Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூம் போட சொன்ன பிரபல நடிகை.. நாய்க்கும் ஏ.சி ரூம்.. அதைவிடுங்க, விஜய் சேதுபதி செய்த உதவி.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்படியே திட்டமிடாமல் படங்களை எடுத்து கொண்டிருந்தால், பல சிக்கல்களை தமிழ் சினிமா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு 'பல நடிகைகள், ஸ்டார் ஓட்டல் சாப்பாடுதான் கேட்கிறார்கள்.. அதிலும் அவர்கள் சொல்லும் ஸ்டார் ஓட்டலில்தான் சாப்பாடு வாங்கி தர சொல்கிறார்கள்.. சேப்பாக்கத்தில் உள்ள 'நாயர் மெஸ்'ஸிலிருந்து தேங்காய் நெய்யில் பொறித்த மீன்தான் வேண்டும் என்று கேட்பார்கள்.. இந்த மீன் வாங்குவதற்கு ஒரு புரொடக்‌ஷன், அதுக்கு ஒரு கார், அதுக்கு ஒரு நபர், கேரியர்களை எடுத்துட்டு போய்ட்டு வரணும்.

Television Vijay sethupathi famous Actress

நாய்க்கும் ஏசி ரூம் போட்டாச்சு

அதேபோல, ஒரு பிரபல நடிகை நாய் ஒன்றை வளர்க்கிறார்.. இவர் வெளியூருக்கு போனால், அந்த நாயையும் ஃபிளைட்டில் கூட்டிட்டு வருவாங்க.. அதுக்கும் டிக்கெட் போடணும்.. அந்த நாய்க்கும் 5 ஸ்டார் ஓட்டலில் ஏசி ரூம் போடணும்.. நடிகைக்கு ஒரு ரூம், அந்த நாய்க்கும் தனி ஏசி ரூம் போடணும்.

நடிகர், நடிகைகளை புரமோஷனுக்கு கூப்பிட்டால் 2 லட்சம், 3 லட்சம் தந்துடணும்னு கேட்கறாங்க.. எல்லாமே இப்படி வியாபாரமா செய்ய ஆரம்பித்துவிட்டால், தயாரிப்பாளர்களின் காசை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கினால், எப்படி ஒரு தயாரிப்பாளர் நல்லபடியாக படம் எடுத்து முடிப்பார்? இந்த செலவுகள்தான், கடைசியில் நிதிப்பிரச்சனையாக மாறுகிறது.

பிளானிங் இல்லை - கோடிக்கணக்கில் வார்த்தைகள்

பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் தரும் பட்ஜெட் ஒன்றாகவும், படம் எடுக்கும்போது வேறு பட்ஜெட்டாகவும் மாறிவிடுகிறது. தயாரிப்பாளர்களிடம் தரும் பட்ஜெட்டில், எந்த இயக்குனரும் படத்தை எடுத்து முடிப்பதில்லை. பல முன்னணி டைரக்டரிடம் பிளானிங் கிடையாது. என்ன சீன் எடுக்க போகிறோம்? என்ன கதை? எதுவுமே தெரியாமல், லொகேஷன் போய் உட்கார்ந்துட்டுதான் யோசிக்கிறார்கள்.

புதுசா படம் பண்ணலாம் என்று வருபவர்களுக்கு சினிமா என்றால் என்ன? அதன் இலக்கணம் என்ன? என எதுவுமே தெரியாது.. 1 கோடி ரூபாயைகூட இவர்கள் வாழ்க்கையில் கண்ணால் பார்த்திருக்க மாட்டார்கள்.. ஆனால், 8 கோடியில் படம் பண்ணலாம், 10 கோடியில் பண்ணிடலாம் என்று வார்த்தைகளை சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்.

ஒன்பது ரூபாய் நோட்டு

என்னுடைய அப்பா "ஒன்பது ரூபாய் நோட்டு" படத்தை தயாரித்து பூஜை போட்டார். தங்கர் பச்சானை இயக்குனராக புக் செய்து, 65 லட்சம் சம்பளம் பேசி 15 லட்சம் அட்வான்சும் தந்தோம். ஆனால், அந்த படம் ஷூட்டிங் போறதுக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகள்... ஷூட்டிங் போகாமலே 40 லட்சம் செலவாகிவிட்டது.. 4 கோடி சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்து, அப்போதே அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டோம்.

தயாரிப்பாளர்களுக்கு பட்ஜெட் பிரச்சனை வருவதற்கு 3 காரணங்கள் உள்ளன.. நடிகர்கள் கன்னாபின்னாவென்று சம்பளம் கேட்பது, நடிகைகள் செய்யும் அட்ராசிட்டி, பிளானிங் இல்லாமல் டைரக்டர்கள் படம் எடுப்பது, இந்த 3 காரணங்கள்தான்.

விஜய் சேதுபதியின் நல்ல மனசு

50 கோடியில் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார் என்றால், 80 கோடிக்கு செலவுகளில் கொண்டு வந்து அவரை நிறுத்திவிட்டால், அந்த 30 கோடியை ஈடுகட்டுவது யார்? இந்த நெருக்கடி எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இன்று இருக்கவே செய்கிறது. கடைசியில் நடிகர்களுக்கும் இது நிர்ப்பந்தமாக மாறுகிறது. இதுக்கு ஆரம்பத்திலேயே நடிகர்கள் தங்கள் சம்பளத்தை கம்மியாகவும், நியாயமாகவும் கேட்டிருந்தால், சிக்கல்கள் வராது.

96 படத்துக்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. 6 கோடி இருந்தால்தான் படம் ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமை வந்தபோது, விஜய் சேதுபதி, தான் வாங்கிய 6 கோடி சம்பளத்தை திருப்பி தந்தார். அதன்பிறகுதான் 96 படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது. ஒன்றிரண்டு நடிகர்கள் இப்படி செய்கிறார்கள்.. ஆனால், பலரும் உதவி செய்ய முன்வருவதில்லை.

மெர்சல் படத்துக்கு வந்த நஷ்டம்

100 படங்களுக்கு மேல் இயக்கி தயாரித்தவர் தேனாண்டாள் பிலிம்ஸ் ராம.நாராயணன்.. அரும்பாடு பட்டு 45 வருடங்களில் சம்பாதித்த சொத்து கையில் உள்ளபோது, அவரது மகன், விஜய்யை வைத்து மெர்சல் என்ற படத்தை எடுத்தார்.. ஆனால், திட்டமிடாத டைரக்‌ஷன் காரணமாகவும், பட்ஜெட்டை உயர்த்திவிட்டதாலும், அதற்கேற்ற வியாபாரம் இல்லாததாலும், பெரிய நஷ்டத்தை அந்த தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருந்தது.,

இப்படியே திட்டமிடாமல் படங்களை எடுத்து கொண்டிருந்தால், பல சிக்கல்களை தமிழ் சினிமா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார் பாலாஜி பிரபு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+