எதிர்நீச்சல்: ஏமாந்த ஞானம்.. கன்னத்தில் அறைந்த ரேணுகா.. மீண்டும் இப்படியா ஆகணும்? இது மோசம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஞானம் தொடங்கி இருக்கும் கருவாட்டு கடையை போலீஸ்காரர்கள் வந்து மூடி இருக்கின்றனர். இதனால் கோபமான ரேணுகா ஞானத்தை கன்னத்தில் பளார் என்று அறைந்து இருக்கிறார்.
இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் ஒவ்வொரு முறையும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்க்கிறோம் ஜெயிக்கிறோம் என்று ஒவ்வொரு முறையும் சபதம் போடும் எதிர்நீச்சல் பெண்கள் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது எதிர்நீச்சல் பெண்களோடு சேர்ந்து குணசேகரின் தம்பிமார்களும் குணசேகரனை எதிர்த்து சபதம் போட்டு மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. ஒருமுறையாவது குணசேகரன் தோற்று எதிர்நீச்சல் பெண்கள் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நெடுநாள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்ஷினியின் திருமணத்தில் குணசேகரன் தோற்று இருந்தார். அதிலும் பெரியதாக எதிர்நீச்சல் பெண்கள் ஒன்றும் சாதிக்கவில்லை. கடைசி நேரத்தில் ஜனனி போட்ட பிளானால் அவருடைய தங்கை மண்டபத்துக்குள் வந்திருந்தார்.
அதுவரைக்கும் இரண்டு கெட்டான் மனதில் இருந்த சித்தார்த் கடைசியில் அஞ்சனா கழுத்தில் தாழி கட்டி இருந்தார். இதுவும் பெரிய சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் ஜனனியின் அப்பா இதுபோல்தான் அவருடைய அம்மாவை திருமணம் செய்திருந்தார். ஆனால் இப்போது சில வருடங்கள் கழித்து மீண்டும் ஜனனியின் அப்பா குடும்பத்தோடு அவர் சேர்ந்து விட்டார். அதுபோல சித்தார்த் எப்போது வேண்டுமானாலும் மனம் மாறலாம்.
இப்படியான நிலையில் மீண்டும் குணசேகரனை நாங்கள் ஜெயிக்க போகிறோம் வாழ்க்கையில் முன்னேற போகிறோம் என்று ஒரு பக்கம் வீட்டில் இருக்கும் பெண்களும் குணசேகரின் தம்பிமார்களும் வீர வசனம் பேசி ரேணுகாவின் அம்மா கொடுத்த பணத்தை வைத்து ஞானம் கருவாட்டுக்கடை பிசினஸ் தொடங்கியிருந்தார். ஆரம்பத்திலிருந்து ரேணுகா இந்த பிசினஸ் தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்று அவர் நினைத்த மாதிரியே கரிகாலன் ஏமாற்றிக் கொண்டு வந்த பொருட்களை வைத்து தான் ஞானம் கருவாட்டுக்கடை பிசினஸ் தொடங்கி இருக்கிறார். இதனால் போலீஸ் வந்து தடுத்து நிறுத்தி இருக்கிறது. கரிகாலனும் கடை திறப்பு விழாவுக்கு வந்து, போலீசை கண்டதும் பதுங்கி ஓடிப் போய்விட்டார். இதனால் கோபமான ரேணுகா ஞானத்தின் கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் உன் பிள்ளைங்க என்னை எதிர்க்கிறேன்னு சொல்லி மீண்டும் என்கிட்ட தோத்துக்கிட்டே இருக்கிறாங்க என்று அவர் தான் ஹீரோ போல வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்களுக்கு இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
பெண்கள் முன்னேற்றம் பெண்கள் முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. ஈஸ்வரி தொடங்கிய மோட்டிவேஷன் ஸ்பீக்கிங் எங்கே போச்சு என்று தெரியவில்லை. அது போல நந்தினி தொடங்கிய நாட்டி புட்ஸ் என்ன ஆனது? அதைப்பற்றி ஒரு பேச்சும் இல்லை. ஆரம்பத்தில் தான் கதிர் நந்தினிக்கு பிசினஸ் தொடங்குவதற்கு இடைஞ்சலாக இருந்தார்.
ஆனால் இப்போது கதிர் சப்போர்ட் செய்கிறார். அதனால் இப்போது அந்த பிசினஸ் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது போன்று கதையை கொண்டு போகலாம். ஆனாலும் நந்தினி இன்னமும் கதிர் வேலை செய்ய வேண்டும் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல ஜனனி நாங்கள் புது பிசினஸ் தொடங்க போறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பிசினஸும் இன்னும் முதல் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தான் இருக்கிறது.
இப்படியாக எதிர்நீச்சல் பெண்கள் எல்லா முறையும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை புரிந்து கொண்டு இவர்கள் பக்கம் வந்த ஞானமும் இப்போது மீண்டும் தோற்றுப் போய் இருக்கிறார். இதனால் இவர் இனி பழையபடி தன்னுடைய அண்ணன் பக்கம் சாய போகிறாரா? என்று யோசிக்க வைக்கிறது.
எது எப்படியோ ஆரம்பத்தில் சீரியலுக்கு இருந்த விறுவிறுப்பு இப்போது குறைந்து கொண்டே வருகிறது. சீரியல் தரப்பினர் பெண்களின் முன்னேற்றத்தை வேகப்படுத்தினால் தான் இதை பார்க்கும் ரசிகர்களும் இன்ஸ்பிரேஷன் ஆவார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications