மைனாவுக்கு குழந்தை பொறந்தாச்சு.. வாழ்க்கையில் வந்த வசந்தம்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்திருப்பது அவரது நலம் விரும்பிகளையும், ரசிகர்களையும் ரொம்பவே மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல் திருமணத்தால் கசந்து போன அவரது வாழ்க்கையில் 2வது திருமணம் கொண்டு வந்து கொடுத்துள்ள மிகப் பெரிய மகிழ்ச்சி இது என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
தாய்மையே ஒரு வரப்பிரசாதம் தான். அதுவும் இந்த மாதிரி நிலைமையில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குழந்தை பிறக்கும் போது மறு ஜென்மம் எடுக்கிறார்கள். அந்த மாதிரிதான் இப்போ மைனா நந்தினியும் அழகான ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

முதல் திருமண சோகம்
எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி தற்போது மைனா நந்தினி சந்தோஷமாக இருக்கிறார். பலரை சிரிக்க வைக்கும் நடிகர்களுக்கு வாழ்க்கை என்னவோ ரொம்பவும் கஷ்டமாக தான் இருக்கிறது. அந்த மாதிரிதான் மைனாவுக்கும் அமைந்தது. அவர் காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கை சந்தோஷமாக இல்லை. அவருக்கும் அவருடைய கணவருக்கும் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

2வது திருமண சந்தோஷம்
இந்த முதல் திருமண சோகத்திலிருந்து மீள்வதற்கு மைனா நிறையவே சிரமப்பட்டார். ஆனாலும் அதையும் சமாளித்து வெளி உலகில் புன்னகையுடன் நடமாடி வந்த அவருக்கு யோகேஷ்வரன் மூலம் புது வசந்தம் கிடைத்தது. யோகேஷ்வரனுடன் சீரியலில் நடித்தபோது காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தின் அத்தனை வடுக்களையும் போக்கும் வகையில் நந்தினியை கண்ணில் வைத்துப் பாத்துக் கொள்கிறார் யோகேஷ்வரன். அதன் விளைவுதான் இன்று அழகான குழந்தைக்கு இருவரும் பெற்றோர்களாகியுள்ளனர்.

கணவரின் அன்பு
டிக்டாக்கிலும் டப்ஸ்மாஷிலும் பிரபலமாக இருந்த இந்த ஜோடி ரசிகர்கள் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவருக்கு வளைகாப்பு செய்து அந்த போட்டோஸ்கள் இணையதளத்தை வலம் வந்தன. பலரும் வாழ்த்திக் குவித்தனர். இவருடைய அன்பான கணவரின் அரவணைப்பான முத்தத்தோடு பகிரப்பட்ட போட்டோக்களும் இவரது வளைகாப்பு போட்டோக்களும் வைரலாக பரவின.

வந்தாச்சு குட்டி யோகி
குட்டி மைனாவோ அல்லது குட்டி யோகியோ நல்ல படியாத பெத்தெடுங்க என்றும் உரிமையோடு கூறி மகிழ்ந்திருந்தனர். இதோ இப்போது குட்டி யோகியே வந்து விட்டார். இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தனக்கு ஆண் குழந்தை வந்தாச்சு என்று சந்தோசமாக போட்டோக்களை போட்டிருக்கிறார் மைனா. இன்னமும் குழந்தையின் போட்டோவை போடவில்லை. அவருடைய வளைகாப்பு அவுட்டோர் போட்டோக்களை மட்டும் போட்டிருக்கிறார்.

ரசிகர்களின் வாழ்த்து மழை
அதில் தேவதை போல உடையணிந்து விதவிதமாக காணப்படுகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தையும் குழந்தை பிறந்த பிறகுதான் இவர் அப்லோட் பண்ணுவதற்காக காத்திருந்தார் போல. நல்லபடியாக குழந்தை பிறந்த பிறகு அவருடைய அவுட்டோர் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய ரசிகர்கள் பலர் குழந்தைக்கும் மைனாவிற்கும் ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications