பிரபல நடிகர் ஹோட்டலில்.. ரூமில் நுழையும்போதே குப்பென துர்நாற்றம்.. ஆடிப்போன திருவனந்தபுரம்.. பாவம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது மலையாள சினிமா உலகை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. என்ன நடந்தது?
எர்ணாகுளத்தை சேர்ந்தவர் திலீப் சங்கர்... பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். 'அம்மா இறைத்தே', 'பஞ்சாக்னி', 'சுந்தரி' போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளது. இதைத்தவிர சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் திலீப் சங்கர் நடித்துள்ளார்.

சீரியல்கள்: தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் "பஞ்சாக்னி" என்ற சீரியலின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக திலீப் சங்கர் எர்ணாகுளத்தில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்றுள்ளார்... ஆனால், ஷூட்டிங் இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மறுபடியும் எர்ணாகுளம் திரும்பி வராமல், 4 நாள் முன்பு, திருவனந்தபுரம் வான்ராஸ் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.
மீண்டும் ஷூட்டிங்: ரூம் எடுத்த பிறகு, கடந்த 2 நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல் தரப்பில் விசாரித்திருக்கிறார்கள்.. திலீப் சங்கர் இரண்டு நாட்களாக ரூமை விட்டு வெளியே வரவில்லை என்பது அப்போதுதான் தெரியவந்துள்ளது.
அதனால், அவரது அறைக்குள் சென்று ஓட்டல் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.. கதவை திறந்ததுமே, அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. ரூமுக்குள் நுழைந்ததுமே குப்பென்று துர்நாற்றம் வீசியிருக்கிறது.. எனவே, அவர் இறந்து பல மணி நேரங்கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். சமீபகாலமாகவே திலீப் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிப்பு: நடிகர் திலீப் சங்கர் மரணம் குறித்து தயாரிப்பாளர் சொல்லும்போது, "கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு ஷூட்டிங் செட்டை பார்வையிட்டார்.. பிறகு ஷூட்டிங் மீண்டும் இணைவதற்காக, ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் சில உடல்நலப் பிரச்சினைகளில் இருந்ததாக, அவரது நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் ஹோட்டலில் தங்கியிருந்த போது, தன்னுடைய ரூமை விட்டு வெளியே வரவில்லை. அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்" என்றார்.
அவர் கடைசியாக நடந்து வரும் பஞ்சாக்னி சீரியலில் சந்திரசேனன் கேரக்டரிலும், சமீபத்தில் அம்மையாரேயில் பீட்டராக நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தார். நடிகரின் மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications