Franklin OTT: அரபிக் மொழியில் உருவான பிராங்க்ளின் சீரிஸ்! கள்ள நோட்டு மிஷின் படுத்தும்பாடு!
நெட்ஃபிளிக்ஸில் நேற்று வெளியான பிராங்க்ளின் என்ற வெப் தொடரானது, அரபிக் மொழியில் உருவாக்கப்பட்டு, ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாகியுள்ளது. மொத்தம் ஆறு எபிசோடுகளாக அமைந்த இந்த தொடரின் விமர்சனம் தனது உயிரைப் போல் நேசிக்கும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமான ஒரு பாதையைத் (கள்ள நோட்டு அச்சிடுவது) தேர்வு செய்கிறார் இந்த சீரிஸின் நாயகன் ஆதம்.
ஆனால், அவ்வப்போது முயற்சிக்கும் போதும், அவர் உருவாக்கும் $100 டாலர் நோட்டுகள் அசல் பணத்தைப் போல இல்லாமல் தவறுகள் தோன்றுகின்றன. இந்தத் தவறுகள் அவர் உருவாக்கும் பணங்களை சந்தையில் பயன்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

ஆனால் ஒரு கட்டத்தில், அவரது திறமை உச்சத்தை எட்டுகிறது. அவர் உருவாக்கும் கள்ள நோட்டுகள் உண்மையான பணத்தை போலவே காணப்படுகின்றன. பிறகு அதை இன்னொரு குரூப்பிடம் கொண்டு செல்கிறார். ஒரு பக்கம் நாயகியாக வருபவர் , ஆதமின் தந்தை, போலீஸ் ஆபிஸராக வருபவர்.
இப்படி நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால், சிக்கலான கதைக்களம் இல்லாமல், அவர்களின் நடிப்பும் சில நேரங்களில் வீணாக போய்விடுகிறது.
கள்ள நோட்டு அச்சிடும் மிஷின் அதன் தொழில் நுட்பங்களை பற்றிய காட்சி அமைப்பு பெரிதாக வியக்கும் வண்ணம் இல்லை.
அதற்கான டீடெயில்ஸ் விசுவலாக பெரிதாக காட்டவில்லை. எதோ சாதாரண பிரின்டிங் பிரஸ் போல் தான் அந்த இடம் உள்ளது. இது கதைக்கு மிக பெரிய பலவீனமாக உள்ளது. ஒரு ஆறுதலான விஷயம் பின்னணி இசை நம்மை கட்டி போடுகிறது. இத்தொடரின் ஆரம்பம் மற்றும் முடிவுகள் வேகமாக நகர்கின்றன.
ஆனால் நடுக்கட்டங்களில் கதை மெதுவாகவும், ஒரே மாதிரியான காட்சிகள் தொடர்ச்சியாக வருவதால் கணிசமான சோர்வையும் ஏற்படுத்துகின்றன. கடைசி சில காட்சிகள், ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்தது போல், பழைய டெம்ப்ளேட்டில் அமைந்துள்ளன.
தொடரின் ஒவ்வொரு பங்கிலும் ஒரு நவீன மாறுபாடு தேடும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை தரக் கூடும். பிராங்க்ளின் ஒரு திகிலூட்டும் வெப் தொடராக இருந்தாலும், அதற்கான தேவையான ஆழமும், காட்சி அமைப்பும் பெரிதாக இல்லை.
இந்த தொடரில் வழக்கம் போல் சண்டை காட்சிகள் எதுவும் இல்லை. பெரிதான ட்விஸ்ட் எதுவும் இல்லை. முதல் பகுதி, கடைசி பகுதி வேகமாக நகருகிறது. நடுவில் எல்லாம் மெதுவாக தான் கதை நகருகிறது. அதிரடியான திருப்பங்கள், ஸ்மார்ட் ப்ளாட் ட்விஸ்ட்கள், டார்க் சைட்கள் ஆகியவை இல்லாமல், ஒரு மிதமான கதை அம்சங்களுடன் செல்கின்றது. பொறுமையும் நேரமும் இருந்தால் இத்தொடரை நீங்கள் பார்க்கலாம்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications