விரல் மேல விரல் வச்சு.. காதலி விரலில் பியானோ... ஆஹா ரொமான்ஸ் வழியுதே!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் ரொம்ப பிரபலம். அதில் சம்பாவாக நடிக்கும் நடிகை மானசாவுக்கு தீவிரமான பசங்க ஃபேன்ஸ் இருக்காங்க.
சீரியலில் வேலைக்காரியா வருவாங்க அந்த வீட்டு சின்னய்யா மனசுல இடம்புடிச்சு மனைவியாவும் ஆகிடறாங்க. கூப்பிடறது இன்னமும் சின்னய்யான்னுதான்.
வசதியா இருந்த வீட்டுல திடீர்னு கடன் பிரச்சனை தலை விரித்தாடுது. வீட்டை அடகு வைக்கறாங்க, அந்த வீட்டை கிளையண்ட் விக்கறதுக்குள்ள, பணத்தை புரட்டி மீட்கறதுதான் இதுவரையான கதை.

சைட்
இந்த வீட்டுல ஒரு பொண்ணு, ஒரு பையனை காதலிக்கரா. அவனும், இவளது வீட்டு கடன் அடைக்க தனது பைக்கை வித்து பணம் குடுக்கறான்.காதலி நெகிழ்ந்து ரொம்ப தேங்க்ஸ்டா இனிமே எப்படி பொண்ணுகளை சைட் அடிக்க வண்டியில போவேன்னு கேட்கறா..

நடந்து வந்து
என்ன பண்றது நடந்துதான் போகணும்னு சொல்றான்.. அப்போ என்னைத் தவிர வேற பொண்ணுங்களை சைட் அடிப்பியான்னு கேட்கறா. இல்லை உன்னை மட்டும்தான் நடந்து வந்து சைட் அடிப்பேன்னு சொல்றான் இவன்.

கதை விடாதே
இந்நேரம் பியானோ மட்டும் இருந்துச்சுன்னு வை.. இந்நேரம் நான் நினைக்கறதை வாசிச்சு காமிச்சு இருப்பேன்னு சொல்றான்.டேய் கதை விடாதே.. சும்மா இம்பிரஸ் பண்னனும்னு சொல்லாதே.. உனக்கு பியானோ வாசிக்க தெரியுமா?

கையை வை
நம்புப்பா... நான் பியானோ கிளாஸ் போயிருக்கேன்.. நீ நம்ப மாட்ட... இதோ இந்த மொட்டை மாடி காம்பவுண்டுல உன் கையை வைன்னு சொல்றான்.அவளும் பத்து விரல்களையும் காம்பவுண்டில் வைத்து தெரு பார்த்து நிக்கறா.

அவளது
அவன் மெல்ல அவளது பின்புறமாக வந்து அவள் பத்து கை விரல்கள் மேல் தனது பத்து கைவிரல்களை வைக்கிறான்.நீ கண்ணை மூடி மியூசிக்னு நினைச்சிட்டு ரசிச்சு கேள்னு சொல்றான்.அவளும் கண்களை மூடுகிறாள்.

கெமிஸ்ட்ரியும்
இவன் ஒவ்வொரு விரலாக இந்த கையிலும், அந்த கையிலும் என்று சரிகமப என்பது போல அழுத்துகிறான். அவள் இவன் மேல் மெதுவாக சாய்கிறாள்.. ஆஹா இசை வந்துருச்சுங்கோ... இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆயிருச்சுங்கோ...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications