Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Short Film: அட...நம்ம ஸ்டார்ஸ் வீட்டில் இருந்தே நடிச்சு அசத்தி இருக்காங்களே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஃபேமிலி: எ மேட் அட் ஹோம் ஷார்ட் ஃபிலிம்...! இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்..நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..தெலுகு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இவங்க எல்லாரும் இந்த ஷார்ட் ஃபிலிமில் நடித்து இருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இவர்களுடன் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சோனாலி குல்கர்னி ஆகியோரும் நடித்து இருக்கும் இந்த குறும்படம் முற்றிலும் பிளாக் அன்ட் வொயிட்.

பிரில்ஜோன் பாண்டே. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா & கல்யாண் ஜுவல்லர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த குறும்படத்தை புரோசென்ஜித் சாட்டர்ஜி, சிவா ராஜ்குமோஸ் இயக்கி உள்ளனர்.

 என் கண்ணாடி எங்கே

என் கண்ணாடி எங்கே

வீட்டில் உட்கார்ந்து இருக்கும் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று தனது சன் கிளாஸை பார்க்கவில்லையே என்று நினைவு வருகிறது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே தேடிப் பார்க்கிறார்..காணவில்லை...வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தபடி என் கண்ணாடியை பார்த்தீங்களா என்று கேட்கிறார். யாரும் பதில் குரல் கொடுக்கவில்லை...யாரும் இல்லை போலிருக்கிறது என்று தனக்குள் பேசிக் கொள்கிறார் அமிதாப்.

 நான் தேடுகிறேன்

நான் தேடுகிறேன்

கண்ணாடியை நான் தேடுகிறேன் என்று புறப்படும் ரன்வீர் கபூர், காபி குடித்துக்கொண்டு இருக்கும் மோகன்லால், ஹாலில் உட்கார்ந்து இருக்கும் மம்முட்டி இவர்களிடம் கேட்கிறார். நான் பார்க்கலியே என்று இருவரும் தனித் தனியாக பதில் சொல்கின்றனர்.

 ரஜினி ஸ்டைல்

ரஜினி ஸ்டைல்

ஹாலில் உட்கார்ந்து இருக்கும் ரஜினி ஒரு சூப்பர் சன் கிளாஸ் போட்டுகொண்டு இதோ இந்த கண்ணாடியா எடுத்துக்கோ என்று சொல்லி கண்ணாடியை கழட்டி விட, அது திரும்ப சென்று ரஜினியின் கண்களிலேயே உட்கார்ந்துக்கொள்கிறது. ரஜினியின் இந்த ஸ்டைலை பார்த்து வாய் பிளக்கிறார் ரன்வீர்.

 பாத்ரூமில் சிரஞ்சீவி

பாத்ரூமில் சிரஞ்சீவி

பாத்ரூமில் இருக்கும் சிரஞ்சீவியிடம் ரன்வீர் கபூர் கதவைத் தட்டி சன் கிளாஸ் பார்த்நீங்களா என்று கேட்க, இங்கே எதுக்கு சன் கிளாஸ் வருது என்று திருப்பி கேட்டு.. இங்கே இல்லை என்று பதில் சொல்கிறார் கண்ணாடி பார்த்து சேவ் செய்துக்கொண்டு இருக்கும் சிரஞ்சீவி. கலைத்து போன ரன்வீர் ஆலியா பட்டுக்கு போன் செய்கிறார்.

 இங்கேதான் இதோ

இங்கேதான் இதோ

நான் இங்கேதான் இருக்கேன்.. எதுக்கு போன் பண்றே என்று ஆலியா பட், கண்ணாடியை பார்த்தியான்னு கேட்டதும் அது என்று தலைப் பக்கம் கையை கொண்டு போக, அவர் தலையில்தான் கண்ணாடி இருக்கிறது. உடனே இங்கேதான் இதோ என்று எடுத்து கொடுக்கிறார். அதை ரன்வீர் பிரியங்கா சோப்ராவிடம் கொடுக்கிறார்.

 இப்போ எதுக்கு இது

இப்போ எதுக்கு இது

கண்ணாடியை அமிதாப்பிடம் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா.. வெளியில் யாரும் போகக் கூடாதே..இப்போ எதுக்கு கண்ணாடி என்று கேட்கிறார். இப்போ வெளியில் போக மாட்டேன்.. லாக்டவுன் முடிஞ்சதும் வெளியில் போகும்போது சன் கிளாஸ் வேணும் என்று தேடுவேன்..அதுக்காகத்தான் இப்போதே தேடி வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டேன் என்று சொல்கிறார்.

வீட்டில் பாதுகாப்பாக

சினிமா என்பது இந்தியா முழுக்க ஒன்றுதான். அதை உணர்த்தும் விதமாகவும், எல்லாரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தவும் வீட்டில் இருந்தபடியே எடுக்கப்பட்டு இருக்கும் இந்த குறும்படத்தை சோனி பிக்கர்ஸ் வெளியிட்டு உள்ளது. இதில் வசூலாகும் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+