சன் டிவிக்கும் ராடானுக்கும் தொடரும் பந்தம்..... எஸ்... மின்னலே!
சென்னை: சன்டிவியில் ராதிகாவின் ரடான் தயாரிப்பு சீரியல்கள் மாலை நேர டெலிவிஷன் படங்கள் என்று எல்லாத்துக்கும் வரவேற்பு கொடுத்து ராதிகாவுக்கு சன் டிவி ஊக்கம் கொடுத்து வந்தது என்றால் அது மிகையாகாது.
வாரத்தின் இரண்டு நாட்கள் இரவு நேரங்களில் நகைச்சுவை தொடர், திகில் தொடர்...மதிய நேர நெடுந்தொடர் என்று வாய்ப்பு கொடுத்துக்கிட்டுத்தான் இருந்துச்சு.
பெரும்பாலும் ரடானின் மதிய நேர சீரியல்களில் ராதிகாவின் தங்கை நிரோஷா நடிப்பார். ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாகும் ராதிகாவின் சீரியல்களில் சந்திரகுமாரி தவிர வேற எதிலும் நிரோஷா தலை காட்டியதில்லை.

கடந்த சனிக் கிழமை இரவோடு
கடந்த சனிக்கிழமை இரவோடு ரடான் தயாரிப்பின் ராதிகா சீரியலான சந்திரகுமாரி சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. இவரின் தயாரிப்பில் வேறு எந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகிட்டு வருதுன்னு பார்த்தால், மின்னலே என்று ஒரு சீரியல் ஓளிபரப்பாகி வருது. இதில் ராதிகாவின் தங்கை நிரோஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ராதிகா விக்ரம் டெலிஃபிலிம்
லண்டனில் படப்பிடிப்பு நடத்திய ராதிகாவின் ரடான் தயாரிப்பின் டெலிஃபிலிம் ஒன்றில் ராதிகாவும், விக்ரமும் ஜோடி நடிச்சு இருந்தார்கள். இந்த டெலிஃபிலிம்க்கு, சேனல் போட்டிகள் அதிகம் இல்லாத காலத்திலேயே சன் டிவி ஞாயிறு திரைப் படத்துக்கான இடத்தை இந்த டெலிஃபிலிம்க்கு தந்து ராதிகாவை கவுரவித்தது.
படம் நல்லாயில்லை.... அவங்க ரெண்டு பேரும் பிசின்ஸ் ரீதியாக எடுத்த முடிவால், நாமும் அந்த படத்தை பார்த்து தொலைக்க வேண்டியதாகி விட்டது.

சித்தி முதல் சந்திரகுமாரி வரை
சித்தி முதல் சந்திரகுமாரி வரை ராதிகா எடுத்த சீரியல்களில் சொதப்பியது செல்லமே சீரியலும், சந்திரகுமாரி சீரியலும்தான்... இதுவரை சன் டிவி பொறுத்துக் கொண்டதே ராதிகாவுக்கு பெரிய விஷயம் என்பதை ராதிகா உணர வேண்டும். சன் டிவியும் ராதிகாவின் ஹிட்களை மறக்க கூடாது.

சீரியல் மின்னலே எப்படி?
ரடான் தயாரிப்பில் சன் டிவி பங்களிப்போடு ஒளிபரப்பாகி வரும் மின்னலே சீரியலை தொடர்ந்து ஒளிபரப்ப ராதிகா நினைப்பாரா இல்லை பாதியிலேயே தனக்கும் சன் டிவிக்குமான பந்தத்தை முடிச்சுக்குவாரா... பார்க்கலாம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications