வெளுத்தெடுக்கும் வெண்பா.. செம தில்லுபா.. கலக்கி வரும் பரீனா.. செம ஜாலி ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நிமிடம் பேசு என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி VJ வாக அறிமுகமாகி இப்போ விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா வாக கலக்கிக் கொண்டிருக்கும் பரீனா ஆசாத் இணையதளங்களிலும் வைரலாக பரவி வருகிறார்.

இவர் கிச்சன் கலாட்டா, அஞ்சரைப்பெட்டி ,கோலிவுட் சினிமா அப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் இவர் சமையல் பெண்களின் திறமைகளை பற்றி அழகாக பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்ததாக இருந்தது.

 நிகழ்ச்சித் தொகுப்பாளர்

நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கும்போதுதான் அவருடன் பணிபுரிந்த ரஹ்மான் என்பவரை ரொம்ப நாட்களாக காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சீரியல்களில் கவனத்தை செலுத்தினார். அழகு சீரியல் மூலமாக சீரியலில் அறிமுகமாகி கலர்ஸ் தமிழில் தறி சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து இருப்பார்.

வில்லத்தனம்

வில்லத்தனம்

இந்த சீரியலிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகுதான் இவருக்கு வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் இவர் கலக்கிக் கொண்டிருக்கும் போது இணையதளங்களிலும் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களாக குவித்து வருகிறார். பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் டாக்டராக நடித்திருப்பார்.

 ஒரு தலையாக காதலித்து

ஒரு தலையாக காதலித்து

இதில் பாரதியை ஒரு தலையாக காதலித்து அவரது முதல் காதல் தோல்வியற்றதும் ரொம்பவும் சந்தோஷப் பட்டு இருக்கும் தருணத்தில் அவர் இரண்டாவதாக காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்ததை பொறுக்கமுடியாமல் இவர் செய்யும் அட்டூழியங்களை ரசிகர்கள் கழுவி கழுவிக் ஊற்றுகிறார்கள். பாரதியை அடைவதற்காக இவர் ஒரு சைக்கோ போல நடந்து கொள்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

 டாக்டர் இப்படி பண்ணலாமா

டாக்டர் இப்படி பண்ணலாமா

அதுவும் ஒரு டாக்டர் இப்படி பண்ணலாமா என்று ரசிகர்கள் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் . ஆனாலும் சில ரசிகர்கள் இவரை திட்டினாலும் பல ரசிகர்கள் இவரது திறமையை பாராட்டி இருக்கிறார்கள். அதுவும் இவருடைய அலங்காரத்தையும் மேக்கப்பையும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். இந்த சீரியலில் இவர்தான் இவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டு இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் இவருக்கு டிசைனர் இவர்தானாம்.

 ஆடைகள் பிரபலம்

ஆடைகள் பிரபலம்

இவர் தினமும் அதில் போடும் ஆடைகளும் அணிகலன்களையும் பார்த்து பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இது எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் இவர் போட்ட நகைகளையும் போட்ட ஆடைகள் தான் திரும்பவும் போடுகிறாராம். ஆனால் அதை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் மாடலாக போட்டு கொண்டிருக்கிறாராம். வித்தியாசமாக செய்வதில் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.

 உல்டா பண்ணிப் போடலாமே

உல்டா பண்ணிப் போடலாமே

இருப்பதை அப்படியே டோட்டலா மாத்தி யூஸ் பண்றது இவருக்கு ரொம்பவும் பிடித்தமான மற்றும் எளிமையானதாம். ஸாரி கட்டிக்கொண்டு சீரியலில் நடித்து இருந்தாலும் விதவிதமான புடவைகளாக எடுத்து குவிப்பது இல்லையாம். அங்கே இங்கேயுமா மாற்றி எடுத்து கட் பண்ணி ஒன்றுசேர்த்து புது புடவையை இவரே உருவாக்குவதுதான் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அது மட்டுமல்ல நகைகளிலும் கவனத்தை அப்படிதான் செலுத்துகிறார்.

 சேலையிலும் வித்தை காட்டலாம்

சேலையிலும் வித்தை காட்டலாம்

புடவை பிளைன் ஆக இருந்தால் காதில் போடும் கம்மலை அதில் இருக்கும் ஆணியை பிடுங்கிவிட்டு அழகாக ஒட்டி புதுவிதமான புடவையாக மாற்றி விடுவாராம் நகைகளிலும் அப்படித்தான் கவனத்தை செலுத்தி வருகிறாராம். இவருடைய அலங்காரத்திற்கு என்று பல பெண்களுக்கு இவரை ரொம்பவே பிடித்ததாக இருக்கிறதாம்.

 கவரும் போட்டோஸ்

கவரும் போட்டோஸ்

இணையதளத்திலும் இவர் சேலைகளிலும் மாடல் உடைகளிலும் போட்டோக்களாக குவித்து வருவது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது . இவரைப் பற்றி வரும் தப்பான கமெண்டுகளை பற்றி கவலைப்படுவதே இல்லை பல ரசிகர்கள் கேவலமாக திட்டியும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் ஆனாலும் அது இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றியாக தான் இவர் பார்க்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+