சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல்..இப்படி எல்லாம் கூட வெகுளியாய் இருக்காங்களே!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷாலிடம் ரசிகர்கள் செய்த செயல் பலரையும் ஃபீல் பண்ண வைத்துள்ளது.
பாக்யலட்சுமி சீரியலுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் சப்போர்ட் இருக்கிறது என்பதை பார்க்கும்போது பலருக்கும் வியப்பாக இருக்கிறது.

ரசிகர்களை கவரும் சீரியல்
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு என்டர்டைன்மென்ட் என்றாலே சீரியல்கள் தான். அதிலும் குடும்பமாக அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் ஒரு சில சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல்வேறு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அதிகமான ரசிகர்கள் திட்டி தீர்ப்பது கோபி கேரக்டரை தான். அதிகமான ரசிகர்கள் ஃபீல் பண்ணுவது பாக்கிய லட்சுமியை பார்த்து தான்.பாக்கிய லட்சுமியின் வெகுளித்தனம் மற்றும் சுயமரியாதைக்காக போராடுவதை பார்த்து ரசிகர்கள் இவருக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

பெண் ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பொதுவாக சீரியல்கள் என்றாலும் சரி திரைப்படங்கள் என்றாலும் சரி அதில் நடிக்கும் கேரக்டர்களின் பெயர்களையும், அவர்களுடைய கேரக்டர்தான் ரசிகர்கள் பொதுவான கேரக்டராக நினைத்து விடுகிறார்கள். இவர்கள் நல்லவர்களாக நடித்தால் நல்லவர்கள் என்றும், வில்லனாக நடித்தால் வில்லன் என்றும் அவர்களை மனதில் பதிய வைத்து விடுகின்றனர். அந்த மாதிரி தான் தற்போது கோபியை அனைவரும் வில்லனாக பார்த்து வருகின்றனர். பாக்கியலட்சுமிக்கு ஆதரவாக இருக்கும் அவருடைய பையனான எழிலிடம் ரசிகர்கள் அதிகமாக பாசத்தை பொழிகின்றனர். விஜே விஷால் இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகனாக மட்டுமல்லாமல் பல தாய்மார்களின் மகனாக மாறியிருக்கிறார்.

ரசிகர்களின் அன்பு
தற்போது விஜே விஷால் திரைப்படங்களின் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு தான் இந்த சீரியல். இந்த சீரியலின் மூலமாக பல குடும்பப் பெண்களின் மனதை கவர்ந்து இருக்கிறார். அம்மா பையனாக இருக்கும் இவரை பல பெண்கள் இப்படி ஒரு பையன் நம்ம வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு இருந்து வருகின்றார். அதனால்தான் தற்போது விஜே விஷால் வெளியே சென்றிருக்கும் இடத்தில் அவரை சூழ்ந்து கொண்ட பெண் ரசிகர்கள் பலர் அவரிடம் பாக்கியலட்சுமியை நீங்கள்தான் நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள். அதனால் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அம்மாவை ரொம்ப கேட்டதாக சொல்லுங்கள் என்று ரசிகர்கள் தங்களுடைய அன்பை காட்டி இருக்கின்றனர்.

சீரியலின் தாக்கம்
கோபி பாக்கியலட்சுமியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். பாக்கியலட்சுமி க்கு நீங்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் எழிலின் தாத்தாவாக நடிக்கும் ராமமூர்த்தி ரொம்பவே பீல் பண்ணி கொண்டு இருக்கிறார். அவரை பீல் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் பீல் பண்ணுவதை பார்க்கும் போது எங்களுக்கு மனது வேதனையாக இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் குழந்தைத்தனமாக பேசிக் கண்டிருக்கின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது மற்றும் மக்களும் அதற்குள் எவ்வளவு மூழ்கி இருக்கின்றனர் என்பதை இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.












Click it and Unblock the Notifications