அன்னய்யா ஞாபகமிருக்கா.. "கூட்டத்தை கண்டு ஏமாறாதீங்க விஜய்.. "ராஜாவின் பார்வையிலே" நடிகையால் பரபரப்பு
சென்னை: முழு நேர அரசியலுக்கு வரவுள்ள நடிகர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை, தமிழ் மற்றும் தெலுங்கு பட பிரபல நடிகை இந்திரஜா தந்துள்ளார்.. அத்துடன் ஆந்திர அரசியல் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திரஜா.
ராஜாவின் பார்வையிலே என்ற படம்தான், அஜித், விஜய் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்த ஒரே படமாகும். இதில், விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்திரஜா. இதற்கு பிறகு எங்கள் அண்ணா படத்தில் மட்டும் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்திருந்தார்.

Aval vikatan யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், தன்னுடைய சினிமா பயணம் குறித்த ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அப்போது, முழுநேரமாக விஜய் அரசியலுக்குள் வந்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பிரஜை: அதற்கு அவர், "விஜய்க்கு வாழ்த்துக்கள்.. கண்டிப்பாக பெரிய மாற்றத்தை விஜய் சாரிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. நிறைய நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்கள். சக நடிகையாக இல்லாமல் சாதாரண பிரஜையாக ஒரு விஷயத்தை மட்டும் அவருக்கு சொல்லணும்னு நினைக்கிறேன்.
"கூட்டத்தை பார்த்து மட்டும் நம்பிடாதீங்க.. அந்த கூட்டத்தை எப்படி ஓட்டாக மாற்ற வேண்டும் என்பதற்கு சரியான வழிநடத்தக்கூடியவர் விஜய்க்கு தேவை. ஏனென்றால், சேரும் கூட்டம் எல்லாமே வாக்குகளாக மாறும் என்பது நிச்சயமில்லை. சிரஞ்சீவி சார், பவன் கல்யாண சார், இவங்கெல்லாம் கட்சி ஆரம்பிக்கும்போது, நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்... எனவே ரசிகர் கூட்டத்தை வாக்குகளாக மாற்றுவது ஒரு பெரிய விளையாட்டு.
அண்ணையா: அதுக்காக இவர்களை எல்லாம் மக்கள் மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.. நிறைய மரியாதை, அன்பு, பாசம், அபிமானம் வைத்திருக்கிறார்கள்.. சிரஞ்சீவியை அண்ணையான்னுதான் கூப்பிடுவாங்க.. பவன் கல்யாணை, பவர் ஸ்டாருன்னுதான் கூப்பிடுவாங்க. தங்கள் வீட்டு பிள்ளையாகவே இவர்களை பாவிக்கிறார்கள்.. ஆனாலும், அரசியல் களம் வேறு மாதிரியானது.. அங்கே போடும் கணக்குகள் வேறுவகையானது.
சினிமாவில் ஒரு படம் ஓடலேன்னா அது தோல்வி, ஓடினால் அது வெற்றி என்பதுபோல அரசியலை அணுக முடியாது.. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடக்காவிட்டால், அது தோல்வி என்று முடிவு செய்ய கூடாது. அரசியலில் தோற்கும்போது நிறைய லாபம் கிடைக்கும்.. ஜெயிக்கும்போது நிறைய இழக்க வேண்டியிருக்கும். இது இரண்டிற்குமே நீங்க தயாராக இருக்கணும்.
தேவைப்படாது: விஜய் நல்ல மனசுக்காரர்.. மக்களுக்காக சிந்திக்கக்கூடிய நபர்தான். அதனால் விஜய்யை சரியான முறையில் வழிநடத்தக்கூடியவர்கள் மட்டுமே இப்போதைக்கு தேவை.. வேற எதுவுமே அவருக்கு தேவைப்படாது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications