பிரம்மாண்ட வளையத்தில் நடிகை.. ஜவுளி கடை விளம்பரம் டூ சொந்த ஹெலிகாப்டர்! கே.ஆர். விஜயா சபாஷ்: பிரபலம்
சென்னை: .. அந்த காலத்தில் கிளாமர் நடிகை என்றாலே அது கேஆர்விஜயா தான்.. கேஆர் விஜயா நடிக்காத கிளாமர் வேடங்களே கிடையாது.. இன்று அந்த இடத்தை நயன்தாரா தக்க வைத்துள்ளார்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா கூறியிருக்கிறார். அத்துடன், பழம்பெரும் நடிகை கேஆர் விஜயாவுக்கு திரைப்படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் விலாவரியாக கூறியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், "கே.ஆர். விஜயாவின் பூர்வீகம் கேரளா.. அவரது அப்பா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. ரிடையர்மென்ட்டுக்கு பிறகு நகைக்கடை வைத்தார் கேஆர் விஜயாவின் அப்பா.. ஆனால், பெருத்த தோல்வியை சந்தித்துவிட்டார்.. அதனால் அந்த கடனிலிருந்து தப்பித்து, மனைவி, மகள்களுடன் நம்ம பழனியில் செட்டில் ஆகிவிட்டார்.

பழனியில் படிக்கும்போதே கேஆர் விஜயாவுக்கு நடிப்பில் ஆர்வம் காரணமாக பள்ளி நாடகங்கள், தெரு நாடகங்களில் நடித்தார்.. நல்ல முகவெட்டு இருந்ததால், சுற்றுவட்டாரங்களில் கேஆர் விஜயா பிரபலமானார். அப்படித்தான் உள்ளூரிலேயே ஜவுளி கடை விளம்பரம் ஒன்று கேஆர் விஜயாவுக்கு தேடி வந்தது. அந்த விளம்பரத்தின் போட்டோவுக்கு போஸ் தந்தார்..
கற்பகம் பட வாய்ப்பு
ஸ்டில்ஸ் ரவி என்பவர் கண்ணில் இந்த விளம்பரம் பட்டுவிட்டது... திரைப்படத்தில் நடிக்கக்கூடிய அழகு கேஆர்விஜயாவிடம் இருப்பதை கண்டு, நிறைய போட்டோக்களை எடுத்தார் ஸ்டில் ரவி.. அவர் மூலம் அனைத்து ஸ்டுடியோ கம்பெனிகளுக்கும் கேஆர் விஜயாவின் போட்டோக்கள் சென்றன.. அப்படித்தான் கற்பகம் பட வாய்ப்பு வந்தது. இந்த ஸ்டில்ஸ் ரவியை, தன்னுடைய சொந்த தங்கைக்கே பின்னாளில் திருமணம் செய்து வைத்தார் கேஆர் விஜயா.
கேஆர் விஜயாவின் முதல் படமே சூப்பர் ஹிட்.. பிறகு, எம்ஜிஆர், சிவாஜி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.. அந்த காலத்திலேயே ஹெலிகாப்டர், விமானத்தில் ஷூட்டிங்குக்கு கேஆர் விஜயா வருவார் என்று சொல்வார்கள். எப்படியென்றால், ஸ்பென்சர் வேலாயுதம் நாயுடுவின் 2வது மனைவியானார் கேஆர் விஜயா.. ஆனால் முழுக்க முழுக்க சுதர்சன் சிட்ஃபண்ட்ஸ் & பைனான்ஸ் வேலாயுதம் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த தமிழ்நாடு ஒரு வேட்டைக்காடு
எனவே. பெரும் பணக்காரர்களிடமிருந்து முதலீடுகளை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பிசினஸ் பணிகளுக்கு கேஆர் விஜயாவை பயன்படுத்தினார் வேலாயுதம். இதற்காகவே கேஆர் விஜயா வீட்டில், மிகப்பெரிய செல்வந்தர்களுக்கும், விஐபிகளுக்கும் விருந்து நடக்கும். எல்லாருமே மலையாள லாபிதான்.. தன்னுடைய கணவரின் நிறுவனத்தில் டெபாசிட் செய்யுங்கள் என்று அவர்களிடம் கேன்வாஸ் செய்வார் கேஆர் விஜயா. இந்த தமிழ்நாடு ஒரு வேட்டைக்காடு..
அந்தக்கால பிரம்மாண்டம்
திரைப்பட பிரபலம், தொழிலதிபர் மனைவி, உச்ச நடிகர்களுடன் நட்பு என உயர்ந்தார். சென்னையிலிருந்து ஊட்டிக்கு ஷூட்டிங் என்றால், கோவை வரை தனி விமானத்திலும், பிறகு ஊட்டிக்கு ஹெலிகாப்டரிலும் வருவார் கேஆர் விஜயா.. இதெல்லாம் அந்த காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டது. கிளாமர் நடிகை என்றால் அந்த காலத்தில் கேஆர்விஜயா தான்.. கேஆர் விஜயா நடிக்காத கிளாமர் வேடங்களே கிடையாது.. இன்று அந்த இடத்தை நயன்தாரா தக்க வைத்துள்ளார்" என்று கூறியிருக்கிறார்.
-
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்











Click it and Unblock the Notifications