ஹாலில் இருந்து பிரபலத்தை விரட்டியடித்து.. இப்படியுமா இருப்பாங்க? நடிகரின் மோசமான நிலை.. ஸ்ரீ உதாரணம்
சென்னை: "தமிழ் இளைஞர்களின் சிந்தனைகளை கருவிலேயே கலைப்பவர்கள் தான் டைரக்டர்கள்.. பாரதிராஜாவின் இயக்குனர்கள் எத்தனை பேர் இங்கு உள்ளனர்? இளையராஜா புஷ்பவனம் குப்புசாமிக்கு பாட வாய்ப்பையே தர மாட்டார்.. தமிழ் சினிமாவுக்கு இந்த ராஜாக்கள் எல்லாம் சாபக்கேடு என்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன். அத்துடன் நடிகர் ஸ்ரீ போல இன்று பல பேர் சம்பள விவகாரங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.. அதில், "நடிகர் ஸ்ரீ, சிறந்த கதாநாயகன்.. பல படங்களில் நடித்திருக்கிறார்.. ஆர்ஜே பாலாஜி, எஸ்ஆர் பிரபு கூட்டணி, ஸ்ரீயையும் பயன்படுத்தி நிறைய படங்களை எடுத்துள்ளனர்.

ஆனால், ஸ்ரீ நடித்த படங்களில் அவருக்கு சரியாக சம்பளம் தரப்படவில்லை, உழைப்புக்கான ஊதியம் தரப்படவில்லை. இதுவே, கமல், ரஜினி, விஜய், அஜித் என்றால் சம்பளம் தராமல் இருப்பார்களா?
படவாய்ப்பு என்பதே பெரிய விஷயமாகிவிட்டது. அதனால் முதல் 10 படங்களுக்கு பணமே தரமாட்டார்கள். உனக்கு வாய்ப்பு தந்ததுடன், உன்னை பெரிய ஆளாக கொண்டு வருகிறோம் என்று சொல்லி சம்பளம் தர மாட்டார்கள்.. பணத்தை கேட்டால் படத்திலிருந்தே சம்பந்தப்பட்ட நடிகரை ஒதுக்கிவிடுவார்கள்.. இது ஆரம்பத்தில் கமலுக்கு நடந்தது, ரஜினிக்கு நடந்தது.
பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்?
இளைஞர்களிடம் வன்முறையை தூண்டக்கூடியவர்கள், எப்படி இயக்குனர்களாக இருக்க முடியும்? மக்களுக்கு நல்ல கருத்தை கொண்டு சேர்க்கக்கூடிய டைரக்டர்கள் இங்கு இல்லை.. இவர்களின் நோக்கம், ஒரே படத்தில் 100 கோடி, 200 கோடியை எடுக்க வேண்டும் என்பதுதான்.
ஆர்ஜே பாலாஜி, எஸ்ஆர் பிரபுவும் நடிகர் சூர்யாவின் பின்னணியில் உள்ளவர்கள்.. உதயநிதிக்கு நெருங்கிய நண்பர்கள்.. பல கனவுகளுடன் சென்னைக்கு வருகிற பல இணை இயக்குனர்களிடம் கதை திரட்டுகளை திருடி, அவர்களின் வாழ்க்கையையே கசக்கி போடும் வேலையை இன்று பல டைரக்டர்கள் கோடம்பாக்கத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஏராளமான கதை திரட்டு திருட்டு வழக்குகள் இன்று கோர்ட்களில் நிலுவையில் உள்ளன..
கதை திருட்டு வழக்குகள்
தங்களுடைய கதையை திருடிவிட்டார்கள் என்று வழக்கு தொடுத்தாலும், அதிலிருந்து தீர்பபு வருவதற்குள் அந்த படமே ரிலீஸாகி, அதுக்கு 10 பேர் உரிமையாளராகி விடுவார்கள்.. வெறும் திறமை மட்டுமே வைத்துக் கொண்டு, வாய்ப்பு தேடுவோருக்கு பணபலமும், அரசியல் பலமும் இல்லாததால், இதுபோன்று கதை திருடுபவர்களை எதிர்த்து போராட முடிவதில்லை.
இன்று யூடியூப்களில் புகழ்பெற்றிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, அன்று பிரபல சினிமா பத்திரிகையாளராக இருந்தவர்.. 20 வருடங்களுக்கு முன்பு கவுதம் மேனன் ஒரு படம் மட்டுமே எடுத்து வெற்றி தந்திருந்தார்.. எனவே அவரிடம் இணை இயக்குனராக சேர ஆசைப்பட்டு, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்..
கெட் அவுட் சொல்லிட்டாராம்
கவுதம் மேனன் குளிப்பதாக சொல்லி, அவரை ரிசப்ஷனில் உட்கார சொல்லி உள்ளார்கள்.. கவுதம் மேனன் சோபாவில் உட்கார்ந்திருந்த செய்யாறு பாலுவை பார்த்துவிட்டு, என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல், "கெட் அவுட்" என்று சொல்லி வெளியே தள்ளி கதவை அடைத்துவிட்டாராம்.. மனுஷன் மாதிரியே நடந்துக்கலயாம்.. என்கிட்ட இதை அப்பவே சொல்லி வருத்தப்பட்டார் பாலு. ஆனால், இன்று கவுதம் மேனன் மிகப்பெரிய இயக்குனர்.
தமிழ் இளைஞர்களின் சிந்தனைகளை கருவிலேயே கலைப்பவர்கள்தான் டைரக்டர்கள்.. பாரதிராஜாவின் இயக்குனர்கள் எத்தனை பேர் இங்கு உள்ளனர்? தமிழ் நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பே தரமாட்டார்.. புஷ்பவனம் குப்புசாமி பாடுவதற்கு இளையராஜா வாய்ப்பே தர மாட்டார்.. தமிழ் சினிமாவுக்கு இந்த ராஜாக்கள் எல்லாம் சாபக்கேடு.
பல இளைஞர்கள் கனவு
திரைப்பட தொழிலாளர்களுக்கென்று இலவச மருத்துவமனையே இல்லை.. இலவச பள்ளிக்கூடமே இல்லை.. இதயத்தில் ஈரமே இல்லாதவர்கள்தான் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும்.. இவர்களின் வாரிசுதான் ஆர்ஜே பாலாஜி, எஸ்ஆர் பிரபுவும்.
இன்று நடிகர் ஸ்ரீ போல பல இளைஞர்கள் இங்கே சினிமாவில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.. நடிகர் ஸ்ரீ தன்துயரத்தை வெளியே சொல்லிவிட்டார்., ஏராளமானோர் இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள்" என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications