இன்னைக்கு வாத்தியார் சப்போர்ட் யாருக்கு??.. அவர் கொடுத்த க்ளூ
சென்னை: இந்த சனிக்கிழமையை நினைத்து பயந்து கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு தற்போது அள்ளு விட்டிருக்கிறது.
சும்மாவே ஆடும் கமல் இன்று கட்டம் கட்டி கொண்டு ஆடப் போகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஒரு வழியாக இந்த பிரச்சனையை முடிந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களும் தங்களுடைய குமுறல்களை கொட்டி வருகின்றனர்.

தொடரும் அழுகாச்சி சீன்கள்
போன வார முழுக்க எலிமினேஷனில் அபிஷேக்கை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று ரசிகர்கள் துடித்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இரண்டாவது எலிமினேஷனில் அபிஷேக் வெளியேறிவிட்டார். இனியாவது நிகழ்ச்சி நன்றாக சூடு பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாரம் முழுக்க ஒரே அழுகாச்சி சீன்களாகத்தான் இருந்து வருகிறது.

தொடரும் மனக்குமுறல்கள்
இப்படியே மாற்றி மாற்றி அழுது கொண்டுதான் இருப்பார்கள் என்று ரசிகர்கள் பலருக்கும் இப்போது இந்த நிகழ்ச்சி போரடிக்க தொடங்கிவிட்டது. திங்கள் கிழமை தொடங்கி இப்ப வரைக்கும் முட்டிக் கொண்டிருக்கும் சில பஞ்சாயத்துகளை கமல் வந்து முடித்து வைப்பார் என்று போட்டியாளர்கள் தங்களுக்குள் சமாதானம் செய்துகொண்டாலும், அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களும், மனக்குமுறல்களை அடிக்கடி கொட்டிக் கொண்டுதான் வருகின்றனர், என தான் போட்டியாளர்கள் ஆறுதல் கூறினாலும் சம்பந்தப்பட்டவர்களால் அப்படி எளிதில் விட்டு விட முடியவில்லை.

எது நியாயம்
திங்கள்கிழமை தொடங்கியது பஞ்சாயத்து வெள்ளிக்கிழமை வரைக்கும் நீண்டு கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளிலும் ப்ரமோவில் தவறாமல் தாமரைச்செல்வி இடம் பிடித்து விடுகிறார். அவருடைய மனக்குமுறல்கள் நியாயமா?? அல்லது விளையாட்டை விளையாட்டாக விளையாடிய சுருதி, பாவனியின் செயல்கள் நியாயமா என்று ரசிகர்களுக்கு குழப்பம் தான் இருந்து வருகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் தங்களுடைய கருத்துக்களை கூறி கொண்டு இருந்தாலும் இன்றைய பஞ்சாயத்தில் பதில் என்ன கிடைக்கும் என்பதில் அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

தாமரைக்கு ஆதரவா??
வழக்கம்போல சனிக்கிழமை ப்ரமோ சீக்கிரத்தில் வராமல் லேட் ஆகும் போதே இன்றைக்கு எப்படியும் பிரச்சனை வேற லெவல் இருக்குமா? ?அல்லது இது எளிமையாக இருக்குமா?? அதனால்தான் சுவாரசியம் கூட்டுவதற்காக இப்படி லேட் பண்ணி இருக்கிறார்களா!!?? என்று பலர் பிக் பாஸ் மீது கம்ப்ளைன்ட் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் மனநிலையை போன்று கமல் பேசியதும் ரசிகர்கள் ஆரவாரம் விட்டு வருகின்றனர். லேட்டா வந்தாலும் பரவாயில்லை ஒரு தீர்க்கமாக தான் வந்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர். அதுவும் ஒவ்வொரு பிரச்சினையும் அவர் கூறும்போது அவருடைய முக எக்ஸ்பிரஸனை பார்த்ததும் இந்த வாரம் சுருதி மற்றும் பாவனிக்கு இன்று பஞ்சாயத்தில் பதில் சொல்லிவிடுவார் என்றும் தாமரைக்கு ஆதரவாகத்தான் கமல் பேசுவார் என்றும் கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications