முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்? நல்லாதானே போய்க்கிட்டிருக்கு! ஏன் நிறுத்துறீங்க? ரசிகர்கள் கேள்வி
சென்னை: சன் டிவியின் அன்பே வா சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது என்ற தகவலால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சீரியல் என்றாலே பெண்கள்தான் பார்ப்பார்கள் என்ற காலம் போய் இன்று ஆண்களும் சேர்ந்து பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல்களின் விறுவிறுப்பை கூட்டி டிஆர்பி ரேட்டில் இடம் பிடிக்க வைக்கிறார்கள் சீரியல் நிர்வாகத்தினர்.

என்னதான பெண்களுக்கு பெண்களே வில்லியா, இரண்டு பொண்டாட்டி கதை என பேசப்பட்டாலும் சீரியல்களின் விறுவிறுப்பால் நிறைய பேர் பார்த்து வருகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் சீரியல்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
அதிலும் நிறைய சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அந்த வகையில் இப்போது டிஆர்பி ரேட்டிங்கில் சீரியல்கள் டாப் 5 இடங்களில் உள்ளது. அதில் கயல், எதிர்நீச்சல், இனியா போன்ற தொடர்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. அது போல் அன்பே வா எனும் சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியலில் ஹீரோவாக விராட்டும், ஹீரோயினாக டெல்னா டேவிஸும் நடித்த வருகிறார்கள். இதில் பூஜா, ஸ்வாதி தாரா, விஜே தனுஷேக், குயின்சி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். அந்த சீரியலில் மகாலட்சுமி வில்லி வேடம் ஏற்று நடித்து வருகிறார்.
அதிலும் மகாலட்சுமி இரண்டாவதாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் நடப்பது மிகவும் ரகசியமாக இருந்தது. இவர்கள் காதலித்தது கூட மீடியாக்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இவ்வளவு ஏன் தனக்கு திருமணம் என கூறாமல் அரை நாள் விடுப்பு கேட்டு இயக்குநரிடம் மகாலட்சுமி அனுமதி வாங்கிக் கொண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
எனவே மகாலட்சுமி, அன்பே வா சீரியலில் வில்லியாக நடிப்பதால் இந்த சீரியலை பார்க்கிறார்கள். மேலும் இந்த சீரியலின் நாயகி பூமிகாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இப்படி சீரியல்கள் நம் வாழ்வில் அங்கமாக மாறியுள்ள நிலையில் அவ்வப்போது சில வருத்தமான செய்திகளும் வருகின்றன.
அதாவது ஒரு சீரியலில் இருந்து பிடித்தமான நடிகரோ நடிகையோ விலகுவது, இயக்குநர் மாறுவது, டப்பிங் ஆர்டிஸ்ட் மாறுவது என்பதால் அந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படும். ஆனால் தற்போது அன்பே வா சீரியல் முடிவுக்கு வர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கேட்ட ரசிகர்கள் தொடர் நல்லாதானே போய்க் கொண்டிருக்கிறது ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்கத் தொடங்கிவிட்டார்களாம்.












Click it and Unblock the Notifications