என்னாது மியா கலிஃபா பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறாரா? அன்னிக்கு அப்படி சொன்னாரே! இப்ப மட்டும் என்னவாம்?
மும்பை: நடிகர் சல்மான் கான் தொகுத்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு என்ட்ரியாக ஆபாச படத்தின் நடிகை மியா கலிஃபா கலந்து கொள்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி முதலில் இந்தியில் தொடங்கியது. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடைபெறுகிறது. இதில் இந்தி நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சமூகவலைதளங்ளில் வைரலாக பரவியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. அந்த வகையில் மியா கலிஃபாவும் பிக்பாஸில் கலந்து கொண்டால் அவருக்கும் படவாய்ப்புகள் வரும். அப்படி வரும் பட்சத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பயங்கர டஃப் கொடுக்கும் நடிகையா மியா உருவெடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

வதந்தி
இந்த நிலையில் இது போல் வதந்திகள் வருவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியானது. இதற்கு மியா மறுத்தார். அப்போதே மியா கூறுகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதாவது நான் இந்தியாவில் ஒரு போதும் கால் எடுத்து வைக்க மாட்டேன்.

பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கு ஆர்வம் இல்லை
அப்படியிருக்கும் போது நான் பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கு ஆர்வம் இருப்பதாக கூறுபவர்களை கண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மியா வெளியிட்ட டவிட்டர் பதிவில் ஆபாச படங்கள் மூலம் நான் கோடிகளில் புரண்டு வருவதாக மக்கள் கருதுகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். என்னிடம் மொத்தமாக இதுவரை 12 ஆயிரம் டாலர் ஊதியத்தை நடித்து பெற்றுள்ளேன். இதற்கு மேல் தாண்டியதில்லை.

ஆபாச படங்களில்
ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலை தேடுவது என்பது கடினமான செயலாகும் என தெரிவித்திருந்தார். கடந்த 2014 - 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3 மாதங்கள் மட்டும் ஆபாச படங்களில் நடித்தார். அந்த மூன்று மாதங்களில் பல கோடிகளை சம்பாதித்ததாக பலர் கூறினர். ஆனால் ஆபாச படங்கள் மூலம் தான் 12 ஆயிரம் டாலர் மட்டுமே சம்பாதித்ததாக மியா தெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் காலடி எடுத்து வைக்க மாட்டேன்
இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்க மாட்டேன் என மியா கூறியிருந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவார் என்பது வதந்தி என சொல்லப்படுகிறது. இது மியா ரசிகர்களுக்கு இடி விழும் செய்தியாக மாறியுள்ளது. பிக்பாஸ் சீசன் 9 முதல் மியா குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. முதலில் செய்தியாக வெளியாகும் நிலையில் பிறகு அது வதந்தியாக மாறிவிடுகிறது. பிக்பாஸ் மூலம் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு மியாவுக்கு கிடைத்தால் அவர் சன்னி லியோனுக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலுக்கே மோசம் என்பதை போல அந்த தகவலே வதந்தி என குறிப்பிடப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications