மாரிமுத்து இதை செய்யாமல் இருந்திருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.. சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி
சென்னை: திரைப்பட இயக்குனரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட அசெளகரியம் காரணமாக மாரிமுத்து அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்திருந்தார். இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேசியிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் சின்னத்திரையில் மூலமாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார்.
ஆனால் அதற்குள் அவருடைய வாழ்க்கை முடிந்து போனது பலருக்கு சோகம் தான். நேற்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு சில மணி நேரங்களிலே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரே தைரியமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருடைய உயிர் பிரிந்தது. இது சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை ரசிகர்கள் நடிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இது குறித்து நேற்று காலை முதல் திரை உலகினர் மாரிமுத்துவின் மரண செய்தியை கேட்டு கடும் சோகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர் இறந்ததற்கான காரணத்தை பற்றி அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆனந்தகுமார் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, நெஞ்சுவலி வந்தபோது மாரிமுத்து அவரே தான் காரை ஓட்டிட்டு வந்தாரு.
கார் ஓட்டிட்டு வந்த அவரால் காரை விட்டு கீழே இறங்கவே முடியவில்லை. அவருக்கு மூச்சு விடவும் கஷ்டமாக இருந்தது. எல்லா ட்ரீட்மெண்டையும் ஆரம்பிச்சோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியல. வாயில நுரை நுரையா வந்து கொண்டு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு சொன்னோம். அவங்க ஏற்றுக் கொண்டாங்க. பின்னர் எங்களுடைய ஆம்புலன்ஸ் தான் அவருடைய உடலை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு தொடர்ந்து பேசியவர் மாரிமுத்து தானே கார் ஓட்டிட்டு வராமல் வேறு யாராவது வைத்து கார் ஓட்டிட்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். இப்படி நெஞ்சு வலிக்கும் போது ரொம்ப அழுத்தம் கொடுக்கக் கூடாது. இது மாதிரியான டைமில் கார் ஓட்டவோ, நடக்கவோ, வேற ஏதாவது கஷ்டமான வேலைகளையோ பண்ண கூடாது என்று டாக்டர் ஆனந்தகுமார் பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications