கார்த்திக்கின் செம ஸ்கெட்ச்.. பிரபு, ராஜ்கிரண் போட்ட ரூட்.. "சூப்பர் ஹீரோ" கீழே விழுந்த கதை: பிரபலம்
சென்னை: நிறைய ஹீரோக்கள் பல ஹிட் படங்களை தந்தாலும், ஒருகட்டத்துக்கு பிறகு, காணாமல் போய்விடுகிறார்கள் என்றும், இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது குறித்தும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
Agayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "பரத், ஸ்ரீகாந்த், ஜெய், ஷாம், ஜீவா போன்றோர் அவரவர் நடிப்பில் என்ன பிளஸ் பாயிண்ட்டோ, அவர்களை ரசிகர்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ அப்படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம்.

ஆக்ஷன் ஹீரோ: உதாரணத்துக்கு நடிகர் பரத் எடுத்து கொண்டால், காதல் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.. ராஜா ராணி போன்ற படங்களில் ஜெய் சிறப்பாக நடித்திருந்தார்.. 12B படம் வந்தபோது, பெண்கள் மத்தியில் ஷாம், யூத் ஹீரோவாக கொண்டாடப்பட்டார்
ஆனால் இவர்கள் எல்லாரும் செய்யும் தவறு என்னவென்றால், சில வெற்றி படங்களுக்கு பிறகு, எல்லாருமே ஆக்ஷன் ஹீரோவாக வரவேண்டும் என்று பார்க்கிறார்கள். எல்லாருமே கமல், ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் இவர்களை ஏற்றுக் கொண்டதுபோல, அனைவரையுமே ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆக்ஷன் ஹீரோவென்றால், அதற்கென சில குவாலிட்டீஸ் இருக்கிறது. அதனை எல்லாராலும் நிறைவேற்றிட முடியாது.
சூப்பர் ஹீரோக்கள்: எனவே, பரத், ஸ்ரீகாந்த், ஜெய், ஷாம், ஜீவா போன்றோரும் தங்களை சூப்பர் ஹீரோவாக நினைப்பதால்தான், தோல்வியடைந்து விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆக்ஷன் ஹீரோ என்றால், ஒருவித பவர் இருக்கும், ஒருவித கரிஷ்மா இருக்கும்.. அதெல்லாம் இவர்களிடம் இல்லை.
சீனியர்கள் அனைவருமே 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், அது அவர்களின் உழைப்பு,. ரஜினி, கமல் என்றால் 50 வருட உழைப்பு இருக்கு.. அஜித், விஜய் என்றால் 30 வருட உழைப்பு இருக்கிறது. சிம்பு, தனுஷ் என்றாலும் 20 வருட உழைப்பு இருக்கிறது. தங்களது உழைப்பு தந்த இவர்களை, அந்த உயர்ந்த இடத்தில் மக்களே கொண்டுபோய் உட்கார வைக்கிறார்கள்.
நடிகர் கார்த்திக்: நடிகர் கார்த்திக்கை எடுத்து கொண்டால், ஆக்ஷன் ஹீரோவாக அவர் வரவில்லை.. "அமரன்" போல ஒன்றிரண்டு ஆக்ஷன் படங்களில் நடித்தாலும், ரெகுலர் ஃபார்முலாவுக்கு வந்துவிட்டார். கிழக்கு வாசல், வருஷம் 16, மௌன ராகம் போன்ற படங்களையே தொடர்ந்தார்.. சூரக்கோட்டை சிங்கக்குட்டி போல ஆரம்பரத்தில் சில ஆக்ஷன் படங்களில் பிரபு நடித்தாலும், சின்னதம்பி ஓடியதுமே, அதே ஃபார்முலாவுக்குள் சென்றுவிட்டார்.
மைக் மோகனும் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சித்ததே கிடையாது.. வெறும் மைக்கை பிடித்து வாயசைத்தார், காசு சம்பாதித்தார், வாரத்துக்கு 4 படங்கள் வெளியாகும் அளவுக்கு உயர்ந்தார்.. ராமராஜனை எடுத்துக் கொண்டால், 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு அப்போது உயர்ந்தாலும், ரஜினி, கமல் போல ஆக்ஷன் ஹீரோவாக இறங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்? மக்கள் ஒப்புக் கொள்வார்களா?
ராஜ்கிரண்: ராஜ்கிரணும் முரட்டுத்தனமாக நடித்தாலும், ஆக்ஷன் ஹீரோவாக ஒருபோதும் நடிக்கவில்லை. எலும்பு கடித்து, கைலியை மடித்து கட்டி நடித்தாலும், சூப்பர் ஹீரோவாக முயற்சித்ததில்லை.. ஆனால், ரஜினி, கமல் போன்றோரை ரியல் ஹீரோவாக இல்லாமல், ரீல் ஹீரோக்களாக மக்கள் பார்த்தார்கள்.. இந்த மேஜிக் எல்லாருக்கும் அமையாது" என்றெல்லாம் பேசியிருக்கிறார் பாலாஜி பிரபு.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications