பிக்பாஸில் மீண்டும் சாச்சனா.. பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமோ? அந்த 3 பேர்? Bigg boss 8
சென்னை: ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்று சொன்னது உண்மைதான் போல என்று நினைக்கும் அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பிக்பாஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. இதோ சாச்சனா பற்றின புரோமோ இன்று வெளியாகி மீண்டும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
பிக்பாஸ் சீசனை துவக்கி வைத்த விஜய் சேதுபதி, போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வீட்டுக்குள் அனுப்பி வைத்திருந்தார். ஆனால், போட்டியாளர்களிலிருந்து, 24 மணி நேரத்தில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி, ஓபன் நாமினேஷனும் நடந்தது.. பின்னர், எலிமினேஷனும் உடனே நடந்து முடிந்தது.

பெண் போட்டியாளர்கள்: "ஆண்கள் சொன்னதை போல இந்த வாரத்தில் ஆண் போட்டியாளர்களை பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொன்னால் பெண் போட்டியாளர்கள் நமக்குள்தான் நாமினேஷன் செய்ய வேண்டியிருக்கும்.. அதுவும் இந்த முடிவை எடுத்தது நம்ம 4 பேரும்தான்.. அதனால், நீங்கள் என்னை நாமினேஷன் செய்தால், நான் எலிமினேட் ஆகிறேன்" என்று சொல்லியிருந்தார் சாச்சனா.
சாச்சனா என்ன அர்த்தத்தில் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், இதையே சாக்காக வைத்து, சக போட்டியாளர்கள் அவரை நாமினேஷன் செய்தார்கள்.. அதிக நாமினேஷன் செய்யப்பட்டவர் என்ற முறையில், நடிகை சாச்சனா எலிமினேட் ஆனார்.
எவிக்ஷன்: எனினும், ஒரே நாளில் நடந்த இந்த எலிமினேஷன், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. டிஆர்பி ஏற்றுவதற்காகவே இப்படியொரு யுக்தியை கையாண்டதாக காரணம் கூறப்பட்டது.. "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" என்று சொன்னால் மட்டும் போதுமா? அதை செயலிலும் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த எவிக்ஷன் நடந்ததாக இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது.
எனினும் ரசிகர்களிடம் இந்த எலிமினேஷன் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. "டிஆர்பிக்காக நன்றாக விளையாடிய பெண்ணை வெளியில் அனுப்புவீர்களா? விளையாட வாய்ப்பே தராமல் வெளியே அனுப்புவது எந்தவகையில் நியாயம்? ரசிகர்கள் ஓட்டு போடாமல் அதெப்படி ஒரு போட்டியாளரை வெளியே அனுப்ப முடியும்?" என்றெல்லாம் இணையவாசிகள் கேள்விகள் கிளம்பின.
நெகட்டிவ் கமெண்ட்: இந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை விஜய் டிவி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவை யாவும் நிகழ்ச்சிக்கு பின்னடைவாகிவிடக்கூடாது என்பதற்காக, மறுபடியும் சாச்சனாவை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு போவதாக தகவல்கள் பரபரத்தன. ஒயில்டு கார்டு மூலம் என்ட்ரி தருவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், சாச்சனாவை அதற்கு முன்பேயே உள்ளே அழைக்கப்படலாம் என்றும் செய்திகள் கசிந்துவந்தன.
எதிர்பார்த்தபடியே சாச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று வந்துள்ளார்.. இது சம்பந்தமான புரோமோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.. அதில், குறுக்கு வழியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் சாச்சனா, அங்கிருந்த பெட்டில் உட்கார்ந்திருப்பதை வி.ஜே.விஷால், அதிர்ச்சியுற்று "ஏய்" என்று அனைவரையும் கத்தி அழைக்கிறார்...
மகிழ்ச்சி: உடனே சக போட்டியாளர்கள் சாச்சனாவை பார்த்ததுமே ஆச்சரியத்துடன் ஓடிவந்து, கட்டியணைத்து பேசுகிறார்கள்.. அப்போது சாச்சனா, "நான் வெளியிலிருந்து எல்லாத்தையும்தான் பார்த்துட்டுதான் இருந்தேன்" என்று சொல்லி வீட்டிலுள்ள எல்லாரிடமும் சொல்கிறார்.
அதேபோல, விஜே விஷால் மீண்டும் ரஞ்சித்தை சீண்டியிருக்கிறார்.. நேற்றைய தினம் போலவே, "ரஞ்சித் சார் லீஸ்ட் கண்டெண்ட் கொடுக்கிறார்" என்று சொல்லவும், இன்றைய ப்ரமோ முடிவடைகிறது!!
பரபரப்புகள்: ஆகமொத்தம், இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் சாச்சனா நுழைந்துள்ளதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.. தற்போது சாச்சனா வெளியிலிருந்து ஆட்டத்தை பார்த்துவிட்டு வந்திருப்பதால், போட்டியாளர்களுக்கு லேசான கலக்கம் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, அவரை வீட்டை விட்டு அனுப்பாமல் இருந்திருந்தால், அவர் பாட்டுக்கு ஒரு ஓரமாக விளையாடி கொண்டிருந்திருப்பார்.. இப்போது வெளியில் அனுப்பி, மீண்டும் உள்ளே வந்துள்ள நிலையில், ரசிகர்களின் அனுதாப ஓட்டையும் பெற்று, அனைவரையும் பேசவைத்து விட்டிருப்பாரோ? என்றெல்லாம் போட்டியாளர்களுக்கு கலக்கம் சூழ்ந்துள்ளதாம்..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications