நீங்க கர்ப்பமா? ரசிகர் கேட்ட கேள்விக்கு "ஸ்டர்ன்னாகும்" பதிலை சொன்ன குக் வித் கோமாளி மணிமேகலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என தன்னிடம் கேட்ட ரசிகர் ஒருவருக்கு குக் வித் கோமாளி மணிமேகலை அளித்த பதில் என்ன தெரியுமா?

சினிமா அளவுக்கு தொலைகாட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸை விட மிகவும் பிரபலமடைந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதுவரை 3 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 4ஆவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்டிரஸ் பஸ்டர் என சொல்லலாம்.

குழந்தை பிறப்பு

குழந்தை பிறப்பு

இந்த நிகழ்ச்சியை பார்த்து நீண்டகாலமாக குழந்தையே இல்லாத எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக ஒருவர் செஃப் வெங்கடேஷ் பட்டிற்கு தெரிவித்துள்ளார். அது போல் புகழும், சிவாங்கியும் அடிக்கும் லூட்டியை பார்த்ததால் படுத்த படுக்கையாக இருந்த தனது அம்மா குணமாகிவிட்டதாகவும் பல்வேறு தரப்பினர் பலவிதமான கமெண்ட்டுகளை அளித்தனர்.

4ஆவது சீசன்

4ஆவது சீசன்

இந்த 4ஆவது சீசன் கடந்த மாதம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல் முதலில் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எலிமினேட் ஆனார். இதையடுத்து காளையன் இரண்டாவது போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாவது போட்டியாளராக ராஜ் அய்யப்பன் கடந்த வாரம் எலிமினேட் ஆனார்.

கோமாளி மணிமேகலை

கோமாளி மணிமேகலை

இந்த போட்டியில் கோமாளியாக கடந்த 2ஆவது வாரம் முதல் 5 ஆவது வாரம் வரை வந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் போட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த குக் வித் கோமாளி முதல் சீசனிலிருந்து என் மீது ரசிகர்கள் அன்பை பொழிந்தீர்கள். உங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

எனக்கு கொடுத்த வாய்ப்புகளையும் சூழல்களையும் சிறப்பாக கொண்டு வர நான் கூடுதல் முயற்சிகளை எப்போதும் எடுப்பேன். இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறேன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மணிமேகலை விலகியது ஏன்

மணிமேகலை விலகியது ஏன்

இவர் ஏன் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் என்ற கேள்விகள் இன்னமும் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு சென்று இரு வாரங்களாகியும் அவரது செட்டில் இல்லாத வெறுமை ரசிகர்களை வாட்டுகிறது. இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பர்.

இல்லை இல்லை

இல்லை இல்லை

அந்த வகையில் ரசிகர் ஒருவர் மணிமேகலையிடம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் இல்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வதந்தி. நான் கர்ப்பம் இல்லை. எந்த ஒரு நியூஸா இருந்தாலும் அது ஏதோ ஒரு 4 யூடிப் சேனல் சொல்லி உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது. நானே தான் சொல்வேன் என பதில் அளித்துள்ளார். கர்ப்பமும் இல்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் சண்டையும் இல்லை என்றால் எதற்காக அவர் வெளியேறினார் என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+