி எடுக்க இருக்கிறார்.
ஜீவானந்தம் யாராக இருக்கும்? அவருக்கும் பட்டம்மாளுக்கும் என்ன மாதிரி உறவு இருக்கும்? என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் இருக்கும் நிலையில் சில பதில்களும் வலம் வருக்கிறது. அதை குறித்து பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருந்த நிலையில், குணசேகரன் வீட்டில் இருந்தால் அப்பத்தா என்ன செய்கிறார்? என்று யாராலும் யோசிக்க முடியாத வகையில் அமைதியாகவே இருந்தார். ஆனால் திடீரென்று ஜனனி வீட்டை விட்டு போகும் போது தன்னுடைய பெயரை முதல்முறையாக அப்பத்தா, பட்டம்மாள் பி ஏ என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஜனனி மற்றும் குணசேகரனுக்கு எதிராகவே இத்தனை நாட்களும் பிரச்சனைகள் வெடித்துக்கொண்டிருந்தது. குணசேகரன் தன்னுடைய வீட்டு மருமகளை நடத்தும் விதத்திற்கு ஜனனி அடிக்கடி குரல் கொடுத்து ஒவ்வொரு முறையும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் குணசேகரனுக்கு பிரச்சனை கொடுக்கும் விதமாக ஜீவானந்தம் கேரக்டர் அறிமுகமாகி இருக்கிறார். பட்டம்மாள் கோமாவில் இருந்து நினைவு வரும் போதெல்லாம் ஜீவானந்தம் வந்தானா? என்று மட்டும் கேட்கிறார்.
இதனால் ஜனனிக்கு மட்டுமல்லாமல் மற்ற மருமகளுக்கும் ஜீவானந்தம் யார்? அவருக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன உறவு? எதற்காக பட்டம்மாள் இப்படி கேக்குறாங்க? என்று பெரும் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது பட்டமாள் ஷேர் 40% ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது. அதே நிலையில் சொந்த கம்பெனியிலிருந்து ஜீவானந்தம் குணசேகரனை தூக்கி வெளியே வீசி இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதே நேரத்தில் சில ரசிகர்கள் இனி கதை இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் கதையாக இருக்கும் என்று சில காரணங்களை சொல்லி வருகின்றனர். அதை குறித்து விவரமாக பார்க்கலாம். ஜீவானந்தம் யாராக இருக்கும் என்றால் ஒருவேளை ஈஸ்வரியை காதலித்து அவருடைய அப்பாவால் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நபராக தான் இருக்கும்.
ஈஸ்வரிக்கும் குணசேகரனுக்கும் திருமணம் நடந்து பிறகு இனி தன்னால் பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கி போன அந்த நபர் அப்பத்தாவை யதார்த்தமாக சந்தித்து அப்பத்தாவால் படித்து பெரிய நிலைமைக்கு வந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அப்பத்தாவோடு சேர்ந்து பல புரட்சிகரமாக செயல்பாடுகளையும் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் அப்பத்தா அடிக்கடி வெளியே சென்று விட்டு ஒரு சில நாட்கள் கழித்து வருகிறார். வீட்டில் உள்ளவர்களிடமும் தான் எங்கு போகிறேன் என்பதை சொல்லாமல் இருந்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் ஜீவானந்தத்தை போலவே ஈஸ்வரியை காதலித்த அதே நபர் உடல் மொழியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுபோல ஈஸ்வரியின் அப்பாவிடம், ஈஸ்வரியை காதலித்த நபர் நான் புரட்சிகரமான கவிதைகளை சுவற்றில் எழுதுவேன் என்று சொல்லும் போது, அவர் கூட நீங்க கஷ்டப்பட்டு பணக்காரங்க ஆனவங்க வில்லன் என்று சொல்லிவிட்டு அலைகிற கூட்டம் தானே? என்று சொல்வார். அதேபோல தானே இப்போதும் ஜீவானந்தம் நடந்து கொண்டிருக்கிறார்.
அதனால் அந்த நபராக தான் ஜீவானந்தம் இனிவரும் எபிசோட்டில் காட்டப்படுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் ஏற்கனவே ஜீவானந்தத்தால் கம்பெனியை இழந்த குணசேகரன் இனி ஈஸ்வரி விஷயத்தில் ஜீவானந்தம் பற்றிய உண்மையும் குணசேகரனுக்கு தெரிந்தால் என்ன மாதிரி நிலைமை மாறும் என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. ஒருவேளை இதே போல கதை போய்க்கொண்டிருந்தால் வேற லெவலில் இதற்கான வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications