வேலூர் பொண்ணு.. எதிர்நீச்சல் சீரியல் “கொற்றவை” யார் தெரியுமா? இத்தனை அழகி பட்டங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புதியதாக ஐபிஎஸ் அதிகாரியாக கொற்றவை கேரக்டரில் நடிகை தாட்சாயினி சாந்த சொரூபன் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் யார் அவர் யார்? எப்படி இந்த சீரியலில் அறிமுகமானார் என்ற தகவல்களை விரிவாக பார்க்க போகிறோம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த சீரியலில் கொற்றவை என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

கொற்றவை அறிமுகமான முதல் நாளே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதனாலே இளைஞர்கள் யார் இவர் என்று இணையத்தில் தேட தொடங்கி விட்டனர். அவர்களுக்கு சில தகவல்களை இதில் பார்க்கலாம். அந்த வகையில் எதிர்நீச்சலில் கொற்றவையாக நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் தாட்சாயனி சாந்த சொரூபன். இவர் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் தானாம்.
வேலூர் பொண்ணாக இருக்கும் இவர் அங்கே தான் படிப்பு எல்லாம் முடித்திருக்கிறார். அதுபோல தாட்சாயணி அப்பா ஆர்மியில் வேலை பார்த்து இருக்கிறார். அப்பா ராணுவத்தில் வேலை பார்த்ததால் இவர் அம்மாவுடைய செல்லமாம். எப்போதும் அம்மாவோடு தான் இருப்பாராம். அதுபோல எந்த இடத்திற்கு சென்றாலும் அம்மாவோடு தான் செல்வாராம். அடிக்கடி தன்னுடைய அம்மாவோடு எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல தாட்சாயினிக்கு சின்ன வயசுல இருந்தே மாடலிங் மேல அதிகமா ஆர்வம் இருந்திருக்கு. அதனாலேயே இவர் ஒரு மாடலாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருடைய விடாமுயற்சிக்கு பலனாக 2021 ஆம் ஆண்டு நடந்த நியூ தமிழ்நாடு அழகி போட்டியில் இவர் பங்கேற்று அதில் இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் 2021 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சவுத் இந்தியன் போட்டியிலும் கலந்து கொண்டு டாப் 6 இடங்களுக்குள் வந்திருக்கிறார். அதோடு இவர் பல விளம்பரங்கள் ஷார்ட் பிலிம் போன்றவற்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு 2022 ஆம் ஆண்டு "யார் அவள்" என்கிற ஆல்பம் பாடலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த பாடலிலும் இவர் அழகாக பர்பாமன்ஸ் செய்து இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து விஜய் டக்கரில் சம்திங் சம்திங், பேட்டை ராப் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல இவருடைய சமூக வலைதள பக்கங்களில் பார்க்கும்போது அதிகமாக மாடலிங் புகைப்படங்கள் தான் இடம் பிடித்திருக்கும். அதனாலேயே இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அதனாலேயே இவருக்கு அதிகமான வாய்ப்புகளும் வர தொடங்கி இருக்கிறது. அதுபோலத்தான் இவர் விதார்த் நடிப்பில் வெளியான "பயணிகள் கவனிக்கவும்" என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதுபோலவே மாடலிங்கில் மட்டுமல்லாமல் படிப்பிலும் படுசுட்டியாக இருக்கும் இவருக்கு இப்போது எதிர்நீச்சல் சீரியலில் ஐபிஎஸ் அதிகாரி கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவர் அறிமுகமான முதல் காட்சிகளையே மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார். இவர் தான் இனி தர்ஷினியை காப்பாற்றப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் இவரை பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். காரணம் கதாநாயகி ஜனனியை விடவும் இவர் போல்டான கேரக்டராக இருப்பதால் இவருக்கு மக்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

அதுபோல இந்த சீரியலில் அடிக்கடி புது புது கேரக்டர்கள் வருவது வழக்கம் தான். அந்த மாதிரி தான் சமீபத்தில் கூட ராமசாமி மெய்யப்பன், கிருஷ்ணசாமி மெய்யப்பன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் என பலர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது கொற்றவையாக தாட்சாயினி சாந்த சொரூபன் அறிமுகம் ஆகி இருக்கையில் இவருடைய நடிப்பு உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications