யாரு நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா?.. 2 மணி நேரத்தில் இப்படி ஒரு மாற்றமா? ரசிகர்கள் "ஸ்டன்"
சென்னை: சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி 2 மணி நேரத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியை யாரும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே கிராமிய பாடல்களை பாடி வருகிறார்கள். இந்த பாடல்தான் இவர்களை வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்தது.
ஆம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு கிராமிய பாடல்களை மட்டுமே பாடினர்.

சினிமா பாடல்கள்
மற்ற போட்டியாளர்கள் சினிமா பாடல்களை பாடினாலும் நாங்கள் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் என அந்த பாடல்களை பாடியே செந்தில் டைட்டில் வின்னராக வென்றார். இதையடுத்து இந்த ஜோடி சார்லின் சாப்ளின் 2 படத்தில் வந்த ஏ ஏ சின்ன மச்சான் பாடல் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தனர்.

புஷ்பா பட பாடல்
இதையடுத்து புஷ்பா படத்தில் வரும் அய்யா சாமி பாடலை ராஜலட்சுமி மட்டும் பாடினார். இவர்கள் இருவருமே கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மேடை கச்சேரிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ் ஒரு படத்தில் இரு ஹீரோக்களுக்கு பாடியுள்ளதாக தெரிகிறது. இருவருமே தனித்தனியாக யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார்கள். இதன் மூலமும் அவர்களுக்கு வருமானம் ஈட்டி வருகிறார்கள். இதில் அவர்களின் பாடல் அப்டேட்டுகள், கச்சேரிகள், கிராமத்தில் நடக்கும் சுவாரஸ்யங்கள், குடும்ப விழாக்கள் குறித்து வீடியோ பதிவிடுவார்கள்.

ராஜலட்சுமி
அந்த வகையில் ராஜலட்சுமி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஒரு பியூட்டி பார்லரில் தனது தலைமுடியை வாஷ் செய்து மசாஜ் செய்து மெனிக்யூர், பெடிக்யூர், பேசியல் உள்ளிட்டவற்றை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பயணம் , கச்சேரி என பிஸியாக இருக்கும் எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த 2 மணி நேர செலவீடு என்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

2 மணி நேரம்
மிகவும் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என ராஜலட்சுமி சொல்கிறார். பின்னர் 2 மணி நேரம் கழித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். மேக்கப்பே இல்லாமல் ஜொலிக்கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செந்திலும் ராஜலட்சுமியும் திருமண நாளை கொண்டாடினர்.

ராஜீ அக்கா
திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை காதல் கணவனா உனை கைவிட மாட்டேன் எனும் பாடல் பின்னணி வீடியோவாக இன்ஸ்டாகிராமில் ராஜலட்சுமி பகிர்ந்துள்ளார். ஒரு வேளை திருமண நாள் கொண்டாட்டத்திற்காக ராஜலட்சுமி பியூட்டி பார்லர் சென்றிருக்கலாம் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் ராஜீ அக்கா அழகா இருக்காங்க என கமென்ட்டுகள் குவிகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications