இதுதான் ரஞ்சிதா.. அந்த டிரஸ்ஸை பார்த்து ஆடிப்போய் நின்று.. வாவ், முதல் படத்திலேயே "சபாஷ்".. பிரபலம்
சென்னை: "நித்தியானந்தா செய்தியாளர்களை சந்தித்தாலும், ரஞ்சிதா அதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ள மாட்டார்.. எதற்காக பிறருக்கு தாம் விளக்கம் தர வேண்டும் என்று நினைப்பவர்.. மிகவும் துணிச்சல் வாய்ந்த பெண்மணி ரஞ்சிதா" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பாராட்டி கூறியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகை ரஞ்சிதா முதல் படத்தில் நடிக்க வந்தது குறித்தும், அவரது துணிச்சலான குணம் குறித்தும் கூறியிருக்கிறார்.

"ஸ்ரீவள்ளி என்ற ரஞ்சிதா ஆந்திராவில் இருந்து வந்தவர்.. கடப்பா பக்கத்திலுள்ள சின்ன கிராமத்தை சேர்ந்தவர்.. நளினமும், கர்வமும் கலந்து ஆளுமையான தோற்றத்தை கொண்டவர் ரஞ்சிதா. இதனால், தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது.. ஆனால், அவரது முதல் படம் தெலுங்கில் சரியாக போகவில்லை..
முதல் பட வாய்ப்பு
அதற்குள் இங்கே தமிழில் பாரதிராஜா கார்த்திகை வைத்து நாடோடி தென்றல் படம் எடுக்க முடிவு செய்திருந்தார்.. அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு பிறகு, கார்த்திக், பாரதிராஜா படத்தில் நடிப்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. கதாநாயகி தேர்வு பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது..
அப்போதுதான் எதேச்சையாக ரஞ்சிதா நடித்த தெலுங்கு படத்தை பார்க்க நேர்ந்தது.. அதைப்பார்த்துதான், ரஞ்சிதாவை கதாநாயகியாக தேர்வு செய்தார்..
முதல் படத்தின் காஸ்ட்யூம்
ஆனால், பாரதிராஜா தந்த காஸ்ட்யூமை பார்த்து மிரண்டு போயிட்டாராம் ரஞ்சிதா.. வெறும் சேலையை எப்படி உடுத்தி நடிப்பது என்று தயங்கியிருக்கிறார். மாடர்ன் டிரஸ் அணிந்து கேரக்டர்கள் கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தபோது, வாத்து மேய்க்கும் கேரக்டரா? என்றும் நினைத்தாராம். பிறகு, அந்த கேரக்டர் குறித்து பலரும் எடுத்து சொன்னபிறகு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தயங்கி தயங்கி அந்த படத்தில் நடித்தாலும், சிங்கிள் டேக்கிலேயே பல காட்சிகளில் நடித்துவிடுவார் ரஞ்சிதா..
நாடோடி தென்றல் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாவிட்டாலும், ரஞ்சிதாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.. "பாரதிராஜாவின் R சென்டிமென்ட் இங்கே ஒர்க் அவுட் ஆகிறது" என்று பத்திரிகைகளில் எல்லாரும் எழுதினார்கள்.. ரஞ்சிதாவுக்கான வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் வரிசையாக நடித்தார்.
மணமுறிவு - வருத்தம்
ஒருகட்டத்தில் தான் சினிமாவில் நடிக்க வந்தது குறித்து வருத்தப்பட்டும், பத்திரிகைகளில் பேட்டி தந்திருக்கிறார்.. "நிறைய பேர் இங்கே முகமூடியாக இருக்கிறார்கள், நேரில் ஒன்று, பின்னாடி வேறொன்றும் பேசுகிறார்கள்" என்று வருத்தப்பட்டுள்ளார்.. பிறகு சினிமாவை விட்டே விலகி, திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 வருடத்தில் மணமுறிவு ஏற்பட்டு, மீண்டும் நடிக்க வந்தார்.. எனினும், கதாநாயகி கேரக்டர் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது..
ராவணன் படத்தில் சின்ன கேரக்டர் செய்தாலும், அதற்கு பிறகு நடிக்க வரவில்லை.. அப்போதுதான் 2010-ல் பிரபல தொலைக்காட்சியில் வெளியான வீடியோ மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது. ஆனால், அது பொய்யான வீடியோ, கிராபிக்ஸ் என்று நித்தியானந்தா, ரஞ்சிதா தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
துணிச்சல் பெண்மணி ரஞ்சிதா
பிறகு, நித்தியானந்தாவின் பரம சிஷ்யை தான்தான் என்று அறிவித்து கொண்டார்.. நித்தியானந்தாவும், கைலாஷா நாட்டை பிரத்யேகமாக உருவாக்கி, அந்த நாட்டுக்கு ரஞ்சிதா பிரதமர் என்ற அறிவிப்பை செய்தார். ரஞ்சிதாவின் ரசிகர்கள் இதை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்..
நித்தியானந்தா செய்தியாளர்களை சந்தித்தாலும், ரஞ்சிதா அந்த சந்திப்புகளில் கலந்து கொள்ள மாட்டார்.. எதற்காக பிறருக்கு தான் விளக்கம் தர வேண்டும் என்று நினைப்பவர்.. மிகவும் துணிச்சல் வாய்ந்த பெண்மணி ரஞ்சிதா" என்று பாராட்டியிருக்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications