Kalyana Veedu Serial: அம்மா என்றாலும் பெண் பிள்ளையை இப்படி அடிக்கலாமா?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் இரவு 7:30 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருது. திருமுருகன் சீரியல்களில் கல்யாண வீடு சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே எமோஷன் அதிகம்தான்.
கோபியின் கடைசித் தங்கை சவீதா, பார்க்கில் ஆண் நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தார் என்று, அக்கா அனுசுயா புருஷன் வீட்டில் வந்து சொல்லிவிடுகிறார். அம்மா, அக்கா ரெண்டு பேருமே ஆத்திரம், கோபத்தின் உச்சத்துக்கு போயிடறாங்க.
பாட்டி நிதானமா.. அந்த வயசுக்கே உரிய பக்குவத்தோடு இருக்காங்க. சவிதா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அம்மா அவளை போட்டு அடிக்கறாங்க பாருங்க...அடி ஒவ்வொன்றும் இடி.

வேலைக்கு போகும் பெண்
டெல்லியில் வசிக்கும் கோபியின் குடும்பம் நடுத்தர வர்க்க குடும்பம்.. இந்த குடும்ப பாரத்தை சுமக்க தானும் தயாராகி வேலைக்கு போகிறாள் ஒருவன் இவளை தொந்திரவு செய்துக்கொண்டே இருக்கிறான். தவிர்த்துவிட்டு இவள் செல்கையில், பார்க்கில் பேசி முடிவெடுக்கலாம் என்று பார்க் போகிறாள்.

ராம் சகவாசம்
அக்கா புருஷன் ராமின் கெட்ட சுகவாசத்தைத் தெரிந்துகொண்ட சவீதா, அவனைப் பற்றி வீட்டில் சொல்லும்போதுதான்,. அவன் தான் தப்பிக்க சவிதவை இப்படி போட்டுக்கொடுத்து விடுகிறான். என்னதான் இருக்கட்டுமே வயதுக்கு வந்த, சுய காலில் நின்று சம்பாதிக்கும் ஒரு பெண்ணை, தப்பு செய்துவிட்ட சிறுமியை அடிப்பது போல அம்மாவும், அக்காவும் மாத்தி மாத்தி மொத்தி எடுக்கறாங்க.

பெண் பிள்ளையை அடிக்கலாமா?
தோளுக்கு உயர்ந்துவிட்டால் தோழன் என்று ஆண் பிள்ளைகளை அடிப்பதில்லை. பெண் பிள்ளைகள் மட்டும் அப்படி இல்லையா? பின்னாளில் இவள் புருஷனிடமும் இப்படித்தான் அடி வாங்குவது என்பதற்கு பழகிக் கொள்கிறாள். குழந்தைகளை பெற்றோரே அடிப்பது என்பது தவறு என்று சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கும் சமூகத்தில், சீரியலில் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று காண்பிக்கிறார்கள்.

லாக்டவுன் நேரத்திலும்
இந்த லாக்டவுன் நேரத்திலும் பெண்களுக்கு வன்கொடுமை நிகழ்கிறது.. அதுவும் வீட்டில் என்று செய்திகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. கரணம் இப்படி எல்லாம் இன்னும் சீரியல்களில் காட்சிகள் வைத்தால் அப்படித்தான் நடக்கும். பெண்களை மற்றவர் கை நீட்டி அடிக்கும்போது, பெண்களுக்கு சுள்ளென்று கோவம் வர வேண்டும். அந்த அளவுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர் வளர்க்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications