வாடகை வீட்டில் நுழைந்த ராதிகா.. அம்மாவின் வளையல் பற்றி சொன்னாரே சரத்குமார்? அந்த பங்களாவா? என்னாச்சு
சென்னை: நடிகர் சரத்குமார் வில்லனாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கி, போராடி முன்னுக்கு வந்தவர்.. பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போதும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.. இந்த இரண்டாவது இன்னிங்சிலும் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அத்துடன், தயாரிப்பிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ஹோம் டூர் வீடியோவை சமீபத்தில் சரத்குமார் வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடு பற்றின தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சரத்குமார் நடிகை ராதிகா.. சரத்குமார் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர்.. இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்..

ஈசிஆர் வீடு
சமீபத்தில் வெளியான '3 பிஎச்கே' படம், பட்டிதொட்டியெங்கும் ஓடி, வெற்றியை பெற்றுள்ளது... படத்துக்கு கிரிக்கெட் புகழ் சச்சின் கூட பாராட்டு தெரிவித்திருந்தார்.
சரத்குமார் கட்டிய பிரம்மாண்டமான வீடு சென்னை ஈசிஆரில் உள்ளது.. சமீபத்தில் இந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோவை சரத்குமார் வெளியிட்டிருந்தார்.. அதில், தன்னுடைய மறைந்த தாய்க்காக அவருடைய வீட்டில் செய்திருக்கும் விஷயம், காண்போரை நெகிழ்ச்சிக்கு உண்டாக்கியிருந்தது..
அம்மாவின் கண்ணாடி, வளையல்
அதாவது, தன்னுடைய அம்மாவின் நினைவாக, அவரது வளையல், கண்ணாடி, செயின் போன்றவற்றை பிரேம் போட்டு வைத்து வீட்டில் அழகாக மாட்டி வைத்திருந்தார் சரத்குமார். நான் எப்போதாவது மனம் சஞ்சலப்பட்டால், இந்த இடத்தில் வந்து உட்கார்ந்துடுவேன்.. என்னுடைய அம்மா இப்போதும் வாழ்வதாக நினைக்கிறேன் என்று கண்கலங்கி கூறியிருந்தார். தன்னுடைய அம்மாவிடம் இருந்து அவரது சமையல் கலை தனக்கும் ஒட்டிக் கொண்டதாகவும் அந்த ஹோம் டூர் வீடியோவில் சரத்குமார் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த பிரமாண்டமான வீட்டை விட்டு வெளியேறி, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வாடகை வீட்டிற்கு சரத்குமாரும் ராதிகாவும் குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த வீடு மாற்றம் ஏன் என்பது குறித்த உண்மையான காரணத்தை சரத்குமார், ஒரு பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிரமமான விஷயம்
சரத்குமார் அந்த பேட்டியில், "நாங்கள் வாழ்ந்த ஈசிஆர் வீடு சுமார் 14,000 முதல் 15,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. அந்த வீட்டைப் பராமரிக்க மட்டும் குறைந்தது 15 வேலைக்காரர்கள் தேவைப்பட்டனர்.
அந்த வீட்டின் 7 கதவுகளையும் மூடுவது, திறப்பது என்று பல வேலைகள் இருந்தன. நான் ஷூட்டிங்குக்காக அடிக்கடி வெளியே சென்று விடுவேன். அதனால், ராதிகா மட்டும் தனியாக அந்த பெரிய வீட்டில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
தினந்தோறும் கதவை நான் பூட்டனும், இல்லாட்டி ராதிகா பூட்ட வேண்டியிருக்கும்.. இதை தினமும் செய்வது கஷ்டம்.. இரவு நான் எங்கே இருந்தாலும் என்ன பண்ணுறீங்க வீட்டு கதவை பூட்டியாச்சா? என்று கேட்க வேண்டியிருக்கு.. இல்லாவிட்டால் ராதிகா என்னிடம் கேட்க வேண்டியிருக்கு..
வாடகைக்கு வந்த ஐடி கம்பெனி
எங்கள் மகன் ராகுல் வெளிநாட்டில் படித்து வருகிறான். மகள்கள் கல்யாணமாகி அவரவர் வீட்டில் வசித்து வருகிறார்கள்.. அதனால் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் கடினமாக இருந்தது..
இந்த தனிமையுணர்வு காரணமாகவே நாங்கள் இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தோம்.. அந்த பிரம்மாண்டமான வீட்டை ஒரு ஐடி கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன்.. எளிமையான வாழ்க்கையைத் தேடி ஆழ்வார்பேட்டையில் ஒரு வாடகை வீட்டிற்கு வந்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications