"Bro Code"! ஆர்த்தியுடன் பழகிய ரவி மோகன்! அனுபவமே இல்லாத எஸ்.ஜே. சூர்யா! கேரளத்து புது வரவு அசோகன்!
சென்னை: ரவி மோகனின் "Bro Code" எனும் திரைப்படத்தின் கதை என்ன என்பதை டீசரை கொண்டே ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ரவி மோகனுக்கு இது பழகியதுதான், ஆனால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த நடிப்பு புது அனுபவத்தை கொடுக்குமே!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: "Bro code" பட ப்ரோமா ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயம் ரவி எடுத்த சப்ஜெக்ட் செம. விகடன் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மனைவி ஜோக்ஸ் ரொம்ப புகழ் வாய்ந்தது. தன் இஷ்டப்படி கணவன் நடக்க வேண்டும் என நினைக்கும் மனைவியும், அதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மற்றும் அடங்கி நடக்கும் கணவனும் அதில் வருவார்கள்.

அப்புசாமியும், சீதாப்பாட்டியும் கேரக்டர்களே இதை ஒட்டி உருவாக்கப்பட்டது தான். ஜெயம் ரவி இதை காமெடியாக கையில் எடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.
ரவி, எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் மூன்று ஹீரோக்கள். மூன்று பேரும் 'புது புது அர்த்தங்கள்' ஹீரோ ரஹ்மான் மாதிரி மனைவி என்கிற சிறையிலிருந்து தப்பிப் போய் இஷ்டப்படி வாழ்வதை எடுத்திருப்பார் போல.
ரவி-கெனிஷா கோவாவில் இருந்ததாக செய்தி வந்த போது "புது புது அர்த்தங்கள்" ஹீரோ ரஹ்மான் கதையும், ரவியின் கதையும் ஒத்துப்போவதாக நெட்டிசன்கள் எழுதினர். அதைப் பார்த்தாரோ என்னவோ 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' பாட்டை இதில் உபயோகப்படுத்தி இருக்கிறார் மிகப்பொருத்தம்.
90களில் ஹரிஸ்ரீ என்கிற மிமிக்ரி ட்ரூப்பிலிருந்து கேரள சினிமாவுக்குள் நுழைந்து மிகப்பெரும் காமெடி நடிகராக திகழ்ந்தவர் ஹரிஸ்ரீ அசோகன். 'காட் ஃபாதர்' படம் மூலம் நுழைந்த அசோகன், திலீப் நுழைந்த காலகட்டத்தில் நுழைந்தவர். திலீப்போடு நிறைய காமெடி செய்திருக்கிறார்.
2012-ல் நடிக்க வந்த அர்ஜுன் அசோகன் மற்ற ஹீரோக்களுடன் இணைந்தே நடித்திருக்கிறார். பிரம்மயுகம் படத்தில் மம்முட்டி என்கிற சாத்தானுடன் பாணனாக அர்ஜுனின் நடிப்பு பாராட்டப்பட வேண்டியது. Bro code மூலம் தமிழுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழ்ப்பட இயக்குநர்கள் தமிழ் நடிகர்களை ஊக்குவிக்கிறார்களோ இல்லையோ, மலையாள நடிகர்களை கொண்டு வருவதையும், நடிக்க வைப்பதையும் பெருமையாகவே நினைக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. ஃபகத் பாஸில், சௌபின், சுராஜ் வெஞ்சஞாரமூடுக்குப்பிறகு இப்போது அர்ஜுனை கொண்டு வருகிறார் ரவி.
எஸ்.ஜே.சூர்யா நமக்கு தெரியும். Chronic bachelor ஆன சூர்யாவுக்கு இந்த நடிப்பு புது அனுபவம். ரவி பற்றி சொல்ல வேண்டாம். அவர் சொந்தக் கதையை தான் மூன்று ரோல்களில் சொல்லி இருக்கிறார் என இந்த ப்ரோமோ டீசரின் கீழே நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.
படம் வரும் போது தான் தெரியும்.
'எனக்காக அவனையே மாத்திக்கிட்டான்' என்கிறாள் ஒரு நாயகி. 'கோபமே வராது இவனுக்கு..' என்கிறாள் மற்றவள்.
'கூப்பிட்டா...ஓடியே வந்துடுவான்...' என்கிறாள் வேறொரு பெண்.
ரவி ஒரு இனௌடர்வியூவில் சொல்லி இருப்பார். "ரொம்ப நேரம் நான் கார்த்தி கூட பேசிட்டிருந்தா..என் கிட்ட பேசுறதை விட அதிகமாக பேசுறீங்களே..."
"இல்லம்மா...இது சினிமா பற்றி...'"
"ஏன்...சினிமான்னா எங்களுக்கு தெரியாதா" இப்படி மனைவி பற்றி சொல்லி இருப்பார். வேறொரு பேட்டியில் காம்பெயர் 'போரடிக்கும் போது..அதை மாற்றுவது யார்?"னு கேட்பாங்க..ஆர்த்தி தன் பெயர் உள்ள போர்டை காட்டுவார். ரவி போர்டை எடுக்கலாமான்னு தயங்கி "போரடிச்சதேயில்லை..."ன்னு சொல்லுவார்.
அந்த டைமிங் தான் இந்த படத்தோட இழை. ரவி சொந்தக் கதை தான் சப்ஜெக்ட் போல.... நிச்சயம் வெற்றி பெறும்...வாழ்த்துக்கள்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications