Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஷியல் நடிகை.. ஈரப்புடவையுடன் பயபக்தியாய் நடிப்பார்.. கணவரின் விஐபி விருந்துகள்: பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் நடிகை கேஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் மீது கடத்தல் வழக்கு, மோசடி வழக்கு, சிட்பண்ட் வழக்கு என பல வழக்குகள் அப்போதே நிலுவையில் இருந்ததாகவும், இதனால் தமிழகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தவர் வேலாயுதம் என்றும், தன்னுடைய அப்பாவே வேலாயுதத்தால் ஏமாற்றப்பட்டவர் என்றும் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

Globe 360 என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேஆர் விஜயா பற்றி தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.. அந்த காலத்திலேயே விமானம், கப்பல் என்று சொந்தமாக வைத்திருந்தது எப்படி? கேஆர் விஜயாவின் பின்புலம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இவை:

television k r vijaya

கேரளா: "கேரளாவை சேர்ந்தவர் கே.ஆர்.. விஜயா.. இவரது ஒரிஜினல் பெயர் தெய்வநாயகி. அப்பா பேர் ராமச்சந்திரன்.. அம்மா பெயர் கல்யாணி.. அப்பா, அம்மா பெயரை இன்ஷியலாக வைத்து கொண்டார். தெய்வநாயகி என்ற பெயரை விஜயா என்று எம்ஆர் ராதா பெயர் மாற்றினார்.

கே.ஆர்.விஜயாவின் அப்பா ஒரு ராணுவ வீரர்.. அங்கிருந்து திரும்பி நகைக்கடை வைத்து நஷ்டம் அடைந்து, பழனிக்கு வந்து செட்டிலாகிவிட்டார். கேரளாவிலிருந்து பழனிக்கு வரக்கூடியவர்களுக்கு சுற்றுலா கைடாக வேலை பார்த்தார். வறுமை காரணமாக, மகள் கேஆர் விஜயாவை நாடகக் கம்பெனியில் சேர்த்துவிடுகிறார்.

விளம்பரங்கள்: பழனி, திண்டுக்கல் போன்ற சுற்றுவட்டார பகுதியில் ரிக்கார்ட் டான்ஸ் ஆடினார் கேஆர் விஜயா.. நல்ல முகவெட்டும் இருப்பதால், சோப்பு விளம்பரம், புடவை விளம்பரம், சாக்லேட் விளம்பரம் என மாவட்ட அளவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் கேஆர் விஜயாவுக்கு வாய்ப்புகள் வந்தன.

ஒருமுறை ஊத்துக்குளியில் ஒட்டப்பட்டிருந்த கேஆர் விஜயா விளம்பர போஸ்டர் ஒன்று, ஸ்டில் சிவம் என்ற போட்டோகிராபர் கண்ணில் படுகிறது. அப்போது 100 போட்டோக்களை எடுத்து, "சினிமாவில் கதாநாயகியை தேடுகிறவர்களுக்கு" என்று இந்த போட்டோக்களை பிரபலமாக்கினார் ஸ்டில் சிவம். அப்படித்தான் கற்பகம் படத்தில் முதல் முதலாக அறிமுகமாகிறார். மிகப்பெரிய மாற்றத்தை இவரது வாழ்வில் ஏற்படுத்தியது இந்த படம்.. கோடம்பாக்கம் கேஆர் விஜயாவை கொண்டாட துவங்குகிறது.

தயாரிப்பாளர்கள்: மேக்கப்புடன் 6 மணிக்கே ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார் கேஆர் விஜயா.. நல்ல அழகு, நடிப்பு, நேரம் தவறாமை, பயபக்தி இதெல்லாம்தான் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த விஷயங்களாகிவிட்டன. அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.. மலையாளம், தெலுங்கு துறைகளிலும் முன்னணி நடிகையாக வந்தார்.

கடவுள் வேஷம் என்றாலே கேஆர் விஜயாவை கூப்பிடுங்க என்று டைரக்டர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எந்த சாமி படத்தில் நடித்தாலும், இதற்காகவே விரதம் இருந்து, கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து, கோயில் குளத்தில் குளித்து விட்டு, ஈரப்புடவையுடன் அங்கபிரதட்சணம் செய்துவிட்டு வந்துதான், முதல் காட்சியில் நடிப்பாராம்.

2வது திருமணம்: ஆனால், வேலாயுதம் நாயரை 2வது திருமணம் செய்ததுதான் அப்போது சர்ச்சையாகிவிட்டது. ஸ்பென்சர் பில்டிங் உரிமையாளர் வேலாயுதம் நாயர்.. இவரது சின்ன வீடுதான் கேஆர் விஜயா.. வேலாயுதம் நாயர் ஒரு மோசடி பேர்வழி. சுதர்சன் சிட்பன்ட்ஸ் என்ற பெயர், அந்த காலத்திலேயே பல கோடியை சுருட்டி ஏமாற்றியவர்.

வேலாயுதம் மீது கடத்தல் வழக்கு, மோசடி வழக்கு, சிட்பண்ட் வழக்கு என பல வழக்குகள் அப்போதே நிலுவையில் இருந்தன. ஷுட்டிங்கிற்கு தன்னுடைய சொந்த விமானத்திலேயே கேஆர் விஜயாவை அழைத்து வந்து, விமானத்திலேயே திரும்ப அழைத்து செல்வார் வேலாயுதம்.

தொழிலதிபர்கள்: காரணம், கேஆர் விஜயா, வேலாயுதத்துக்கு மிகவும் முக்கியம்.. விஐபி விருந்து வீட்டில் தடபுடலாக இருக்கும். பல நாடுகளிலிருந்து வரும் தொழிலதிபர்கள், பண்ணையார்கள், விஐபிகள் என பலரும் வேலாயுதம் பங்களாவில் தினமும் நிறைந்திருப்பார்கள்.. அதில், கேஆர் விஜயாதான் சீப் கெஸ்ட்.. இதன்மூலம் வேலாயுதத்துக்கு வெளிநாட்டு தொடர்புகள், வியாபார தொடர்புகள் பெருகின..

பல கோடி சம்பாதித்தார் வேலாயுத நாயர்" என்று விலாவரியாக சொல்லி உள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+