"பூ" நடிகையிடம் காதல்.. பாக்யராஜூக்கு சங்கடம்.. பாரீஸ் டூ சென்னை.. மனைவியின் மகிழ்ச்சியான நினைவலைகள்
சென்னை: பிஸியான நடிகையாக நடித்து கொண்டிருந்த பூர்ணிமாவை, தான் எப்படி, எங்கே முதன்முதலில் சந்தித்தேன், திருமணம் செய்து கொள்வதாக சொன்னது எப்படி? என்பது குறித்து பிரபல டைரக்டர் கே.பாக்யராஜ் விலாவரியாக கூறியிருக்கிறார்..
மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் Touring Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கே.பாக்யராஜ், "பிரவீனா இறந்த சமயம், அந்த சோகத்திலேயே இருந்தேன்..

யாரை பார்த்தாலும், துக்கம் விசாரித்து கொண்டேயிருந்தனர். அதனால், மனதுக்கு ரிலேக்ஸாக எங்காவது போய்விட்டு வரலாம் என்று, நண்பர்களுடன் சேர்ந்து மும்பை சென்றேன்.. அங்கே எனக்கு யாரையும் தெரியவில்லை.. ஸ்ரீராக் ஓட்டலில் தெரிந்த முகங்கள் யாராவது இருக்கலாம் என்பதால், அங்கு சென்றபோதுதான் பிஆர் செல்வத்தை பார்த்தேன்.
நவராத்திரி பூஜை
பூர்ணிமா பாரீஸ் செல்வதால் அவரை வழியனுப்ப மும்பை வந்ததாக சொன்னார்.. உடனே நான், "பூர்ணிமாவை விசாரித்ததாக சொல்லுங்கள்" என்று அவரிடம் சொன்னேன். இதைக்கேள்விப்பட்ட பூர்ணிமா, நம்ம ஊருக்கு வந்து, காபி, டீ கூட தராமல் அனுப்பக்கூடாது என்று நினைத்து, அவரும், அவரது அம்மாவும் எனக்கு போன் செய்து அழைத்தனர். உடனே நானும் சென்றேன்..
அன்றைய தினம் நவராத்திரி பூஜை நடந்து கொண்டிருந்தது.. மும்பையில் இந்த விழா மிகவும் பிரபலம் என்பதால், அதை பற்றி என்னிடம் பூர்ணிமா விவரித்து கொண்டே இருந்தார்.. பூர்ணிமா மகிழ்ச்சியுடன் சொல்ல சொல்ல, நான் பூர்ணிமாவையே பார்த்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த ஸ்பார்க் தோன்றியது.
பாரீஸ் பயணம்
காரணம், சினிமாவில் பெரிய அளவுக்கு ரீச் ஆகிவிட்டேன்.. அருகிலிருந்து என்னை கவனிக்க அம்மா, அப்பா யாரும் இல்லை. சினிமாவில் திசைமாறி சென்றுவிடக்கூடாது என்பதற்காக, எனக்கு நானே கால் கட்டு போட்டுக்கொண்டால்தான் உண்டு என நினைத்தேன்.
பூர்ணிமாவின் குணமும் எனக்கு பிடித்து போய்விட்டது. அவரை திருமணம் செய்ய மனசுக்கு தோன்றிவிட்டதே தவிர, அதை அவரிடம் எப்படி கேட்பது என தெரியவில்லை. காரில் ஏறி கிளம்பும்போது, "பாரீஸ் சென்றதும் போன் பண்ணு" என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு ஒருவாரம் கழித்து பூர்ணிமாவிடமிருந்து போன் வந்தது.. அப்போதுகூட நான் விஷயத்தை சொல்லவில்லை.
பாரீஸ் தேவாயலம்
"சென்னை வந்ததும் ஒரு விஷயம் பேசணும்" என்று மட்டும் சொன்னேன். நான் இப்படி ஒவ்வொரு முறையும் தயங்குவதை பார்த்து பூர்ணிமாவுக்கு லேசான சந்தேகம் அப்போதே வந்து, ஓரளவு யூகித்துள்ளார். ஒருவேளை நல்ல விஷயமாக இருந்தால் நடக்கட்டுமே என்று நினைத்து, அங்குள்ள பாரீசில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தித்து கொண்டால், அப்படியே நடக்குமாம். அதனால் பூர்ணிமா, அந்த சர்ச்சுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் எனக்கு தெரியாது..
அவர் பாரீசிலிருந்து சென்னைக்கு வந்ததுமே நான்தான் பூர்ணிமாவை ஏர்போர்ட்டிலிருந்து காரில் அழைத்து வந்தேன். அப்போது வரும்வழியில்தான் திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக சொன்னேன். உடனே தன்னுடைய வீட்டில் வந்து பேச சொன்னார். இரு குடும்பமும் பேசி, அப்படித்தான் திருமணம் நடந்தது" என்று விலாவரியாக கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications