ஜெயலலிதா எழுதிய கதை ரஜினிகாந்த் வாழ்க்கையில் ரியலாக நடந்ததாமே! 80-களில் நடந்த டிவிஸ்ட் இதுதான்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு கதையை எழுதினார். அது ரஜினிகாந்த்- லதாவின் திருமணத்துடன் ஒத்து போயிருக்கிறது என்பது தெரியுமா? அது போல் நடிகை அம்பிகாவும் பத்திரிகைகளுக்கு கதை எழுதியுள்ளாராமே!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ஒரு கல்லூரி மாணவி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரை தன் கல்லூரி விழாவுக்காக அழைக்கப் போகிறார். அங்கு அந்த மாணவிக்கும், நடிகருக்கும் அன்பு ஏற்படுகிறது. நாளடைவில் காதலாகி, திருமணம் வரை செல்கிறது.

திருமணத்துக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. இது ஒரு கதையின் தொடக்கம். இந்தக் கதையின் நாயகனான நடிகர் ராஜிவ் மற்றும் கல்லூரி மாணவி உஷாவின் கதை நடிகர் ரஜினி-லதா அவர்களின் உண்மைக்கதை போல இல்லை?.
ஆனால் இதை ரஜினிகாந்த் திருமணம் நடக்கும் முன்பே ஒரு கதையாக எழுதியதும் அப்போது ஒரு நடிகை தான். ஆம்...பின்னாளில் புரட்சித்தலைவியாக மாறிய செல்வி.ஜெயலலிதா தான் அவர்.
ஜெயலலிதா அவர்கள் 'நதியை தேடி வந்த கடல்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் கல்கி பத்திரிக்கை ஆசிரியர் அவரிடம் தங்கள் பத்திரிக்கைக்காக ஒரு கதை எழுத கேட்கிறார். அவரோ தான் பிஸியாக இருப்பதால் முன்பு 'ஈவ்ஸ் வீக்லி' என்கிற பத்திரிக்கைக்காக ஆங்கிலத்தில் எழுதிய நாவலை தமிழாக்கம் செய்து வெளியிட அனுமதி தருகிறார்.
அப்படி 'உறவின் கைதிகள்' என்கிற பெயரில் ஜெயலலிதா எழுதியாக தொடராக வந்தது அந்த கதை. 80களில் நிறைய பத்திரிக்கைகள் சினிமா செலிப்ரிட்டிகளை தொடர் எழுத சொல்லி சர்க்குலேஷனை எகிற வைத்ததெல்லாம் நடந்திருக்கிறது. நடிகை அம்பிகா எழுதிய தொடர்கதையை படித்த ஞாபகம் இருக்கிறது. கமல் 'தாயம்' என்கிற கதையை ஆசிரியர் மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் எழுதினார்.
வாணி கமல் அவர்கள் 'அவர்' என்கிற தொடரை கமல் பற்றி குமுதத்தில் எழுதினார். சாவித்திரி கதை தொடராக வந்திருக்கிறது. பாக்யராஜின் 'மௌனகீதங்கள்' பகுதி வரை தொடராக வந்து படம் பார்க்க ஆவலை தூண்டியது நிஜம்.
அது படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அவரே தனது பாக்யா இதழில் எழுதிய கதையை தேவர் பிலிம்ஸ் பிரபு நடிக்க படமாக எடுத்தது. 'பொண்ணு பாக்க போறேன்' என நினைக்கிறேன். பாக்யராஜுக்காக அவரே எழுதிய ரோலை பிரபுவின் தம்பி மனோவுக்கு கண்ணாடி மாட்டி அறிமுகப்படுத்தினார்கள்.
சரி...உறவின் கைதிகளுக்கு வருவோம். செல்வி.ஜெயலலிதா 80ல் எழுதிய உறவின் கைதியில் ட்விஸ்ட் என்னன்னா உஷா என்கிற பெண்ணை நடிகர் ராஜீவ் என்பவர் காதலிக்க திருமணம் வரை செல்கிறார்கள். கடைசியில் மாப்பிள்ளையாக வருபவர் ராஜீவ் என்பவரை பார்த்ததும் உஷாவின் தாயார் கல்யாணி அதிர்ந்து போகிறார். காரணம் ராஜீவ் தான் தாயாரின் முன்னாள் கணவன். பணக்கார வீட்டு பெண்ணான கல்யாணி வீட்டை எதிர்த்து திருமணம் செய்யும் ராஜீவ்வை ஒரு கட்டத்தில் பிரிகிறாள். தன் கர்ப்பத்தையும் அவனிடம் மறைத்து விடுகிறாள். க்ளைமேக்ஸாக ராஜீவ், உஷா தற்கொலை செய்து கொள்ள, கல்யாணி மனநல மருத்துவமனையில் இருப்பதாக கதை முடிகிறது. Twists and Turnsக்காக ரொம்ப சிந்தித்திருக்கிறார்கள் போல 80களில்.... என தெரிவித்துள்ளார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications